பிக் பாஸ் தாமரை செல்வி வீட்டில் திடீர் மரணம்..கண்ணீரோடு வெளியிட்ட பதிவு..வருத்தத்தில் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் தாமரை செல்வி பிரபலம் அடைந்திருந்தார்.
அவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய அப்பாவின் மறைவு பற்றி புகைப்படம் வெளியிட்டிருக்கிறார்.
அது குறித்து ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலம் அடைந்திருக்கின்றனர். அந்த வகையில் ஒருவர்தான் தாமரை செல்வி. இவர் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அதற்கு முன்புவரைக்கும் இவர் ஒரு மேடை கலைஞராக கோவில் திருவிழாக்களில் டான்ஸ் ஆடுபவராகத்தான் இருந்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தாமரை செல்வியின் வாழ்க்கையில் அடுத்தடுத்து பல முன்னேற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது தாமரை செல்வி ஆசைப்பட்ட மாதிரி அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும், சின்னத்திரை வாய்ப்புகளும் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றது. விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த பாரதிகண்ணம்மா முதல் சீசனில் கண்ணம்மாவின் தோழியாக நடித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் எனும் சீரியலிலும் தாமரை செல்வி நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் இவருடைய அட்ராசிட்டி நடிப்பை பார்த்து ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக இவர் இருக்கும்போது அடிமட்டத்து வாழ்க்கையில் இருந்த தாமரை செல்வி பலருடைய மனதையும் கவர்ந்திருந்தார்.

பிக் பாஸ்நிகழ்ச்சியில் தன்னுடைய சோக கதையை கூறி பலருடைய அனுதாபத்தை பெற்று விட்ட தாமரை செல்வி அதை தொடர்ந்து பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய கணவரோடு கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் தற்போது அவருடைய அப்பா இறந்து போயிருக்கிறார்.

அதைப்பற்றி தன்னுடைய அப்பாவின் மறைவை குறித்து உருக்கமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தோடு வெளியிட்டு இருந்தார். இது குறித்து அதிகமான ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து தாமரை செல்விக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications