Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுஜாதா சிபிஐ பட்ட பாடு இருக்கே? மகளுக்காக கோயில்ல உருக்குலைந்து.. கர்நாடகா தர்மஸ்தலாவில் யாரந்த பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் கோயில் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் தன்னுடைய கருத்துக்களை கூறியிருக்கிறார்.. என்ஆர்சிபி புள்ளிவிவரப்படி, இந்தியா முழுவதும் 6000 பேர் காணவில்லை என புகார் இருப்பதால், இந்த சம்பவம் குறித்த விசாரணை முழுமையாக நடந்தால்தான், உண்மைத்தன்மை தெரியவரும் என்று தெரிவித்துள்ளார்.

தக்‌ஷிண கன்னடா மாவட்டத்தில் தர்மஸ்தலாவில் புகழ்பெற்ற மஞ்சுநாத ஸ்வாமி கோயிலின் முன்னாள் ஊழியர் தர்மஸ்தலா போலீசில் புகார் அளித்துள்ளார்.

Television Sujatha dharmasthala temple

அதில்,''1998 முதல் 2014ம் ஆண்டு வரை தர்மஸ்தாலாவில் பல பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சந்தேகம் இருக்கிறது. பெண்களின் சடலங்களை ரகசியமாக அகற்றுமாறு கோயில் மேற்பார்வையாளர்கள் என்னை வற்புறுத்தினர்.

தர்மஸ்தலா - சடலங்கள்

உடல்களை நேத்ராவதி ஆற்றின் கரை அருகே புதைத்தேன். பலியானவர்களில் சிலர் மைனர் பெண்கள். பலர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டு பள்ளி சீருடை, பையுடன் புதைக்கப்பட்டனர். சிலர் உடல்களை தகனமும் செய்ய வற்புறுத்தப்பட்டேன். முழு விவரங்களை நான் வெளியிட தயாராக இருக்கிறேன். ஆனால் எனது குடும்பத்துக்கு பாதுகாப்பு தேவை" என்றெல்லாம் புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில், Retroluxe என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன்,"புகாரில் 100 சடலங்கள் என்கிறார்.. ஆனால், இதுவே உண்மையா? என்று தெரியவில்லை.. இது தொடர்பான விசாரணை முழுமைப்படுத்தப்பட வேண்டும்..

வெளிநாட்டினர் எத்தனை பேர்

வெளிநாடுகளிலிருந்தும் அதிகம் பேர் வந்துள்ளனர்.. சடலங்களில் எத்தனை வெளிநாட்டு சடலம் என்பதை பார்க்க வேண்டும்.. என்ஆர்சிபி புள்ளிவிவரப்படி, இந்தியா முழுவதும் 6000 பேர் காணவில்லை என புகார் உள்ளதாகவும் சொல்கிறார்கள்.. 1995-2014வரை துப்புரவு பணியாளராக இவர் அங்கேதான் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

அதனால் இவரிடம்தான் அனைத்து சடலங்களையும் கொண்டு வந்து புதைக்க, எரிக்கவும் தந்திருக்கிறார்கள்.. பின்னாடியே ஓடிக்கொண்டிருந்த நேத்ரா நதியிலும் சடலங்களை அள்ளிப் போட்டுள்ளார்.. பள்ளி பிள்ளைகளின் ஸ்கூல்பையுடனேயே புதைத்திருக்கிறார்.. எங்க வீட்டு பெண்களையே இப்படி செய்துவிட்டதால், கோவிலை விட்டு வெளியேறி, உயிர் பயத்துக்காக பல இடங்களில் ஒளிந்திருந்தேன் என்கிறார்..

சித்தராமையா புலனாய்வு குழு

இந்த விஷயத்தை வெளிக்கொண்டு வந்த யூடியூபருக்குதான் நன்றி சொல்லணும்..
அதற்கு பிறகு வெளியே இந்த விஷயம் தெரியவந்தது.. இது தொடர்பாக சித்தராமையா சிறப்பு புலனாய்வு குழு ஒன்றையும் அமைத்துள்ளார்..

பிணங்களை நான்தான் புதைத்தேன்.. தோண்ட தோண்ட பிணங்கள் இருக்கும்.. எல்லாமே பாலியல் கொடுமை செய்யப்பட்ட பிணங்கள்தான் என்று சம்பந்தப்பட்டவர் கோர்ட்டில் வாக்குமூலம் தந்துள்ளார். சட்டவிதிகளுக்குட்பட்டு, எலும்பு கூடுகளை கைப்பற்றி, ஆய்வுக்கு அனுப்ப போவதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

சிபிஐ ஸ்டெனோ சுஜாதா

சுஜாதா என்ற 60 வயது கொல்கத்தா பெண், பெங்களூரில் சிபிஐ-ல் ஸ்டெனோவாக இருந்துள்ளார்.. 2003-ல் இவருடைய மகள் அனன்யா காணாமல் போயிருக்கிறார்.. கடைசியாக இந்த கோயிலுக்குதான் மகள் வந்ததாக சொல்லி, சுற்றுவட்டாரத்திலும் விசாரித்துள்ளார்.. பிறகு பெல்தான்டி போலீஸ் ஸ்டேஷனில் சென்று புகார் தந்துள்ளார்..

ஆனால் அங்கிருந்த போலீஸ்காரர்கள், உங்க பொண்ணு யாருடனாவது ஓடிப்போயிருக்கும் என்று சொல்லி அந்த சுஜாதாவின் புகாரை வாங்காமல் விரட்டி அனுப்பியிருக்கிறார்கள்.. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல், திறப்புசாலைக்கு வந்து, தன்னுடைய மகளின் போட்டோவை காட்டி விசாரித்துள்ளார்..

கோமாவுக்கு போன சுஜாதா

அங்கிருந்தவர்கள் இருந்தவர்கள், "உங்க பொண்ணு, கோயிலின் முக்கிய நபருடன் உள்ளே சென்றார் அதற்கு மேல் எங்களிடம் வேறெதுவும் கேட்காதீர்கள்" என்றார்களாம்.. இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த சுஜாதா, மகளை கண்டுபிடிப்பதற்காகவே, தர்மசாலாவில் நுழைந்து கடை வைக்க முயன்றார்.

ஆனால், இதுதெரிந்த அங்கிருந்த ஊழியர்கள் சுஜாதாவை இருட்டு அறையில் தள்ளி அடித்து மண்டையை உடைத்துவிட்டார்கள்.. இதற்கு பிறகு சுஜாதா கண்விழித்து பார்க்கும்போது, 3 வருடம் ஓடிவிட்டிருந்தது.. அதுவரை கோமாவில் இருந்துள்ளார் சுஜாதா... என் மகள் எலும்பையாவது கொடுங்க என்றுசுஜாதா கண்ணீருடன் கேட்டு கொண்டிருக்கிறார்.. எனினும், இப்போது சுஜாதாவிடம் நடந்தது என்ன என்று காவல்துறை விசாரிக்க வேண்டும் இல்லையா?

சௌஜன்யா விவகாரம் என்னாயிற்று

இதுபோக செளஜன்யா என்ற மாணவி விவகாரம் சூடுபிடிக்கவும், உடனே justice for jowjanya என்று ஹேடேக் போட்டார்கள்.. ஆனால், ஹேக்டேக் பதிவிட்டவர்களை எல்லாம் கைது செய்திருந்தனர்.. அப்படியானால், இந்த அக்கிரமம் எத்தனை காலம் நடந்து வருகிறது? இதெல்லாம் அரசுக்கும், காவல்துறைக்கும் தெரியாமல் போய்விட்டதா? தெரியவில்லை.. இதுகுறித்த விசாரணையும் நடக்கிறது..

ஆனால் ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பார்களா? தெரியவில்லை.. ஏனென்றால், சடலங்கள் அதிகமாக கிடைத்தாலும், அதில் ஆண் சடலங்களும் உள்ளதாம்..இதில் பாலியல் மட்டுமல்லாமல், நரபலி செய்திருக்கவும் நிறைய சாத்தியக்கூறுகளும் உள்ளன..

பாலியல் சம்பவம் மட்டுமே நடந்திருக்காது

சடலத்தை புதைக்க ஒருநாள் ஒரு நபருக்கு மட்டுமே குழிதோண்டியிருக்க முடியும்.. அந்தவகையில், குவியல் குவியலாக பிணத்தை எப்படி எரித்தார்? புதைத்தார்? சடலம் கிடைத்ததும் குழி தோண்டினாரா? அல்லது குழியை தோண்ட சொல்லவிட்டு, அதற்கு பிறகு யாராவது உயிர் பிரிந்ததா? என்பதையும் விசாரிக்கணும்.. 6000 பேர் இந்தியாவில் காணாமல் போயிருப்பதால், அதுகுறித்த விசாரணையை முழுமையாக விசாரித்தால்தான் உண்மைத்தன்மை வெளியே வரும்" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+