Chadralekha Serial: இந்த சீரியலில் நடிச்சவங்களுக்கு 5 வயசு கூடிப் போச்சு!
சென்னை: சன் டிவியின் சந்திரலேகா சீரியலில் நடிச்ச நட்சத்திரங்கள் எல்லாருக்கும் இப்போ 5 வயசு கூடிப் போயிருக்கு. சீரியல் ஆரம்பிச்ச வருஷம் 2014.
சன் டிவியில் கடந்த 5 வருடங்களாக சந்திரலேகா சீரியல் ஒளிபரப்பாகி வருது. ஏற்கனவே கதை இழு இழு என்று இழுவையில் சென்று கொண்டு இருக்க. இப்போது லாக்டவுன் நேரத்தில் இந்த சீரியல் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து மறு ஒளிபரப்பாகி வருது.
சந்திரலேகா சீரியலில் நடிக்க வந்த எல்லா ஸ்டார்ஸுக்கும் 5 வயசு கூடிப் போவது விஷயமல்ல, கதாநாயகிகள் வயது ஒரே சீரியலில் 5 வயது கூடிப் போவதுதான் இங்கே விஷயம்.

சித்தி மெட்டி ஒலி
சீரியல்கள் மறு ஒளிபரப்பு செய்வது என்பதை சன் டிவி தொடங்கி இருந்தாலும், 20 வருடங்களுக்கு முன் 15 வருடங்களுக்கு முன் என்று ஒளிபரப்பான சீரியல்கள் மறு ஒளிபரப்பு என்றால் கூட பொறுமையாக உட்கார்ந்து பார்ப்பார்கள்... அப்படித்தான் மெட்டிஒலி, சித்தி, தங்கம் சீரியல்கள் இருக்கின்றன.

சந்திரலேகா 2014
சன் டிவியில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சந்திரலேகா சீரியலை சரிகம தயாரிப்பு நிறுவனம் தயாரித்து அது கடந்த 2014ம் ஆண்டு முதல் இப்போது வரை ஒளிபரப்பாகி வருகிறது. என்ன சாதனை செய்ய வேண்டும் என்று சந்திரலேகா சீரியலை கடந்த 5 வருடமாக இழுத்தடுத்து ஒளிபரப்பு செய்து வருகிறார்களோ தெரியவில்லை.

ஏகப்பட்ட திருப்பங்கள்
கதையில் ஏகப்பட்ட திருப்பங்கள்.. புது புது கதாபாத்திரங்கள்.. என்று கொஞ்சமும் லாஜிக் இல்லாத கதையம்சத்தோடு சீரியல் பயணித்து வருகிறது. ஆரம்பத்தில் எந்த புள்ளியில் கதை ஆரம்பித்ததோ அந்த புள்ளியை விட்டு வெகுதூரம் விலகிச் சென்றுவிட்ட சந்திரலேகா சீரியலை மறுபடியும் முதலில் இருந்தா..அட போங்கடா என்று மக்களை சலிப்படைய வைத்து உள்ளது.

நாகஸ்ரீ ஸ்வப்னா
இந்த சீரியலில் சந்திராவாக நடித்து இருக்கும் ஸ்வப்னா, லேகாவாக நடித்து இருக்கும் நாகஸ்ரீ இருவருமே தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை. ஸ்வப்னா ராஜஸ்தான் பொண்ணு.. நாகஸ்ரீ பெங்களூரு பொண்ணு. நடிக்க வந்த புதிதில் சின்ன பெண்களாக இருந்த இவர்கள் இருவரும் தோற்றத்தில் சீரியலிலேயே பெரிய பெண்களாகக் கூட ஆகிவிட்டார்கள். சீரியல் இன்னும் முடிந்தபாடில்லை... அதிலும் இப்போது மறு ஒளிபரப்பு வேறு!
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications