நயன்தாரா ஏன் ஸ்டுடியோ டைப்பில் வீடு கட்டியிருக்காரு? போயஸ் கார்டனில் கெத்து.. இதுவா காரணம்: பிரபலம்
சென்னை: நயன்தாரா போயஸ் கார்டனில் 7,000 சதுர அடியில் சுமார் ரூ.100 கோடியில், தன்னுடைய வீட்டை கட்டி முடித்துவிட்டார்.. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த வீட்டை பெரிய தொகை தந்து விலைக்கு வாங்கி, இடித்து தனது கனவுபடி 3 தளங்களில் கட்டி முடித்துள்ளார். ஆனால், ஸ்டுடியோ வடிவிலேயே இந்த வீட்டை கட்டியிருப்பதுதான், பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தன்னுடைய கருத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Realone யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "பிரபலமாக செயல்பட்ட ஏவிஎம் உட்பட பல திரைப்பட ஸ்டுடியோக்கள் இன்று மாறிவிட்டன..

ஸ்டுடியோக்களில் பல பகுதிகள் அப்பார்ட்மென்ட்களாக மாறிவிட்டன.. ஏவிம்மில் பிரத்யேகமாக மியூசியம் வைத்திருக்கிறார்கள்.. அங்கே தங்களது படங்களில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை வைத்திருக்கிறார்கள்.
சிவாஜி கணேசன் வீடு
சிவாஜி கணேசன் வீடும் ஷூட்டிங்குக்காக விடப்பட்டது.. இதற்கெல்லாம் காரணம், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கம்தான்.. ஒருவேளை, நயன்தாரா தன்னுடைய வீட்டை வாடகைக்கு விடுவதாகவும் இருக்கலாம்.. சென்னையில் எத்தனையோ ஷூட்டிங் பங்களாக்கள் உள்ளன.. அதனால் நயன்தாராவும் பண விஷயத்தில் உஷாராக இருக்கலாம்.. 100 கோடியில் வீடு கட்டி இருப்பதால், வாடகைக்கு விடும் ஐடியா இருக்கலாம்.
எத்தனையோ நடிகைகள், வருமானமில்லாமல் வறுமையில் அழிந்து போய்விட்டார்கள்.. பலர் பணத்தை இழந்து அவதிக்கு ஆளாகிவிடுகிறார்கள்.. அதுபோல இல்லாமல் நயன்தராரா எச்சரிக்கையாக இருப்பதாகவே நினைக்கிறேன்.
12 கோடி ரூபாய் சம்பளம்
நயன்தாராவுக்கு 12 கோடியில் சம்பளம் என்கிறார்கள்.. அதனால்கூட 100 கோடியில் வீடு கட்டியிருக்கலாம். ஆனாலும் என்னுடைய பார்வையில் இது ஆடம்பரம்தான்.. தனுஷ் 150 கோடியில் பங்களா கட்டியிருக்கிறார்.. வசதி வாய்ப்புள்ளவர்கள் இப்படி கட்டிக் கொள்கிறார்கள்..
போயஸ் கார்டன் என்பது, ஜெயலலிதா வீடு கட்டியபோதுதான் ஃபேமஸ் ஆனது.. ராமாவரம் தோட்டம், சிவாஜி தோட்டம், எம்ஆர் ராதா தோட்டம் என்பதுபோலத்தான் போயஸ் தோட்டமும்.. அன்றைய காலத்தில் "கார்டன்" என்ற பெயர் பிரபலமானது என்பதால், அனைத்து பிரபலங்களும், தங்களது பங்களாக்களை தோட்டம் அல்லது கார்டன் என்றே வைத்து கொண்டனர்.
யாராக இருந்தாலும் ஆறடிதான்
ஆனால், யார், எத்தனை ஆடம்பரமாக கட்டிக் கொண்டாலும் ஆறடிதான் எல்லாருக்கும். பணம் எனக்கு பிடிக்கவில்லை என்று ரஜினி இன்று சொல்கிறார்.. ஆனால், நன்றாக சம்பாதித்துவிட்டு சொல்கிறார்.. எனினும், அனைவருமே உழைத்துதான் சம்பாதித்து வீடு கட்டியிருக்கிறார்கள்.. எனினும், வாழக்கூடிய அளவுக்கு 10 கோடியில் வீடு கட்டிக் கொள்ளலாம். 100 கோடிக்கு வீடு என்பது, யாருக்காக இருந்தாலும், அது அவசியமில்லாதது என்பதுதான் என்னுடைய கருத்து.
நயன்தாரா தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலம் கருதியும் இந்த வீட்டை கட்டியிருக்கலாம். ஸ்டுடியோ வடிவத்தில் உள்ளதால், வியாபார நோக்கத்தில் இருக்கலாம் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications