சின்னையா... சம்பா இனி முடியாது.. அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு காமிக்கலைங்க!
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் ஒவ்வொரு எபிஸோடிலும் சம்பாவுக்கும், சின்னையாவுக்கும் ஒரு ரொமான்ஸ் சீன் இருந்தே தீரும்.
வீட்டு பொறுப்பை சின்ன மருமகள் சம்பாவிடம் குடுக்க வேண்டும் என்பது மாமியாரின் ஆசை. அதுக்கு மத்த மருமகள்கள் ரெண்டு பேரும் சம்மதிக்கலை. முதல் மருமகள் ஒப்புக்கொண்டாலும், என்னிடம் கலந்து ஆலோசிக்காமல் எப்படி அத்தே நீங்க இந்த முடிவை எடுக்கலாம்னு கோச்சுக்கறா.
கடைசியில் போட்டி வைத்து யார் சிறந்த மருமகள்னு தேர்வு செய்து அவங்ககிட்ட வீட்டு பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்யறாங்க.

தேவையா சம்பா
ஏன் சம்பா.. யாருக்கு வீட்டு பொறுப்பை குடுப்பதுன்ற போட்டி நம்ம வீட்டுக்கு தேவையா சம்பா...அண்ணிக்கு உன்னை பிடிக்கும்தானே.. இப்போ எதுக்கு அந்த பொறுப்பை உனக்கு கொடுக்கறதுல அவங்களுக்கு இஷ்டம் இல்லைன்னு சின்னையா கேட்கறான்.

புடிக்கும் சின்னையா
அக்காவுக்கு என்னை புடிக்கும் சின்னையா... ஆனா அவங்க இந்த வீட்டு மூத்த மருமக்களாச்சே... அவங்ககிட்ட கேட்கலைன்னுதான் அக்காவுக்கு வருத்தம்.. என்னை பொறுத்த வரைக்கும் போட்டி தேவையில்லைதான் சின்னையா.

நீ விட்டு குடுப்பேதானே
ஏன் சம்பா, இந்த போட்டி எல்லாம் வேணாம்னு நீயா இருந்தா விட்டு குடுப்பேதானேன்னு சின்னையா கேட்கறான். ஆமா.. சின்னையா இதுல என்ன சந்தேகம்னு அவள் கேட்க, அவள் அருகில் வந்து அவன் உட்கார்றான்

கிட்டே
இப்போ எதுக்கு சின்னையா கிட்ட வர்றீங்கன்னு சம்பா கேட்கறா.. இல்லை நீ நம்ம வீட்டுல யார் எது கேட்டாலும் விட்டுத் தருவே.. இப்போ கூட பாரு புருஷன் ஆசையா நம்மகிட்ட எதுக்கு வர்றான்னு தெரிஞ்சுக்கிட்டு, எத்தனை வேலைகள் இருந்தாலும், அவன் ஆசையை நிறைவேத்தி வைக்க போறே இல்லேன்னு சொல்றான்.

இனி முடியாது சம்பா
வந்து சின்னையா... வந்து சின்னையான்னு இவ சொல்ல சொல்ல அவன் அவளருகில் நெருங்கி வர்றான். மீண்டும் அவ வந்து சின்னையான்னு சொல்ல, இனிமே கிட்ட வர இடமில்லை சம்பான்னு கட்டிப் புடிச்சுக்கறான்.அவளும் கட்டிக்கறா.
அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு காமிக்கலைங்க.. வீட்டுல மூத்த மகனும், மருமகளும் பேசிக்கற சீனுக்கு வந்துட்டாங்க!.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications