அது தான் ராதிகாவின் சக்ஸஸ்.. கணவரின் தங்கமான மனசு.. ராதிகா சரத்குமார் படாத கஷ்டமில்லை: பிரபலம் பளிச்
சென்னை: "என் மிகப்பெரிய தூண் தங்க இதயம் கொண்ட என் சரத்குமார் தான். அவர் என்னை ஒரு குழந்தை போல கவனித்துக் கொண்டார். இந்த 2 மாதங்களாக அவருடைய வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, என்னை நன்றாக கவனித்து கொண்டார்" என்று மருத்துவமனையில் இருக்கும் போட்டோவை ராதிகா பகிர்ந்து இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ராதிகாவுக்கு என்னாச்சு? என்று பதறிப்போய்விட்டார்கள். இந்நிலையில், இதுகுறித்து தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் சுபைர்.
Media Cavin சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர், "பாரதிராஜாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ராதிகா, பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்து, தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டவர்..

இதே ராதிகாவுடன் நடித்த பல நடிகைகள் அன்று காணாமலேயே போய்விட்டார்கள். ஆனால், ராதிகா சினிமா, சொந்த வாழ்க்கையில் வந்த சிக்கல்கள் அனைத்தையும் எதிர்கொண்டு மேலே வந்தவர். ஒரு பெண்ணாக, துணிச்சலுடன் செய்த பல காரியங்களால்தான, இந்த உச்சத்தை அடைந்திருக்கிறார். மன தைரியம் உள்ளவர்.. ராடன் என்ற பெரிய நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதில் பல பேருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கி வருகிறார்.
விட்டுக் கொடுக்காத தம்பதி
சரத்குமார் - ராதிகா தம்பதியை பொறுத்தவரை, இந்த 25 ஆண்டுகளில் ஒருவரையொருவர் பொதுவெளியில் விட்டுக் கொடுத்ததில்லை.. கணவனை விட்டுக்கொடுக்காத மனைவியாகவே ராதிகா இருந்து வருகிறார்.. இருவருமே ஆதர்ச தம்பதிகளாக இருக்கிறார்கள்...
சமீபகாலமாகவே ராதிகாவுக்கு மூட்டு வலி இருந்து வந்துள்ளது.. அதனால் வலிக்காக ஸ்பிரே அடித்து வந்துள்ளார்.. முடிந்தவரை ஆபரேஷன் செய்யாமலேயே அப்படியே குணப்படுத்திவிடலாம் என்று நினைத்திருக்கிறார். ஆனால் வலி அதிகமாகிவிட்டது. அதனால் ஆபரேஷன் செய்யும் நிலைமைக்கு வந்துவிட்டது. இதனால் 2 மாத காலமாக, சரத்குமார் எங்கேயுமே செல்லாமல் வீட்டிலேயே தன்னை அருகிலிருந்து கவனித்து கொண்டதாக ராதிகா ட்வீட் போட்டிருந்தார்.
வயது மூப்பு - ரெஸ்ட்டில் ராதிகா
அப்போதுதான் ராதிகாவுக்கு ஆபரேஷன் நடந்த விஷயமே வெளியே தெரியவந்தது. உடனே ராதிகாவுக்கு என்னாச்சு என்று சோஷியல் மீடியாவில் கேள்வி எழுப்ப துவங்கிவிட்டார்கள்.. வயது மூப்பு காரணமாக இப்படி அனைவருக்கும் வருவது இயல்புதான். சர்ஜரி நல்லபடியாக முடிந்துள்ளது.. தற்போது ராதிகா ரெஸ்ட்டிலில் இருக்கிறார்..
சரத்குமார் என்னை குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டார் என்றும், தங்க இதயத்துக்கு சொந்தக்காரர் என்றும் பாராட்டி பேசியிருக்கிறார். எப்போதுமே ஒருவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம், அவர்களது வயதான காலத்தில்தான் தெரியும் என்பார்கள்.. அந்தவகையில், ராதிகா, சரத்குமார் இருவருமே திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, பல்வேறு பிரச்சனைகளை அவரவர் வாழ்க்கையில் சந்தித்தவர்கள்..
முதிர்ச்சி - புரிதல் - ஒற்றுமை -
அதிலும் ராதிகாவுக்கு திருமண சிக்கல், பொருளாதார சிக்கல் போன்றவை இருந்தது. அதுபோலவே சரத்குமாருக்கும் பிரச்சனைகள் இருந்தன. அந்தவகையில், இருவருமே வாழ்க்கையில் அடிபட்டவர்கள். அப்போதுதான் ஒருவரையொருவர் சந்தித்து கொள்கிறார்கள்.. முதிர்ச்சி பக்குவத்தில்தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அந்த புரிதல்தான், இன்னமும் இவர்களை ஒற்றுமையுடன் வைத்திருப்பதாக தெரிகிறது" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
