Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மணிவண்ணன்" அப்பா செருப்பு என்கிட்ட இருக்கு, உருட்டு உருட்டு".. அன்று சீமான் ஒரே போடு.. இனிய நினைவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிவண்ணனின் நினைவுகளை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்க வருகிறார்கள்.. அந்தவகையில், சீமானின் வீடியோ ஒன்றும் சோஷியல் மீடியாவில் ரவுண்டு அடித்து கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம் என 2 துறைகளிலும் சாதித்தவர்களில் மிக முக்கியமானவர் மணிவண்ணன். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர்... 50 படங்களுக்கு மேல் இயக்கியவர்... அடுத்த வாரம் மணிவண்ணனின் நினைவுநாள் வருகிறது. இதையடுத்து, மணிவண்ணன் குறித்த செய்திகளை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.

Cinema director manivannan and ntk seeman has praised his guru manivannan

அந்தவகையில் நாம் தமிழர் கட்சியின் சீமான், மணிவண்ணன் குறித்து பேசிய நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.

மணிவண்ணன்: சில மாதங்களுக்கு முன்பு, நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்றது.. கொட்டும் மழையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது இணையத்தில் பெரும் வைரலானது.
அந்த பேச்சைதான் இப்போது சீமானின் தம்பிகள் இணையத்தில் மீண்டும் வைரலாக்கி வருகிறார்கள். அத்துடன் மணிவண்ணனின் ரசிகர்களும் இந்த வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்கள்.

அப்போது சீமான் பேசும்போது, "தந்தை பெரியார் சொல்கிறார், "ஒரு வகுப்பினன், தன் வகுப்புக்குரிய இட வாய்ப்பை, வேலைவாய்ப்பை பெறவில்லையானால், அவன் மானமிழந்தவன் ஆவான்" என்கிறார்.. இப்ப நான் மானம் இழந்தவனாக இருக்கவா? மானம் உள்ளனவாக போராடவா?

Cinema director manivannan and ntk seeman has praised his guru manivannan

உருட்டு உருட்டு: முதலில் சாதி வாரியாக கணக்கெடுங்கள்.. படையாச்சி எவ்வளவு? வன்னியர்கள் எவ்வளவு? என்றெல்லாம் எண்ணுங்க.. அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப பகிர்ந்து கொடுங்கள்.. 100 லட்டுதான் இருக்கா? போதவில்லையானால், இன்னும் 10 லட்டு உருட்டுங்கள்.. என்ன கெட்டுப்போச்சு இப்போ? உருட்ட தெரியலயா? மாவு இப்படி கொடு, நாங்க உருட்டறோம்..

உனக்கு என்றால் மட்டும், உருட்டி உருட்டி சாப்பிட்டிப்பியா? நாங்க ஒதுக்கீடு கேட்டால் விரட்டி விரட்டி அடிப்பியா? எங்களுக்கு பங்கீடு கொடு, அவங்களுக்கு ஒதுக்கீடு கொடு.. மகாராஷ்ராவில் 25 லட்சம் என்றார்கள்.. அதில் எங்களுக்கென்ன லாபம் இருக்கு? கர்நாடகாவில் ஒன்னேகால் கோடி என்றார்கள்.. எங்களுக்கு என்ன இருக்கு?
கணக்கெடுப்பு: தேவேந்திரர் எவ்வளவுன்னு எண்ணுங்க.. முதல்ல அவங்களை பட்டியல் பிரிவில் இருந்து எடுங்க.. எடு முதல்ல.. இனிமேல் யாரையாவது தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொன்னால், என் மணிவண்ணன் அப்பா, செருப்பு வெச்சிட்டு போயிருக்கார்.. என்கிட்ட தான் அந்த செருப்பு பாதுகாப்பாய் இன்னமும் இருக்கு.. ஜாக்கிரதை.. தமிழன் என்றுமே பெருமைக்குரியன்" என்று பேசியிருந்தார்.. இந்த வீடியோதான் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.

வழக்கமாக, சீமான் எங்கு, எதைப்பற்றி பேசினாலும், இயக்குனர் மணிவண்ணனை பற்றி குறிப்பிடாமல் இருக்க மாட்டார்.. ஆரம்பத்தில், டைரக்டர்கள் பாரதிராஜா, மணிவண்ணன் ஆகியோரின் படங்களை பார்த்துவிட்டு டைரக்டராக வேண்டும் என்ற கனவில் அவர்களிடம் துணை இயக்குநராக பணியாற்றிவர் சீமான். அவரது இயக்கத்திற்கு, ஆரம்பத்தில் நடிகர்கள் சத்யராஜ், இயக்குநர்கள் மணிவண்ணன் மற்றும் ஆர்.கே.செல்வமணி தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர்.

சமீபத்தில் செய்தியாளர்கள் சீமானிடம் "ஏன் முன்னாடி போல, இப்போது யாரும் திரைப்பிரபலங்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை" என்று கேட்டார்கள்..

தொந்தரவு: அதற்கு சீமான், "மணிவண்ணன் அப்பா இறக்கும் வரை என்னுடைய இயக்கத்தில் இருந்தார்.. ஆர்.கே.செல்வமணி அண்ணன் என்னுடைய சீனியராக மணிவண்ணன் அப்பாவிடம் வேலை பார்த்தவர்... அன்பின் காரணமாக அவ்வப்போது எனக்காக வந்து பேசுவார். இப்போது கூப்பிட்டாலும் வருவார். ஆனால் நான்தான் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று யாரையும் அழைப்பதில்லை..

Cinema director manivannan and ntk seeman has praised his guru manivannan

மணிவண்ணன் அப்பா, நான் அவரிடம் வேலை பார்த்தவன் என்பதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு என்னுடன் இருந்தார். அண்ணன் சத்யராஜ் அவர்களை பொறுத்தவரை அவர் பெரியார் கருத்தியலில் ஈடுபாடு கொண்டவர். நான் அந்தப் பாதையில் பயணம் செய்தவன்தான். ஆனால் இப்போது என் பாதை மாறிவிட்டது" என்று கூறியிருந்தார்..

மணிவண்ணன்: மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்திருந்த அமைதிப்படை படத்தில், துணை இயக்குநராக சீமான் பணியாற்றியிருக்கிறார்.. அதற்கு பிறகு சத்யராஜை வைத்து வீரநடை என்கிற படத்தையும் இயக்கியிருக்கிறார்..

கடந்த வாரம்கூட, இசைஞானி இளையராஜா பிறந்தநாள் விழாவில், அவரை வாழ்த்தி பேசும்போதும் மணிவண்ணனை நினைவுகூர்ந்திருந்தார் சீமான்.. அமைதிப்படை படத்தில் மணிவண்ணனுடன் இணைந்து இளையராஜாவின் கம்போசிங்கில் இடம்பெற்றது குறித்தும் சிலாகித்து கூறியிருந்தார்.. இந்நிலையில், சீமானின் மணிவண்ணன் குறித்த பேச்சுக்கள்தான், நாம் தமிழர் தொண்டர்களையும் தாண்டி, தமிழக மணிவண்ணனின் ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது.

இதனிடையே இன்னொரு வீடியோவும் வைரலாகிறது.. பிரபல நடிகர் சந்திரசேகர் அந்த பேட்டியில் சொல்கிறார், "மணிவண்ணனின் உதவியாளராக சீமான் இருந்தார். நான் அப்போதே திமுகவில் இருந்தேன். நாங்கள் சந்திக்கும் போது, "தலைவர் என்ன சொன்னாரு சந்த்ரு" என்று என்னிடம் மணிவண்ணன் கேட்பார். ஒருநாள் காலை டிபன் இல்லாமல் போனது. என்னையும், சீமானையும் அழைத்த மணிவண்ணன், "கேழ்வரகு கூழ் தயாராக உள்ளது, அதை சாப்பிடலாம்" என்றார்.

மணிவண்ணன்: உடனே சீமான், "சார்... இந்த கேழ்வரகு கூழ் பிடிக்காமல் தான் ஊரை விட்டு ஓடிவந்தேன், இங்கே வந்தும் அதே கூழ் கொடுக்குறீங்க" என்று கேட்டார். இந்த மாதிரி நிறைய எதார்த்த நிகழ்வுகள் மணிவண்ணன் ஷூட்டிங்கில் நடக்கும் என்று சிலாகித்து பேசுகிறார் சந்திரசேகர். ஆக மொத்தம் மணிவண்ணின் நினைவுகள் இப்போதே இணையத்தில் வட்டமடிக்க துவங்கிவிட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+