குரேஷியின் கேவலமான காமெடி? மீடியாவில் கதறுகிறாரே ஜாய்.. கடப்பாரையையே விழுங்கின மாதம்பட்டி ரங்கராஜ்
சென்னை: ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில் மாதம்பட்டி ரங்கராஜ் பேசியது மாதிரியே பேசி குரேஷியும் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.. மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஆதரவாக ஓய் பொண்டாட்டி வீடியோ வெளியிட்டார் என்று பேச்சு கிளம்பியது. ஜாய் சீரியஸாக வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், அதனை குரேஷி காமெடியாக்கியது, சோஷியல் மீடியாவில் சலசலப்பை உண்டுபண்ணியது.. இந்நிலையில் குரேஷியின் பேச்சுக்கு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்ததாக கூறப்படும் ஜாய், வயிற்றிலுள்ள தன்னுடைய குழந்தைக்கு என்ன பதில் என்று கேட்டுள்ளார்..

தன் குழந்தைக்கு இனிஷியல் கேட்பதாக இருந்தாலும்சரி, மீடியாவில் இப்படி உட்கார்ந்து பேசுவதே அவசியமற்றது.. அதை மாதம்பட்டி ரங்கராஜிடம் சென்றுதான் நேரடியாக கேட்க வேண்டும்.. அவர் வீட்டு வாசற்படியில் தர்ணா நடத்தலாம்.. அல்லது நீதிமன்றத்திடம் சென்று உரிமை கோரலாம்.. அதைவிட்டுவிட்டு மீடியா முன்பு உட்கார்ந்து பேசுவதால் நியாயம் கிடைக்காது.
மாதம்பட்டி ரங்கராஜ்
வேண்டுமானால், இப்படி மீடியாவில் பேசுவதால் மாதம்பட்டி ரங்கராஜை அசிங்கப்படுத்தலாம். தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றி அசிங்கப்படுத்திவிட்டார் என்று ஜாய் சொல்வதற்கும், மீடியாவில் உட்கார்ந்து மாதம்பட்டி மீது ஜாய் குற்றஞ்சாட்டுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
ஜாய் என்பவர் பாதிக்கப்பட்ட பெண், நீதி முன்போ அல்லது தனக்கு பாதிப்பை ஏற்படுத்தியவரிடமோ தான் கேட்க வேண்டும்.. அதுவும் இல்லாமல், மாதம்பட்டி குறித்து ஜாய் பேச பேச, எந்த ரியாக்ஷனும் எதிர்தரப்பிலிருந்து வெளிவரவில்லை.. இவராகவே புகார்களை சொல்லி வருகிறார்.
நீதியரசர்களா?
அவர்களுக்குள் யார் மீது தவறு என்று சொல்ல நாம் யார்? மீடியாவில் பேசுபவர்கள் எல்லாம் நீதியரசர்களா? ஜாய் சொல்லும் குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா? என்பதை சொல்லும் இடத்தில் மாதம்பட்டி உள்ளார்.. ஆனால் எந்தவிதமான பதிலும் இதுவரை அவரிடமிருந்து வரவில்லை..
கடப்பாரையை விழுங்கி
மீடியாவில் இவ்வளவு தூரம் ஜாய், விஷயத்தை கொண்டு சென்று புகார்களை சொல்லியும், மாதம்பட்டி அவைகளை மறுக்காமல் உள்ளார்.. அதாவது கடப்பாரையை விழுங்குவதுபோல கமுக்கமாக இருக்கிறார்.. இதிலிருந்தே இந்த விஷயத்தில் ஏதோ உள்ளது என்பது மட்டும் தெளிவாகவே தெரிகிறது.
மனைவியை தாண்டி அடுத்த பெண்ணிடம் செல்பவர்களுக்கு என்ன பெயர்?மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி, 2 குழந்தைகளுக்கு தாயானவர், மாதம்பட்டி பெற்றோருக்கு மருமகளானவர், இதுவரை ஒருவார்த்தைகூட இதை பற்றி பேசவேயில்லை.. 2 பிள்ளைகளுக்காக தனக்கு வந்துள்ள நெருக்கடியை, கடந்து செல்கிறார் ஸ்ருதி.. இது மாதம்பட்டி போன்றோருக்கு மிகவும் வசதியாகிவிடுகிறது..
மாதம்பட்டிக்கு கடன்
மாதம்பட்டி ரங்கராஜூக்கு கடன் இருப்பதாக ஜாய், அந்த நேர்காணலில் சொல்கிறார்.. தன்னை மனைவி என்று சொல்லிக்கொள்ளும் ஜாய், கணவரின் கடனை அடைக்கலாமே? அந்த நேர்காணலை செய்தவர் நேர்மையான முறையில் நேர்காணலை செய்யவில்லை.. பொதுவாக தொழிலதிபர்கள் என்றாலே கடன் இருக்கும்.. 1000 கோடி சொத்துக்கள் இருந்தாலே 100 கோடி கடனும் இருக்கத்தான் செய்யும்.. எனவே மனைவி என்பதில் உரிமை இருக்கிறது என்றால், கணவனின் கடனையும் மனைவி அடைக்கலாம்.
குடும்பத்தில் வீசும் சூறாவளி
மாதம்பட்டி ரங்கராஜால் பாதிக்கப்பட்ட ஜாய், எப்படியெல்லாமோ கதறுகிறார்.. தாலிகட்டிய இன்னொரு பெண் மனஉளைச்சலில் இருக்கிறார்.. ஆனால், குரேஷி கிண்டலடிக்கிறார்.. பொறுப்புணர்ச்சி இருந்தால், இவ்வளவு சீரியஸ் விஷயத்துக்கு இப்படியெல்லாம் காமெடி செய்வார்களா? ஒரு குடும்பத்தின் வாழ்க்கையில் சூறாவளி வீசும்போது, இது காமெடி செய்யும் இடமா இது?
பொறுப்பான டிவியா அது? இதுவரை அந்த டிவியில் யாராவது நிம்மதியா குடும்பத்துடன் வாழ்ந்திருப்பார்களா? எல்லார் வாழ்க்கையையும் குட்டிச்சுவராக்கியது அந்த டிவிதான்.. 2 பெண்கள் பரிதவித்து கிடக்கும்போது, இதிலென்ன காமெடி வேண்டிக்கிடக்கு?" என்று காட்டமாக கூறியிருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications