பிரம்மாண்ட வளையத்தில் சிக்கிய கோவை அனிதா.. நல்லிபாளையத்தில் 30 ஏக்கர்? சீரழித்த 10 பெண்கள்? யாரிது
கோவை: சினிமாவின் மீது நம் மக்களுக்கு எப்போதுமே தீராத மோகம் உண்டு... குறுகிய காலத்தில் பேரும்புகழும், பணமும் கிடைப்பதால், இந்த ஆசை அதிகமாவதுண்டு.. இதில் பெண்களும் சிக்கி கொள்கிறார்கள். இதுபோன்ற பெண்களை குறிவைத்து ஏமாற்றி மோசடி செய்யவே ஒரு கும்பல், கோடம்பாக்க வட்டாரத்தில் இருக்கவே செய்கிறது.. இப்போது இளம் பெண் ஒருவர், கோவை கலெக்டரிடம் தந்துள்ள புகார், பெரும் பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது.. என்ன நடந்தது கோவையில்?
நடிக்க சான்ஸ் கேட்டு வாங்கி தருவதாக சொல்லி பெண்களின் வாழ்க்கையை சூறையாடும் போக்கும், காலகாலத்துக்கும் இருந்துகொண்டே வருவது கவலையை தந்து வருகிறது.

வளசரவாக்கம் சக்திவேல்
சமீபத்தில்கூட சென்னை வளசரவாக்கத்தில் சக்திவேல் என்ற நபர் சிக்கினார்.. சினிமா விளம்பர நிகழ்ச்சிகளில் தானாகவே முன்வந்து, அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் அதாவது "ஈவன்ட் ஏஜெண்ட்" என்று தன்னை பற்றி அனைவரிடமும் சொல்லி கொள்வார். சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் யாரும் கூப்பிடாமலேயே, "விஐபி பாஸ்" எடுத்துக் கொண்டு, முதல் நபராக ஆஜராகிவிடுவார்..
அங்கே வருகை தரும் பிரபலங்களுடன் சேர்ந்து போட்டோக்களையும் எடுத்துக்கொள்வார்.. இப்படி அமீர்கான் முதல் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் ஐஸ்வர்யா ராய், சாய்பல்லவி, ஏஆர் ரஹ்மான், அனிருத் இப்படி ஏகப்பட்ட பிரபலங்களுடன் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துள்ளதுடன், அத்தனை பேரும் தனக்கு நெருக்கம் என்றும் சொல்லி தன்னுடைய சோஷியல் மீடியாவில் பதிவிடுவார்.
சினிமா சான்ஸ் கொடுமை
இதைப்பார்த்த சினிமா மோகம் கொண்ட பெண்கள், சான்ஸ் கேட்டு சக்திவேலை நெருங்கும்போது, அவர்களுக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக சொல்லி, பாலியல் ரீதியாகவும் அவர்களை பயன்படுத்தி கொள்வார். பிறகு, தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்களுடன் பாலியல் ரீதியாக உறவு கொண்டால், 2 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி, அதன்மூலமும் சம்பாதித்துள்ளார்..
பெங்களூர் மாடல் அழகி ஒருவர், வாய்ப்பு கேட்க சென்றபோதுதான், சக்திவேலின் வண்டவாளங்களை அறிந்து அதிர்ச்சியடைந்து போலீசுக்கு ஓடினார்.. இதுதொடர்பான விசாரணையும் துவங்கியது நினைவிருக்கலாம்.
கோவை அனிதா புகார்
எனினும் சினிமாவை காட்டி இளம்பெண்களை சீரழிப்பது தொடர்ந்து வருகிறது. இப்போதுகூட ஒரு இளம்பெண் கோவை போலீசில் புகார் தந்துள்ளார்.. இந்த புகாரின் உண்மைத்தன்மையை போலீசார்தான் வெளிக்கொணர வேண்டும். இளைஞர் ஒருவரால் ஏமாற்றப்பட்டதாக சொல்லப்படும் இந்த பெண்ணின் பெயர் அனிதா.. 24 வயதான அனிதா, அரசூரை சேர்ந்தவர்.. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு இதுதான்:
"நான் கோவை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளேன். 2024ல் கரூர் நல்லிபாளையத்தை சேர்ந்த பார்த்திபன் (35) என்பவர் நேரில் சட்டரீதியாக சில சந்தேகங்களுக்காக அணுகினார். அப்போது என்னுடைய செல்போன் நம்பரை வாங்கிக்கொண்டார்.
நல்லிபாளையம் 30 ஏக்கர் நிலம்
பார்த்திபன் கரூரில் வழக்கறிஞராக உள்ளதாகவும், நல்லிபாளையத்தில் பூர்வீக சொத்து 30 ஏக்கர் உள்ளதாகவும், ஒரு கோடி மதிப்பிலான வீடு உள்ளதாகவும், தாய் அரசு பள்ளி ஆசிரியர் எனவும், தந்தை பைனான்ஸ் தொழில் செய்து வருவதாகவும் என்னிடம் சொன்னார்..
பார்த்திபனின் பெற்றோர் என்னிடம், "சிந்து என்பவரை திருமணம் செய்து, மகனின் மணவாழ்க்கையே விரக்தியாகிவிட்டது.. திருமணத்தால் மகனின் வாழ்க்கையே சீரழிந்துவிட்டது. "உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான், நீ சம்மதித்தால், திருமணம் விஷயமாக உங்களது வீட்டில் பேசுகிறோம் என்று பார்த்திபனின் பெற்றோர் என்னிடம் கூறினர். இதை நான் மறுத்துவிட்டேன்.
ஆனாலும், தொடர்ந்து பேசி என்னுடைய சம்மதத்தை பெற முயற்சி செய்தனர். இந்த சூழ்நிலையில் எனக்கும் பார்த்திபனுக்கும் காதல் ஏற்பட்டது. பார்த்திபன் வீட்டிற்கு நான் சென்றபோது, அவர் என்னிடம் அத்துமீறி பாலியல் உறவு வைத்தார். நான் அவரை கணவராக நினைத்து, அவருடன் வசித்தேன்.
பொள்ளாச்சி சினிமா ஷூட்டிங்
அப்போதுதான் பார்த்திபன் பொள்ளாச்சியில் சினிமா படம் தயாரிப்பதாக கூறி பெண்களிடம் அத்துமீறிய விவகாரம் தெரியவந்தது. 18 வயதிற்கு குறைவான மைனர் பெண்ணுக்கு சினிமா வாய்ப்பு தருவதாக சொல்லி, அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தகவல் எனக்கு கிடைத்தது. பார்த்திபன் மீது பலாத்காரம், எஸ்சி-எஸ்டி வழக்கு, குண்டாஸ் உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிகிறது.
என்னிடமிருந்து பார்த்திபன் 7 பவுன் நகை, ரூ.5 லட்சம் மற்றும் கார் வாங்கிக்கொண்டார். ஆனால், திருப்பி தரவில்லை. நான், கர்ப்பமாக இருந்தபோது ஸ்கேன் எடுக்க அழைத்துச்சென்று, கருக்கலைப்பு செய்து விட்டார். நான், பார்த்திபனை பிரிந்து, அவர் மீது போலீசில் புகார் அளித்தேன். அதன்பிறகு அவர், பின்தொடர்ந்து வந்து அச்சுறுத்தல் தருகிறார். மேலும் ஒரு நபர் கூட்டு சேர்ந்து என்னை டார்ச்சர் செய்கின்றனர்.
மைனர் பெண்கள் நாசம்
பார்த்திபன் 10க்கும் மேற்பட்ட பெண்களை நாசம் செய்திருப்பதாக தெரிகிறது. எனது உயிருக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் நடக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது நகை, பணம், காரை மீட்டுத்தர வேண்டும். எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த புகார் மனு குறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.. புகார் தந்தவருடன் சேர்த்து, மைனர் பெண்கள் பலம் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருப்பதால், கோவையில் இந்த விவகாரம் பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications