நம்பிக்கை துரோகம் நிறைய நடந்திருக்கு.. 25 பவுன் தங்க செயினையே ஏமாத்திட்டாங்க! வடிவேலு சொன்ன நெகிழ்ச்சி கதை
சென்னை: காமெடியனாக பலருக்கும் பரிச்சயமான வடிவேலு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்பட பிரமோஷனில் பேசிய வடிவேலு தன்னுடைய வாழ்க்கையில் பல துரோகம் நடந்ததாக உருக்கமாக பேசியிருக்கிறார்.
நடிகர் வடிவேலுக்கு அறிமுகமே தேவை இல்லை. 90's கிட்ஸ்கள் மட்டுமல்லாமல் 2கே கிட்ஸ்களுக்கும் அவர் பிரபலமானவர்தான். மீம்ஸ்களில் அவருடைய புகைப்படங்கள் மற்றும் ரியாக்சன் தான் இப்போதும் வைரலாகி கொண்டிருக்கிறது. சில வருடங்களாக அவர் சினிமாவில் நடிக்காமல் பிரேக் விட்டு வந்தார். ஆனாலும் அந்த நேரத்தில் கூட அவருடைய பழைய காமெடிகள் தான் ட்ரெண்டிங்கில் இருந்தது.

தனித்துவமான நடிப்பு
அதுவும் நடிகர் செந்தில்
கவுண்டமணி காலத்தில் இருந்தே சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த வடிவேலு அதற்குப் பிறகு காமெடி என்றால் வடிவேலு காமெடி தான் என்று சொல்லும் அளவிற்கு மாறிவிட்டார். தன்னுடைய உடல் மொழி மற்றும் தனித்துவமான ரியாக்ஷனால் மக்கள் மனதில் பசை போல பதிந்து விட்டார். ஆனாலும் அவர் பற்றிய சர்ச்சைகள் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது.
அடிக்கடி சர்ச்சை
அவரோடு நடிக்கும் நடிகர்கள் சிலர் அவர் குறித்து அவதூறு ஆக பேசி வருகிறார்கள். அதற்கு வடிவேலு வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறார். இதனால் சமூக வலைத்தளத்தில் வடிவேலு பற்றிய பேச்சு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. சில வருடங்களாக நடிப்பிற்கு பிரேக் விட்டிருந்த வடிவேலு மாமன்னன் திரைப்படம் கம்பேக் கொடுத்தது. இந்த திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.
மீண்டும் சுந்தர் சி, வடிவேலு கூட்டணி
மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினின் அப்பாவாக இவர் நடித்தது பெரிய அளவில் பேசப்பட்டது. இனி வடிவேலு இது போன்ற கேரக்டரில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று பலரும் கூறி வந்தனர். அதே நேரத்தில் இவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருந்தது. இந்த நிலையில் இயக்குனர்
சுந்தர் சியுடன் பல வருடம் கழித்து மீண்டும் வடிவேலு நடிக்க தொடங்கி இருக்கிறார்.
வடிவேலு விளக்கம்
இந்த திரைப்படத்தில் காமெடி கேரக்டரில் வடிவேலு நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான பிரமோஷனில் வடிவேலு மற்றும் சுந்தர் சி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வடிவேலுவிடம் அவருடைய வாழ்க்கையில் சந்தித்த துரோகம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அது குறித்து காமெடியாகவே வடிவேலு பேசி இருக்கிறார்.
துரோகம்
அதில், அவர் பேசும் போது துரோகத்தை யாராலும் மறக்க முடியாது. துரோகம்னு ஒன்னு எல்லார் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. எனக்கும் நடந்திருக்கிறது. எனக்கு மட்டுமல்ல எனக்கு முன்னாடி சினிமாவில் இருந்த பல நடிகர்களுக்கும் அது நடந்து இருக்கிறது. அதற்கு உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் சுருளி ராஜனை கூட சொல்லலாம். அவருடைய நடிப்பு எல்லோருக்குமே பிடிக்கும். ஆனால் அவருக்கு ஒரு பழக்கம் இருந்திருக்கிறது.

சுருளிராஜன் செய்த செயல்
அதாவது அவருடைய கழுத்தில் எப்போதும் 25 பவுன் தங்கச் சங்கிலியை போட்டுக் கொண்டிருப்பாராம். சூட்டிங் வரும்போது அணிந்து கொண்டு வருவார். பின்பு மேக்கப் போடும்போது அந்த செயினை தன்னுடைய உதவியாளரிடம் கழட்டி கொடுத்து விடுவாராம். எப்போதும் உதவியாளர் தன்னுடைய முதுகுக்கு பின்னாடி நின்று கொண்டிருக்கும் போது மேக்கப் போட அமர்ந்ததும் உதவியாளர் முகத்தைக் கூட பார்க்காமல் ஸ்டைலாக கழுத்தில் இருந்து செயினை கழட்டி பின்பக்கமாக நீட்டுவாராம்.
திருட்டு
உதவியாளர் செயினை பத்திரமாக வைத்துவிட்டு மாலையில் கொடுத்து விடுவாராம் இது வழக்கமா நடந்து கொண்டே இருந்திருக்கிறது. ஒருநாள் மேக்கப் போட ஆரம்பிக்கும் போது செயினை கழட்டி பின்பக்கமாக கொடுத்திருக்கிறார். மாலையில் உதவியாளரிடம் என்னுடைய செயினை கொடு என்று பேச, அதற்கு அவர் எந்த செயின் என்று கேட்டிருக்கிறார்.
செயின் கிடைக்கல
25 பவுன் தங்கச் சங்கிலி உன் கிட்ட தானடா கொடுத்தேன் என்று சொல்ல, அவர் நான் வாங்கவே இல்லை என்று சொல்லிவிட்டாராம். அந்த சூட்டிங் ஸ்பாட்டில் யாரோ ஆட்டைய போட்டுட்டாங்க. அவர் எல்லார் மீதும் நம்பிக்கை வச்சாரு ஆனா அவருக்கு துரோகம் தான் கிடைத்தது. அதனால அவர் மூணு நாளைக்கு சூட்டிங் வரலையாம். இதுபோல பலருடைய வாழ்க்கையில் ஒவ்வொரு விதமாக துரோகம் நடந்திருக்கிறது என வடிவேலு பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications