குக் வித் கோமாளி புகழுக்கு குழந்தை பிறந்தது... புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமான பதிவு
சென்னை: விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் மனைவி பென்ஸி கர்ப்பமாக இருந்த நிலையில் நேற்று அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
புகழ் மற்றும் பென்ஸி கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

புகழும் பென்ஸியும் பல வருடங்களாக காதலித்து வந்திருந்த நிலையில் பெற்றோர் சம்மதத்தோடு இரண்டு சம்பிரதாய முறையில் திருமணம் செய்து கொண்டு இருந்தனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பட்டி தொட்டியெல்லாம் பிரபலமடைந்த புகழ் அதே விஜய் டிவியில் பெண் வேடமிட்டு அனைவரையும் மகிழ்வித்து வந்தார். ஆனால் அப்போதெல்லாம் அவருக்கு கிடைக்காத பெயரும் புகழும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக கிடைத்தது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் சீசனில் ரம்யாவை சைட் அடிப்பது போன்று இவர் நிகழ்ச்சியில் அடிக்கடி என்டர்டைன்மென்ட் கொடுத்துக் கொண்டிருந்தார். அதுபோல இரண்டாவது சீசனையும் விட்டு வைக்காமல் அதிலும் கலந்து கொண்டு தர்ஷா குப்தாவை கலாய்த்து கொண்டிருந்தார். இப்படி இருக்கையில் இவரை எல்லோரும் சிங்கிள் என்று நம்பிக்கொண்டிருந்த நேரத்தில் தான் நான் சிங்கிள் இல்லை கமிட்டட் என்று சொல்கிற மாதிரி தன்னுடைய காதலியோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
அது யார் என்ற கேள்விகள் அதிகமாக இருந்தது. அந்த நிலையில் தான் பல வருடங்களாக பென்ஸி என்பவரை காதலித்து வருவது பற்றி புகழ் பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கும் பென்ஸிக்கும் கடந்த வருடம் செப்டம்பர் ஒன்றாம் தேதி திருமணம் நடைபெற்றது. முதலில் விழுப்புரம் மாவட்டம் தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் எளிமையான முறையில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து பென்ஸியின் முறைப்படியும் திருமணம் செய்து கொண்டிருந்தனர். அதுபோல இவர்களுடைய ரிசப்ஷன் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் பென்ஸி கர்ப்பமாக இருந்தார். அது பற்றி சில மாதங்களுக்கு முன்புதான் புகழ் போட்டோ சூட் மூலமாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார். அதற்கு பிறகு புகழ் மனைவியின் வளைகாப்பு பங்க்ஷன் பிரமாண்டமாக கொண்டாடி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை நேற்று பிறந்திருக்கிறது.
இந்த நிலையில் குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையின் பாதங்களை தன்னுடைய கையால் அனைத்த படி புகழ் புகைப்படம் எடுத்து அதை தன்னுடைய instagram பக்கத்தில் பகிர்ந்து," இரு முறை தாய் வாசம் தெரியவேண்டும் எனில் பெண் பிள்ளையை பெற்றெடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள் அல்ல எங்கள் மகாராணி பிறந்து இருக்கிறார். என் மகளே, தாயும் சேயும் நலம்.." என உருக்கமாக பதிவு வெளியிட்டு இருக்கிறார். இதற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications