குக் வித் கோமாளி 5: கோமாளியாக அறிமுகமாகும் தெய்வமகள் சீரியல் நடிகை! அப்போ சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் ஐந்தாவது சீசனுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவது யார் யார் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படியான நிலையில் வழக்கமான கோமாளிகளோடு சேர்ந்து இந்த சீசனில் சீரியல் நடிகையும் கோமாளியாக கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்குக் காரணம் அந்த சீரியல் நடிகை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவுதான். அவர் வேறு யாரும் இல்லை தெய்வமகள் சீரியலில் தாரணி என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த நடிகை ஷபிதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது.

Cook with comali Season 5 Who are the comalis

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் மனதை கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நான்கு சீசன்கள் முடிவடைந்திருந்த நிலையில் இப்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருந்தனர். ஒரு சில மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் தற்போது சில தினங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக ஐந்தாவது சீசனின் ப்ரோமோ வெளியாகி இருந்தது.

ஏற்கனவே இந்த சீசனுக்கு அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறது. காரணம் இந்த நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் திடீரென்று வெளியேறி இருந்தார். அதுபோல இந்த நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர் என்று எல்லோருமே அடுத்தடுத்து வெளியேறி இருந்தனர். இதனால் புது கூட்டணி உருவாகுமா? என்பதுதான் பலருடைய எதிர்பார்ப்பு. இப்போது புது நடுவராக மாதம்பட்டி ரங்கராஜன் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

Cook with comali Season 5 Who are the comalis

அதே நேரத்தில் பல பிரபலங்கள் குக்குகளாக வரப்போவதாகவும் கூறப்படுகிறது அதிலும் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே , இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் வசந்த், நடிகை திவ்யா துரைசாமி, நடிகர் வி.டி.வி கணேஷ், youtuber இர்பான் என்று பலர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இந்த சீசனில் கோமாளிகளாக யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் கடந்த சீசனை போலவே இந்த சீசனிலும் பாலா கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அது போல புதியதாக சீரியல் நடிகை ஒருவரும் இந்த சீசனில் கோமாளியாக கலந்து கொள்ள இருக்கிறாராம். அது வேறு யாரும் இலலை, சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் தாரணி கேரக்டரில் நடித்த நடிகை ஷபி தான்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1, பொம்மகுட்டி அம்மாவுக்கு போன்ற சீரியல்களில் நடித்திருந்தார். சமீபத்தில் இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடித்த சீரியல்களில் எல்லாமே துருதுருவென பாசிட்டிவ்வான கேரக்டரில் தான் நடித்திருப்பார். அதனால் அவரும் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Cook with comali Season 5 Who are the comalis

அதற்கு காரணம் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவுதான். அதில் குக் வித் கோமாளி சீசன் 5 ப்ரோமோவை பகிர்ந்த ஷபி கம்மிங் சூன் குக் வித் கோமாளி... நான் ரொம்ப எக்சைட்டாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் இவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+