குக் வித் கோமாளியில் ரக்ஷன் சொன்ன வார்த்தை.. மணிமேகலையை தாக்கி தான் இப்படி பேசினாரா?
சென்னை: விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இதில் பல புது முகங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் யாரும் எதிர்பார்க்காத சில போட்டியாளர்கள் எல்லாம் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தொடங்கிய முதல் நாள் ரக்ஷன் சொன்ன வார்த்தை மணிமேகலையை தாக்கி பேசி இருக்கிறார் என்று இணையத்தில் ரக்ஷனை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த ஐந்தாவது சீசன் தொடங்குவதற்கு முன்பே பெரும் சர்ச்சைகள் இருந்தது. அதில் நான்கு சீசன்களாக நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் விலகி இருந்தார். அவரை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை தயாரித்து வந்த தயாரிப்பு நிறுவனமும் விலகியது. அதற்கு பிறகு இதில் கோமாளியாக தொடர்ந்து வந்த சிலரும் விலகி இருந்தனர்.

குக் வித் கோமாளி பஞ்சாயத்து
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமடைந்த சிலர் சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனாலும் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் கடைசி இரண்டு வாரங்களுக்கு முன்பு யாரும் எதிர் பார்க்காத வகையில் பெரும் பஞ்சாயத்து வந்தது. அதாவது அந்த நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகி இருந்தார்.
மணிமேகலையின் விலகல்
மணிமேகலை தான் ஐந்தாவது சீசனில் ரக்ஷன் உடன் தொகுப்பாளினியாக இருந்தார். ஆனால் அவர் தான் விலகுவதாக அறிவித்திருந்தார். அதற்கு காரணம் பிரியங்கா என்று அவர் போஸ்ட் போட்டு இருந்தார். அந்த பதிவு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலரும் மணிமேகலைக்கு சப்போர்ட் செய்தனர். ஆனால் விஜய் டிவி பிரபலங்கள் பலர் பிரியங்காவிற்கு சப்போர்ட் செய்திருந்தனர்.
ரக்ஷன் சர்ச்சை பேச்சு
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய மணிமேகலைக்கு ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் இப்போது அவர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று குக் வித் கோமாளி சீசன் 6 தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ரக்ஷன் கலந்து கொண்டிருக்கிறார். அவர் நேற்று பேசும்போது "கடந்த ஐந்து சீசன்களாக இருந்த யார் போனாலும் நான் கவலைப்பட்டதே இல்லை. ஆனால் இந்த சீசனில் யார் போனாலும் கவலைப்படுவேன்" என்று பேசி இருக்கிறார்.
ரசிகர்கள் கேள்வி
இது மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். போட்டியாளர்கள் யாரும் போனால் கவலைப்படுவேன் என்று சொன்னாரா? அல்லது மணிமேகலையை குறித்து சொன்னாரா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. இதற்கு ரக்ஷன் தரப்பிலிருந்து என்ன பதில் கொடுக்கப்படுகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
போட்டியாளர்கள்
ஏற்கனவே இந்த சீசனில் விஜய் டிவியோடு சண்டை போட்ட பலர் கலந்து கொள்கிறார்கள் அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா கலந்து கொண்டார் அவர் அந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே வெளியே போகிறேன் என்று பிரச்சனை செய்திருந்தார். கடைசியாக அவர் வெளியேற்றப்பட்டது கூட அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. அவர் இப்போது மீண்டும் விஜய் டிவிக்கு வந்திருக்கிறார்.
உங்கள் கருத்து
அதுபோல சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த லட்சுமி ராமகிருஷ்ணனை விஜய் டிவியில் ராமர் ட்ரோல் செய்திருந்தார். அது மட்டுமல்லாமல் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிலும் லட்சுமி ராமகிருஷ்ணனை ட்ரோல் செய்து எபிசோடு வைத்திருந்தனர். அதற்காக லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த நேரத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இப்போது அவரும் விஜய் டிவிக்கு திரும்ப வந்திருக்கிறார். இதனால் இந்த சீசன் எப்படி இருக்க போகிறது என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. அதற்கு இடையில் முதல் நாளில் இப்பொழுது சர்ச்சையும் உண்டாகி இருக்கிறது. நேற்றைய எபிசோடை நீங்க பார்த்தீங்களா நண்பர்களே? எப்படி இருந்தது?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications