‘கூலி’ படத்துக்காக யாரும் லீவு போடவேண்டாம்.. ஆபீஸுக்கே மொத்தமாக லீவு விட்ட நிறுவனம்! இலவச டிக்கெட்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தின் 'கூலி' திரைப்பட ரிலீஸை முன்னிட்டு தமது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ள மதுரையை தலைமை இடமாக கொண்ட நிறுவனம், ஊழியர்களுக்கு இலவசமாக டிக்கெட்டும் வழங்கி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் 'கூலி'. நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, அமீர்கான் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கூலி ரிலீஸ்
சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறையை ஒட்டி, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) வெளியாகவுள்ளது. கூலி படத்தைப் பார்க்க ரஜினி ரசிகர்கள் ஆர்வமுடன் ரெடியாகி வருகின்றனர்.
வழக்கமாக முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அவர்களது ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சிக்கு செல்வார்கள். அலுவலக வேலை நாட்களில் படம் ரிலீஸ் ஆகும்போது, அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு படம் பார்க்கச் செல்வது வழக்கம்.
அலுவலகத்துக்கு விடுமுறை
ரஜினிகாந்த் படம் என்றால் சொல்லவே வேண்டாம். பெரும்பாலான தீவிர ரசிகர்கள் என்ன நடந்தாலும் நடக்கட்டும் என படம் பார்க்கச் செல்வார்கள். பலர், உடல்நிலை சரியில்லை என்றோ, நெருக்கமானவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றோ காரணம் கூறி அலுவலகத்துக்கு விடுப்பு எடுப்பார்கள்.
இந்நிலையில் மதுரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் யூனோ அக்வா கேர் என்கிற நிறுவனம், நாங்களே 'கூலி' படத்துக்கு இலவசமாக டிக்கெட்டும் கொடுத்து, அன்றைக்கு அலுவலகத்துக்கு விடுமுறை அளித்து விடுகிறோம் என அறிவித்துள்ளது.
லீவு + இலவச டிக்கெட்
அந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்காக வெளியிட்டுள்ள சர்குலரில், லீவு லெட்டர் குவிவதை தவிர்க்க சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி படம் ரிலீஸையொட்டி ஆகஸ்ட் 14 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கிறோம். ரஜினிகாந்த் நடிக்க வந்து 50 ஆண்டுகளானதை கொண்டாடும் வகையில் ஆதரவற்ற இல்லம் மற்றும் முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்குவதுடன் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப் போகிறோம்.
யாரும் போலி விடுப்பு சொல்லிவிட்டு, கூலி படத்தை பார்க்கச் செல்லாமல் இருக்க யூனோ அக்வா ஊழியர்களுக்கு கூலி டிக்கெட்டுகளை இலவசமாக கொடுக்கிறோம். இந்த விடுப்பு சென்னை, பெங்களூர், திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, மதுரை மாட்டுத்தாவணி, மதுரை ஆரப்பாளையம் கிளைகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்கள் நிறுவனத்தில் இதுபோல 'கூலி' படம் பார்க்க லீவு விடவில்லையே என ஆதங்கத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications