உலக அளவில் பிரபலம் அடைந்த தேவாவின் “அந்த”பாடல்.. சிங்கப்பூர் அரசின் அங்கீகாரம்.. ரஜினியின் ஆதங்கம்
சென்னை: இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா பற்றி தெரிந்த பலருக்கும் இயக்குனர் சேரன் இயக்கிய பொற்காலம் படத்தில் அவர் இசையமைத்த "தஞ்சாவூர் மண்ணெடுத்து"என்ற பாடல் மூலம் அவருக்கு கிடைத்த உலகளாவிய வரலாற்று பெருமையை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சமீபத்தில் அதைக் குறித்து தனது பேட்டியில் கூறியுள்ளார் தேவா.இதை குறித்து சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் அவர்களும் தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் தனது திரை வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற தாழ்வுகளை பார்த்திருந்தாலும், பல ஹிட் படங்களை, ஹிட் பாடல்களை பல இசை அமைப்பாளர் உடன் இணைந்து கொடுத்திருந்தாலும், ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பட்டம் என்றவுடன் நினைவில் இருக்கும் சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு தீம் மியூசிக்காக என்றும் நிலைத்திருப்பது தேவாவின் இசை தான்.
அண்ணாமலை படத்தில் அவர் ரஜினிக்காக இசையமைத்த டைட்டில் கார்டு மியூசிக் தான் இன்று வரை "சூப்பர் ஸ்டார்" என்ற பெயர் வரும்பொழுது திரையரங்கில் ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.
ரஜினி,விஜய்,அஜித் என்று முன்னணி நடிகர்கள் படத்தில் பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும், இயக்குனர் சேரன் இயக்கிய பொற்காலம் படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய "தஞ்சாவூரு மண்ணெடுத்து" என்ற பாடலுக்காக தேவாவுக்கு கிடைத்த உலக அளவிலான அங்கீகாரம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்பது தான் உண்மை.
இதுகுறித்து சமீபத்தில் ரஜினிகாந்த்தும் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்து இருந்தார். அந்தப் பாடல் அடைந்த புகழையும், பெருமையும் சரியான அளவில் அந்த நேரத்தில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தால் இசையமைப்பாளர் தேவா உலக அளவில் பேசக்கூடிய இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறி இருப்பார் என்றும் கூறியிருந்தார்.
"தஞ்சாவூரு மண்ணெடுத்து" பாடல் வெளிவந்த சமயத்தில் அந்தப் பாடலால் மனதளவில் உணர்வுபூர்வமாக பெரிதும் ஈர்க்கப்பட்டு, தேவாவையும் பாடலை எழுதிய வைரமுத்துவையும், பாடலை பாடிய கிருஷ்ணராஜாவையும், தனிப்பட்ட முறையில் சிங்கப்பூர் வரவழைத்து பாராட்டி இருக்கிறார் அப்போதைய சிங்கப்பூர் பிரதமர் எஸ்.ஆர்.நாதன் அவர்கள். அதோடு மட்டும் விட்டு விடாமல் அந்தப் பாடல் மீது தனக்கிருந்த பிரியத்தால் தனது இறுதிச் சடங்கின் போதும் அந்தப் பாடலை ஒலிக்க விடுமாறும் தனது அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டாராம்.
தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டு இருமுறை சிங்கப்பூரின் ஜனாதிபதியாக இருந்த எஸ்.ஆர்.நாதன் அவர்களின் இறுதி சடங்கின் தொடக்கத்தில் "தஞ்சாவூர் மண்ணெடுத்து" பாடல் ஒலிக்கப்பட்டபோது உலகெங்கிலும் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதாம்,அதன் பின்பு உலக அளவில் அந்தப் பாடல் குறித்து விபரங்களையும், விளக்கங்களையும் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமின்றி பலரும் தேட ஆரம்பித்துள்ளனர்.அந்த நிகழ்வுகளை எல்லாம் தமிழக ஊடகங்கள் சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்து இருந்தால் இன்று பான் இந்தியா இசையமைப்பாளர்களில் ஒருவராக கூட தேவா இருந்திருக்கலாம்.












Click it and Unblock the Notifications