Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யார் குடும்பம் கெட்டாலும் தனுஷ் தான் காரணமா? ஏன் வறுத்தெடுக்கறீங்க? போராடி உயர்ந்த நடிகர்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்ன வயதில் தான் பட்ட கஷ்டத்தை அடிக்கடி சொல்லி வருகிறார் தனுஷ்.. சொந்த வைராக்கியத்தில் முன்னுக்கு வந்திருப்பதால், தொடர்ச்சியாக மற்றவர்கள் தன்னை காயப்படுத்துவதை தனுஷால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால்தான் நேற்று குபேரன் பட விழாவில் அனைத்து சர்ச்சைகளுக்கும் சேர்த்து பதிலடி தந்திருந்தார் தனுஷ்" என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியிருக்கிறார்.

Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள செய்யாறு பாலு, "தமிழ்நாட்டில் எந்த குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து நடந்தாலும் அதற்கு காரணம் தனுஷ்தான் என்ற அளவுக்கு தாறுமாறாக பேச ஆரம்பித்துவிட்டார்கள்..

Television Dhanush Actor dhanush

எந்த பிரச்சனை வந்தாலும் தனுஷ் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. குறிப்பாக சினிமா சம்பந்தப்பட்டவர்கள் குடும்பத்தில் பிரச்சனை என்றாலும், உடனே தனுஷை உள்ளே இழுத்து போட்டுவிடும் அளவுக்கு சென்றுவிடுகிறது..

நயன்தாரா - தனுஷ்

இதற்கு பிறகு நயன்தாரா - தனுஷ் விவகாரமும் நடந்தது.. ஆனால், மேற்கண்ட எந்தவிதமான சலசலப்புகளுக்கும் தனுஷ் எந்தவிதமான ரியாக்‌ஷனையும் இதுவரை காட்டியதில்லை.. ஆனால் தன்மீதான அனைத்துவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து, நேற்று, குபேரா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷ் பதிலளித்து பேசியிருந்ததுதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

"என்னை ஏன் வறுவறுன்னு வறுத்து எடுக்கறீங்க? எங்கே எது நடந்தாலும் என் மீதான தாக்குலை தொடுக்க ஒரு கூட்டம் எப்போதுமே இருக்கிறது.. வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்கள் சிலர் குறிவைத்து தாக்குகிறார்கள்.. ஏதாவது ஒரு விதத்தில் அவர்கள்மீது நெகட்டிவ்விட்டி பரப்ப வேண்டும், சேற்றை வாரி பூச வேண்டும், காயப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஒரு கூட்டம் செயல்பட்டு கொண்டேயிருக்கிறது..

சாயம் பூசுகிறார்கள்

அந்தவகையில் என் மீது சாயம் பூசுகிறார்கள்.. நான் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை.. என்னுடைய அப்பா என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.. என்னுடைய அண்ணன், எனக்கான வழிகாட்டியாக இருந்து, அடையாளத்தை தந்தார்...

அதற்கு பிறகு நானே கர்ணம் போட்டு என்னுடைய சொந்த முயற்சியில் முன்னேறியிருக்கிறேன்.. நான் ஒரு சாமான்யன்.. நான் ஒரு சாதாரண வீட்டு பையன்.. ஒருவேளை சாப்பாட்டுக்கூட கஷ்டப்பட்டவன்

ஆனால், என்னை ஒரு கூட்டம் தாக்குதல் நடத்தி கொண்டேயிருக்கிறது.. எனவேதான் இதற்கெல்லாம் பதில் சொல்கிறேன்.. 2000 முதல் 2025 வரை என, இந்த 25 வருடங்கள் என்னை ரசிகர்கள் தலைமீது தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்..

அந்த ரசிகர்களுக்காகத்தான் இப்போது இந்த விஷயத்தை சொல்கிறேன்.. உங்களை போல ரசிகர்கள் இருக்கும்வரை எனக்கென்ன கவலை? என்று பேசியிருந்தார்.

டைரக்டர் விசு

ஒருமுறை இயக்குனர் விசுவிடம், கஸ்தூரி ராஜா குறித்து பேசி கொண்டிருந்தேன். அப்போது அவர், "தன் பிள்ளைகளால் பெரிய இடத்துக்கு வந்துவிட்டார் கஸ்தூரி ராஜா.. என்கிட்டதான் அசிஸ்டென்ட்டாக கஸ்தூரி ராஜா இருந்தார்.. 80களில் பேட்டா கொடுப்பதற்குகூட பணமிருக்காது..

சொற்ப பணத்தை வாங்கி கொண்ட கஸ்தூரிராஜா, பஸ்ஸில் வீட்டுக்கு சென்றால் செலவாகும் என்று நினைத்து, நடந்தே செல்வார்.. பிள்ளைகளை அப்படியெல்லாம் வளர்த்தார்" என்று தெரிவித்தார்.

துள்ளுவதோ இளமை

ஒருகட்டத்தில் கடன் அதிகமாகி, சொந்த ஊரான தேனிக்கே போய் செட்டிலாகிவிடலாம் என்று முடிவெடுத்தார் கஸ்தூரி ராஜா.. அப்போதுதான், தம்பியை வைத்து படம் எடுக்கலாம் என்று செல்வராகவன் சொல்லி, துள்ளுவதோ இளமை என்ற படத்தை 40 லட்சம் ரூபாயில் எடுத்தார்.. கோடிகளில் அந்த படம் வசூலானது.. அவர்களின் வாழ்க்கையே திருப்பி போட்டது அந்த படம்..

தனுஷின் சகோதரி சமீபத்தில் தந்திருந்த பேட்டியில், கேகே நகரில் ஒரு ஒண்டிக்குடித்தனத்தில் குடியிருந்தோம்.. கிணறு வைத்திருந்த பழைய வீடு அது.. அந்த வீட்டை பற்றி நான், செல்வராகவன், தனுஷ் எல்லாரும் பேசிக் கொண்டிருந்தோம்..

அந்த வீடு இப்போது எப்படி இருக்கிறது? என்ற ஆர்வமும் வந்து, நாங்கள் 3 பேரும் கிளம்பி சென்றோம்.. அந்த வீடு இன்னமும் அப்படியேதான் இருக்கு..

பழையதை மறக்கவில்லை

நாங்கள் அதை பார்த்ததுமே தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.. அந்த வீட்டிலிருந்துதான் நாங்கள் வளர்ந்தோம்.. தனுஷ் சைக்கிள் ஓட்டி பழகிய இடம்.. எங்களை பார்த்து அங்கிருந்தவர்கள் எல்லாம் வந்துவிட்டார்கள்.. நாங்கள் இன்னும் பழைச மறக்காதது கண்டு ஆச்சரியப்பட்டார்கள்., நாங்கள் வளர்ந்த இடத்தை எப்படி மறப்போம்? என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

இதேதான் தனுஷின் வெளிப்பாடும்.. சின்ன வயதில் பட்ட கஷ்டத்தை அடிக்கடி சொல்லி வருகிறார்.. வைராக்கியத்தில் முன்னுக்கு வந்துள்ள நிலையில், தொடர்ச்சியாக மற்றவர்கள் காயப்படுத்துவதை தனுஷால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால்தான் நேற்று அனைத்து சர்ச்சைகளுக்கும் சேர்த்து பதிலடி தந்திருந்தார்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+