சிறகடிக்க ஆசை சீரியல் உருவான கதை! மெரினா பீச்சில் நடந்த அந்த உண்மை சம்பவம்.. ரகசியம் உடைத்த எழுத்தாளர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் எப்படி தொடங்கப்பட்டது. அதில் கேரக்டர்கள் எப்படி உருவாக்கப்பட்டது என்று இந்த சீரியலின் இயக்குனர் குரு சம்பத்குமார் ஃபிலிமிபீட் தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்திருக்கிறார்.
தற்போது விஜய் டிவியில் டிஆர்பி யில் முதல் இடத்தில் இருந்து வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களுக்கு இருக்கிறது. ரோகிணி மாமாவாக நடிக்க வந்த கறிக்கடைக்காரர் முத்து மற்றும் மீனா மூலமாக அண்ணாமலை வீட்டிற்கு வந்து மொத்த உண்மைகளையும் சொல்வது போன்று காட்சிகள் இருக்கிறது. இது உண்மைதானா? அல்லது கனவா? என்பது பலருடடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எதிர்பாராத சம்பவம் இருக்கு
நேற்றைய எபிசோடில் கூட நடந்த சம்பவங்கள் உண்மை போல தான் தெரிந்தது. இப்படியான நிலையில் இந்த சீரியலில் எழுத்தாளர் குருசம்பத் குமார் பேசியிருக்கிறார். அதில், நான் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் எழுத்தாளராக இருந்தேன். அந்த சீரியல் முடிவுக்கு வந்த பிறகு மூன்று மாதம் இடைவெளி விட்டுவிட்டு அடுத்த சீரியல் கதை எழுதுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தேன்.
ஜூஸ் கடைக்காரர் செயல்
அப்போது சுற்றிக் கொண்டே இருப்பேன். ஒருமுறை மெரீனா பீச்சில் நான் நின்று கொண்டிருக்கும் போது ஒரு சம்பவம் நடந்தது. அதாவது ஒரு கரும்பு ஜூஸ் கடைக்காரர் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய பக்கத்தில் அவருடைய எட்டு வயது மகளும் வேலை செய்து கொண்டு இருந்தார்.

மீனா கேரக்டர் உருவான விதம்
அந்த மகள் அப்பாவிடம் அப்பா இந்த வார சனிக்கிழமை என் பிரண்டோட பர்த் டே கிப்ட் வாங்கணும் என்று சொல்ல அதற்கு அவங்க அப்பா எவ்வளவு பணம் தேவைப்படுது என்று கேட்டார், 200 ரூபாய் வேணும் என்று அந்த பொண்ணு சொல்கிறது. அதற்கு அவருடைய அப்பா சனிக்கிழமை கூட்டம் இருக்கும் அன்னைக்கு நிறைய வியாபாரம் இருக்கும் அப்போது உனக்கு நான் தரேன் என்று சொன்னதும் பெண் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். அப்புறம் வேலையை தொடங்கி விட்டது.
கற்பனையில் உருவான கதை
இதை நான் பார்த்துக் கொண்டேன் அப்போது தான் என்னுடைய கற்பனையில் மீனா கேரக்டர் உருவானது. இது கடற்கரையில் நடந்தாலும் என்னுடைய கற்பனையில் ஒரு கோவிலில் பூ கட்டும் அம்மா அவருடைய பொண்ணு, பக்கத்துலயே கரும்பு ஜூஸ் போட்டு இருக்கும் அவங்க அப்பா என்று ஒரு குடும்பத்தை உருவாக்கினேன்.

சத்யாவின் தவறான செயல்
பிறகு இன்னொரு சம்பவம் நடந்தது அதாவது என்னுடைய மகனின் பைக்கை ஒருத்தன் திருடிட்டு போயிட்டான். அப்போ நான் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தேன். திடீர்னு எனக்கு போன் செய்து ஸ்டேஷனுக்கு வர சொல்லியிருந்தாங்க. நான் ஸ்டேஷனுக்கு போய் பார்க்கும் போது பைக்கை தூக்குனவன் ரொம்பவும் ஒல்லியா இருந்தான். அவன் தான் பைக்கை தூக்கினான் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க அப்படி இருந்தான்.
சத்யா கேரக்டர் உருவான விதம்
அவனுடைய மனைவி மஞ்சள் தாலி புதியதாக போட்டுக்கொண்டு ஒரு பக்கமாக அழுது கொண்டு இருந்தார். என்னை பார்த்ததும் என் ஓடி வந்து என் காலில் விழுந்து என்கிட்ட கல்யாணம் முடிஞ்சு 18 நாள் தான் ஆகுது, இவர் இப்படி ஒரு வேலை பார்க்கிறார் என்று தெரியாது. தயவு செய்து இந்த ஒரு முறை மன்னிச்சு விட்டுருங்க இனி இவர் இந்த வேலை பார்க்காமல் நான் பார்த்துக்குறேன் என்று சொல்லுச்சு
கதறி அழுத மீனா
நான் சரி என்று மன்னித்து விட்டுட்டேன். இந்த சம்பவம் என் மனதில் பதிந்து போனது. அதுதான் மீனாவின் தம்பி கேரக்டர் முதலில் முத்துவின் சத்யா தன்னுடைய நண்பன் சிட்டி வழி நடத்திய தவறான பாதையால் முத்து பைக்கை தூக்கி இருப்பார். அப்போ கூட முத்துவிடம் தன்னுடைய தம்பி மீது கொடுத்த கம்ப்ளைன்ட்டை வாபஸ் வாங்குமாறு பேச மீனா போயிருப்பார்.
முத்துவின் மன மாற்றம்
முதலில் முத்து முடியாது என்று சொல்லுவார். பிறகு கடைசியாக மீனா பேசும்போது நீங்க அவனை மன்னித்து விட்டால் அவன் படிப்பான். இல்லனா படிப்பு பாதையிலே போயிடும் என்று அழுதுட்டே சொல்லுவாங்க. அது முத்துவின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும். இப்படித்தான் நான் முத்து மற்றும் மீனா குடும்பத்தை உருவாக்கினேன்.

ஒரு மாத கதை
அதுபோல இந்த சீரியலுக்காக ஒவ்வொரு மாதமும் நாங்கள் சேனல் மற்றும் ப்ரொடியூசரிடம் கதை சொல்லுவோம். அவர்கள் இந்த இடத்தில் இதை மாற்றம் செய்யலாம் என்று ஆலோசனை கூறுவார்கள். ஒரு மாதத்திற்குள் மொத்த கதையையும் நாங்கள் பேசிவிட்டு தான் அதை ஷூட் செய்வோம் என்றும் அந்த பேட்டியில் குரு சம்பத்குமார் பேசியிருக்கிறார்.
-
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications