3 வயதிலேயே அம்மா இல்ல.. என் கண்முன்னே மகேந்திரன் அப்பா அப்படி பேசுவாரு.. கே.எஸ் ரவிக்குமார் பளிச்
சென்னை: இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் பேட்டி ஒன்றில் மாஸ்டர் மகேந்திரன் தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போது நடந்த நிகழ்வு குறித்து பேசி இருக்கிறார். அதில் மூன்று வயதில் அம்மா இல்லாத குழந்தையாக தான் மாஸ்டர் மகேந்திரன் என்னிடம் வந்தார் என்று நாட்டாமை சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த நிகழ்வுகளையும் குறிப்பிட்டு இருக்கிறார்.
சினிமாவில் ஒரு சில நடிகர் நடிகைகள் குழந்தை நட்சத்திரங்களாக பெரிய அளவில் கலக்கி இருப்பார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக ஜொலிக்க முடியாமல் இருக்கிறது. அதில் ஒருவர் தான் மாஸ்டர் மகேந்திரன். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும் கதாநாயகனாக பெரிய அளவில் இன்னும் வெற்றி பெறவில்லை. ஆனால் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பு வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் பவானி கேரக்டரில் நடித்ததன் மூலம் பெரிய அளவில் பேசப்பட்ட மாஸ்டர் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் 90ஸ்களுக்கு பரீட்சையமான இவர் சினிமாவில் அறிமுகமானது நாட்டாமை திரைப்படம் தான்.
அந்த திரைப்படத்தில் மகேந்திரன் பேசிய டயலாக் யாரும் மறந்து இருக்க முடியாது. நடிகர் பொன்னம்பலம் தன்னுடைய வீட்டில் வேலை செய்த ஒரு பெண்ணை கற்பழித்து இருப்பார். அதற்கு நாட்டாமையாக இருக்கும் விஜயகுமாரிடம் பஞ்சாயத்து வந்திருக்குமா. அப்போது விஜயகுமார் இந்த சம்பவத்தை பற்றி சாட்சி சொல்ல வந்தவர்களிடம் இந்த பொண்ணுக்கு என்ன ஒரு உறவு முறை என்று விஜயகுமார் கேட்பார்.
அப்போது இரண்டு பேர் பஞ்சாயத்து சாட்சி சொல்ல வருவார்கள் அவர்கள் இருவருமே அந்த பெண்ணின் உறவினர்கள் அதனால் இந்த சாட்சி செல்லாது என்று சொல்லிவிடுவார். அப்போது தாத்தா நான் பார்த்தேன் என்று மகேந்திரன் உள்ளே வருவார். இந்த மாமா அந்த அக்காவை வண்டியில தூக்கி போட்டுட்டு போனாரு. நானும் பின்னாடியே போனேன் ஒரு வீட்டுக்குள்ள தூக்கிட்டு போய் கதவை பூட்டிட்டாரு. அங்க வேற யாருமே இல்ல.
அந்த அக்கா அழுகை சத்தம் மட்டும்தான் கேட்டுட்டே இருந்துச்சு. பிறகு அந்த அக்கா வெளியில அழுதுட்டே வந்தாங்க. அப்போ நான் ஏன் அக்கா அழுகுறீங்கன்னு கேட்டேன் இந்த மாமா என் வாழ்க்கையே சீரழிச்சுட்டாரு என்று சொன்னாங்க என்று சாட்சி சொல்லி இருப்பார். அதுபோல நாட்டாமை திரைப்படத்தில் மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் மாஸ்டர் மகேந்திரனின் நடிப்பை பார்த்து கே.எஸ். ரவிக்குமார் தன்னுடைய 16 படங்களில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார்.
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் அதிகமான திரைப்படங்களில் மாஸ்டர் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இந்த நிலையில் கே எஸ் ரவிக்குமார் பேட்டி ஒன்றில் மாஸ்டர் மகேந்திரன் பற்றி பேசுகையில் மாஸ்டர் மகேந்திரன் என்னுடைய நாட்டாமை பட சூட்டிங்க்கு வரும்போது மூன்று வயது தான் இருக்கும் அப்போது அவருக்கு அம்மா கிடையாது. அவங்க அம்மா மூன்று வயதிலேயே இறந்து போயிட்டாங்க. மகேந்திரனின் அப்பாவும் அண்ணனும் தான் ஷூட்டிங் கூட்டிட்டு வருவாங்க.
மகேந்திரன் அந்த வயதிலேயே தமிழ் அழகா பேசுவாரு. ஆனா அவங்க அப்பா தெலுங்கு என்பதால் அவருக்கு சரியாக தமிழ் தெரியாது நான் ஏதாவது காட்சிகள் சொல்லிக் கொடுத்தால் நல்லா பண்ணுடா என்று அவர் தெலுங்கில் சொல்லிக் கொண்டே இருப்பார். மகேந்திரன் இன்று இவ்வளவு வளர்ந்து இருக்கிறார் பிரபலமாக இருக்கிறார் என்றால் அதற்கு அவருடைய அப்பாவும் அண்ணனும் காரணம். அவங்க ரெண்டு பேரும் சூட்டிங் ஸ்பாட்டில் மகேந்திரனுக்கு அவ்வளவு சப்போர்ட்டாக இருந்தாங்க. அவங்கள மறந்துடாத மகேந்திரன் என்று மகேந்திரனிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications