"டாக்டர்" அட்லீயை விலை மாதுவுடன் ஒப்பிட்ட இயக்குநர்! காப்பி அடிப்பதாகவும் விமர்சனம்!
சென்னை: அட்லியை காப்பி அடிச்சு படம் எடுக்கிறார்னு சொன்னாலும் அவர் படங்கள் பயங்கர பிஸினஸ் பண்ணுது என்பதை விலைமாதுவுடன் ஒப்பிட்டு இயக்குநர் ஆர்.எஸ்.கார்த்திக் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில்தான் அட்லீக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது.
பொதுவாக விஜய்- அட்லீ காம்பினேஷன் வெற்றிக் கூட்டணியாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ஷாரூக்கானை வைத்து இயக்கிய அட்லீ, தற்போது சல்மான் கானை வைத்து இயக்கவுள்ளார்.

அது போல் அல்லு அர்ஜுன் என லிஸ்ட் பெரிசாகிக் கொண்டே போகிறது. அவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம், உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார். தற்போது ஷங்கரை விட அதிக பணத்தை ஊதியமாக பெறுகிறார் அட்லீ. இது போல் தனது முன்னேற்றத்திற்கு காரணம் விஜய் அண்ணன்தான் என அடிக்கடி அட்லீ கூறி வருகிறார்.
சத்யபாமா பல்கலைக்கழகம், அட்லீயை பெருமைப்படுத்தும் விதமாக டாக்டர் பட்டத்தை வழங்கியது. அந்த மேடையிலும் அவர் விஜய் குறித்து பேசியிருந்தார். இதன் பின்னணியில் பெரிய அரசியல் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஜேப்பியாரின் மகள் நடத்தும் கல்வி குழுமம்தான் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது. அதே மேடையில் விஜய் என்னோட அண்ணன், "பிகில்" படத்தில் ராயப்பன் கேரக்டர் ஜேப்பியாரை வைத்து உருவாக்கியது என அட்லீ, விஜய்யை பெருமைப்படுத்தி பேசினார்.
ஜேப்பியார் மருமகனுக்கு விஜய் தன் கட்சியில் பதவி கொடுத்திருக்கிறார். இதனால் அட்லீக்கும் விஜய் கட்சியில் ஒரு பொறுப்பு வழங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க அட்லீ, காப்பியடித்துதானே படம் எடுக்கிறார். அவருக்கு ஏன் டாக்டர் பட்டம் என ஒரு சாரார் கேள்வி எழுப்புகிறார்கள்.
இதற்கு மற்ற தரப்போ, அட்லீ காப்பி அடித்து படம் எடுத்தாலும் படம் பிஸினஸ்ஸை பெற்றுத் தருகிறதே, வேறு என்ன வேண்டும் என்கிறார்கள். இந்த கருத்துக்கு இயக்குநர் ஆர்.எஸ்.கார்த்திக் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில் அட்லீய காப்பி அடிச்சு எடுக்கிறார்னு சொன்னாலும் அவர் படங்கள் பயங்கர பிஸ்னஸ் பண்ணுதுன்னு சொல்றீங்க.
வீட்டு வேலை செய்து 100 ரூபாய் சம்பாதிக்குறாங்க. இன்னொருத்தர் விலை மாதராய் போய் ரூ 5000 சம்பாதிக்கிறாங்க. இவர்களில் யார் சூப்பர்? காசு முக்கியம் இல்லை என இயக்குநர் கார்த்திக் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.எஸ். கார்த்திக் என்பவர் "அச்சம் என்பது மடமையடா", "மாநகரம்", "பீச்சாங்கை", "என்னங்க சார் உங்கள் சட்டம்", "பரோல்" ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் கவுதம் வாசு தேவனின் அச்சம் என்பது மடமையடா படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications