பிரசவத்திற்கு சில நாள் தான் இருக்கு.. ஆனால்! குழந்தையை பற்றி உருக்கமாக பேசிய நடிகை திவ்யா ஸ்ரீதர்
நடிகை திவ்யா ஸ்ரீதர் தன்னுடைய குழந்தை என்னும் சில நாட்களில் பிறந்து விடும் என்று சில தகவல்களை கூறி இருக்கிறார்.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடிகை திவ்யா ஸ்ரீதர் நடித்து வருகிறார்.
நடிகை திவ்யா ஸ்ரீதர் அவருடைய காதல் கணவர் அர்னவ்வோடு ஏற்பட்ட குடும்ப பிரச்சனை சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் தன்னுடைய குழந்தையை பற்றி உருக்கமாக சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

செவ்வந்தி சீரியல் கதாநாயகி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலின் கதாநாயகியான திவ்யாஸ்ரீதர் சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு நபராக இருந்து வருகிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமா சீரியலின் கதாநாயகனாக நடித்துவரும் அர்ணவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுடைய திருமணம் சமீபத்தில் தான் முடிந்தது. இந்த நிலையில் தற்போது திவ்யா கர்ப்பமாக இருக்கும் நிலையில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இருக்கின்றனர்.

குடும்ப பிரச்சனை
காதல் கணவர் திருமணத்திற்கு பிறகு தன்னை கொடுமைப்படுத்துவதாக திவ்யா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்த நிலையில், செல்லமா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய கணவரான அர்ணவ் கைது செய்யப்பட்டு பின்பு ஜாமினில் வெளிவந்திருக்கிறார். ஷாமினில் வெளியே வந்த பிறகு அர்ணவ் தன்னுடைய வீட்டிற்கு செல்லாமல் தனியாகத்தான் வசித்து வருகிறாராம். அதுபோல திவ்யாவும் தனியாக தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார் .இதற்கு முன்பு அவருடைய பெற்றோர் அவரோடு இல்லாமல் இருந்த நிலையில் ,இப்போது அர்ணவுடன் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு திவ்யாவுடன் சேர்ந்து இருக்கின்றனர்.

பலர் சொன்ன அட்வைஸ்
இந்த நிலையில் திவ்யா ஸ்ரீதர் தற்போது தன்னுடைய வயிற்றில் இருக்கும் குழந்தையை பற்றி பேசியிருக்கிறார். இந்த குழந்தை ஆரம்பத்தில் வயிற்றில் இருக்கும் போதே உனக்கும் உன்னுடைய கணவருக்கும் பல பிரச்சனைகள் இருப்பதால் இது வேண்டாம் என்று பலரும் இதை அபார்ஷன் செய்ய சொன்னார்கள். ஆனால் நான் அந்த மாதிரி ஒரு முடிவை எடுக்க மாட்டேன் என்று கூறியிருந்தேன். காரணம் இந்த குழந்தை என்னை நம்பி வந்திருக்கிறது. அதை அழிக்கும் உரிமை என்னிடம் இல்லை. கடவுள் எனக்கு கொடுத்த பரிசு அதை சிறப்பாக பெற்றெடுத்து வளர்த்து எடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.

ஆண் குழந்தை விருப்பம்
அதோடு தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் ரொம்பவே சந்தோசம் என்று கூறியிருக்கிறார். நான் என்னுடைய குழந்தையை இந்த உலகத்தில் நல்ல ஒரு மனிதனாக வளர்த்தெடுப்பேன். பிற பெண்களை ஏமாற்றக்கூடாது என்றும் பெண்களுக்கு மரியாதை கொடுத்து பார்க்க வேண்டும் என சொல்லிக் கொடுத்து என்னுடைய மகனை வளர்த்தெடுப்பேன். என்று உருக்கமாக பேசியிருக்கிறார். திவ்யாவிற்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கும் நிலையில் தற்போது பிரசவத்திற்கு நாள் நெருங்கிய நிலையிலும் அவர் தொடர்ந்து செவ்வந்தி சீரியலில் நடித்துக் கொண்டே இருக்கிறார். தன்னுடைய குடும்பத்தில் வருமானம் எதுவும் இல்லை என்றும் தான் இந்த சீரியலில் நடித்தால்தான் தன்னுடைய குழந்தைகளை நல்லபடியாக பார்த்துக் கொள்ள முடியும் என்றும் தனக்கு பிறக்கும் குழந்தையை மிகச் சிறப்பான ஒரு மனிதராக வளர்ப்பேன் என தைரியமாக கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications