நடிகை நதியாவிற்கு புகழை கொடுத்த பூவே பூச்சூடவா.. மறக்க முடியாத பூங்காவனத்தம்மா! சக்ஸஸானது எப்படி?
சென்னை: நடிகைகள் பத்மினி, நதியா நடித்த பூவே பூச்சூடவா என்ற திரைப்படம் வெற்றி பெற்று அதிரடியாக ஓடிக் கொண்டிருந்ததற்கு காரணம் என்ன தெரியுமா?
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவரின் பேஸ்புக் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: திரைக்கதைகளில் மனதோடு ஒட்டும் திரைக்கதைகள் எழுதுபவரில் ஃபாஸில் அழகான எழுத்துக்காரர். இந்த உலகில் எல்லா மனிதனும் வெறுப்பது பிரிவு மற்றும் தனிமை தான். ஃபாஸில் தன்னுடைய திரைக்கதைகளில் வெற்றி பெற்றது குடும்பத்தோடு தன் படங்களை பார்க்க வைத்தது இந்த பிரிவு, தனிமை வைத்து தான்..

அவரோட கதைகளில் வரும் மெயின் கேரக்டர்கள் எல்லாம் அந்த தனிமை உணர்வால் பாதிக்கப்பட்டிருக்கும். அந்த விளைவுகளாலேயே அந்த கேரக்டர் ரசிகர்களால் போற்றப்படும். பூவே பூச்சூடவா எடுத்தால் அதில் ஒரு வயதான பாட்டி பூங்காவனத்தம்மா.... மலையாளத்தில் குஞ்ஞுஞ்ஞம்மா தோமஸ்... அந்தப் பாட்டி படம் துவங்கும் போது மிகப்பெரிய தனிமையில் இருக்கும்.
அதன் பிரிவு எதுன்னா தான் ஆசை ஆசையாய் வளர்த்த ஒரே மகளை ஒருத்தன் ஆசை காட்டி கொண்டு போய் விட்டானே என்கிற ஆதங்கம். யாருமே இல்லாமல் ஒரே மகளை வளர்த்த பூங்காவனத்தம்மாவால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. காரணம் பூங்காவனத்தம்மாவுக்கு இந்த உலகமே அந்தமகள் தான். ஆனா பாசம் என்பதில் மட்டும் உலகத்துல என்ன நீதின்னு கேட்டா அம்மாவோ, அப்பாவோ, சகோதரியோ, சகோதரனோ, நண்பனோ நீங்க ஒரு ஆளை அனைத்திற்கும் மேல் உயர்வாக நினைத்தால் அவன் வேறு ஆளை நினைத்துக் கொண்டு முதலில் உங்களை உதாசீனப்படுத்துவான்.
பூங்காவனத்தம்மாவை ஊரே தும்மி கிண்டல் செய்யும். கோவில் அய்யருக்கு இயல்பாக தும்மல் வந்தாலும் பூங்காவனத்தம்மா முன்பு பயம் வந்துவிடும். தும்மலை நிறுத்த சிரமப்படுவார். அடுத்த வீட்டு டேவிட் ப்ளேயரில் பாட்டை சவுண்ட் கூட்டி வைத்து இம்சை செய்வது அவன் பொழுது போக்கு. இப்படி பூங்காவனத்தம்மா கேரக்டர் ஊரே எள்ளி நகையாடும் பாத்திரம். ஆனால் உள்ளுக்குள் தனிமை... எரிச்சல்... கழிவிரக்கம்...
பூங்காவனத்தம்மாவா வரும் பத்மினி அந்த தனிமையை மிக அழகாக வெளிப்படுத்தி இருப்பார். கொடுமை என்னன்னா ஓடிப்போன மகள் ஒரு நாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்று விட்டு இந்த உலகத்தை விட்டே போய் விடுகிறாள். உடனே பூங்காவனத்தம்மாவுக்கு ஒரு ஆர்வம், ஆசை வந்து விடுகிறது. இந்த புதிய பேத்தி, பாட்டி எங்கே எனக் கேட்டு ஒரு நாள் வந்து விடுவாள் என ஒரு நம்பிக்கை கீற்று பிறக்கிறது.
ஒரு வீட்டில் கதவை அடைத்துக் கொண்டு தனிமையில் வாழும் பூங்காவனத்தம்மா முதன் முதலாக தன் வீட்டு வாசலில் ஒரு காலிங் பெல்லை வைக்கிறாள். என்றாவது ஒரு நாள் தன் பேத்தி இதை அடித்து அழைப்பாள் என்கிற தன் பிரார்த்தனையை கடவுளுக்கு தெரியப்படுத்த பூங்காவனத்தம்மா அந்த காலிங் பெல்லை வைக்கிறாள்.
"அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் சென்று பார்ப்பேன்...
தென்றல் எனை வந்து தீண்டவேயில்லை கண்ணில் செந்நீரை வார்ப்பேன்..."
அழைப்பு மணி எந்த வீட்டில் ஒலித்தாலும் பூங்காவனத்தம்மா ஓடி ஓடி வந்து பார்ப்பார். நம் வீட்டு மணி ஒலியா என நினைப்பதில்லை.
நாள்களுக்குப் பிறகு பூங்காவனத்தம்மாவுக்கு அந்த அழைப்பு மணியே தொந்தரவாக மாறுகிறது. அக்கம்பக்க பிள்ளைகள் அதை ஒலித்து ஓடி ஒளிந்து கொள்வதும், ஏமாற்றத்தை தவிர்க்க முடியாத பாட்டி எள்ளும் கொள்ளும் வடிக்க உலா வருவதும் தொடர் நிகழ்வாக மாறுகிறது.
தினம் தினம் அடுத்த வீடுகளில் வசிக்கும் குழந்தைகள் அதை அடித்து பரிகசிக்கும் போது பூங்காவனத்தம்மாவுக்கு இந்த உலகம் தரும் தனிமை எவ்வளவு கொடுமை என்பதை இயக்குனராக ஃபாஸில் அருமையாக திரைக்கதைக்குள் கொண்டு வருவார்.
என்ன ஒரு மேஜிக்கல் திங்கிங். பேத்தியை நேசிக்கும் ஒரு பாட்டி பத்மினி பின் காட்சிகளில் நதியாவை பிரிவது எவ்வளவு வேதனைப்படுத்தும் என்பதற்கான முன் கதையாக ஃபாஸில் இப்படி வைத்திருப்பார்.
எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாறும் பூங்காவனத்தம்மாவின் அழைப்பு மணி ஒலிக்கிறது. "இந்த பசங்களோட தொல்லையாப் போச்சு..." பூங்காவனத்தம்மா ஆயுதங்களோடு வரும் போது அங்கே ஒரு பெண் நிற்கிறார். பூங்காவனத்தம்மா அதிர்ச்சியில் உறைந்து போகிறார். நம்ம பேத்தி தானா இது... யாருக்காக இத்தனை நாள் காத்திருந்தோமோ... யாரை சாவதற்கு முன் பார்க்க நினைத்தோமோ.... இதோ கண் முன்னே.... பூங்காவனத்தம்மா ஒரு நிமிடம் நிறைந்து போகிறார். அவர் பிரார்த்தனையை கடவுள் கேட்டு விட்டார்.
பூங்காவனத்தம்மாவின் ஒரே ஆசையை கடவுள் நிறைவேற்றி வைக்கிறார். இந்த உலகின் ஒரே ஜீவன் அவரோடு வாழ்கிறது. காதலில் வெற்றி பெறுவது போன்ற மகிழ்ச்சி. ஆனால் அந்த மகிழ்ச்சியை ஆண்டவன் சில நாட்களுக்கே கொடுத்திருக்கிறான் என பூங்காவனத்தம்மாவுக்கு தெரியும் போதும் உறைந்து போகிறார். தன்னோடு வாழ்ந்து தன் மடியில் இறக்க நினைக்கும் பேத்திக்கு அவள் எப்படியாவது வாழ்ந்து விட மாட்டாளா என நினைக்கும் பாட்டியம்மாவுக்குமான அன்பு மகத்துவம் வாய்ந்தது.
பாட்டி அவளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்து சிகிச்சைக்கு அனுப்புகிறார். அதுவரை கழட்டி வைத்த அழைப்பு மணியை திரும்பவும் வீட்டின் வாசலில் பொருத்துகிறார். பேத்தி சிகிச்சை முடிந்து அதை அடிக்கும் நாளுக்காக பூங்காவனத்தம்மா மீண்டும் இரண்டாவது பிரிவிலும், இரண்டாவது தனிமையிலும் காத்திருக்கிறார்... இந்த தனிமையின் நோவு தான் ஃபாஸிலின் வெற்றி. ஃபாஸில் என்கிற அற்புத கலைஞன் இந்த உலகின் பந்தங்களை எப்படி பார்த்திருக்கிறார்?.... அழகான கற்பனை. ஆனால் நிஜத்தை ஒட்டி.
திரைக்கதையில் நதியா பத்மினியிடம் அறிமுகமாகும் போதே "நான் தாயில்லாத பொண்ணு" எனச் சொல்லி நம்மை நெகிழ்ந்திருக்கும் நேரத்தில் ஒரு காமெடியை புகுத்தி ரிலாக்ஸ் செய்ய வைத்து விடுவார். எஸ்.வி.சேகரை அழைத்து விட்டு ஒளிந்து கொண்டு மாறு வேடத்தில் ஜன்னல் வழியாக நக்கல் விட்டு அவரை ஓட்டும் நதியா...அது வரை இருந்த நெகிழ்வை தளர்த்தி நம்மை சிரிக்க வைத்து விடும். அது தான் ஃபாஸிலின் திரைக்கதை.
ஒரு நெகிழ்ச்சி. பின் ஒரு காமெடி என படம் முழுக்க பயணிக்கும் இந்த உத்தி தான் படத்தின் வெற்றிக்கு அடிகோலியது. ஊர்ப் பெயர் மல்லிகைப் பந்தல். எவ்வளவு அழகான பெயர். மல்லிகைப் பந்தலில் எத்தனையோ மல்லிகைகள். இந்த.படத்தில் வரும் எல்லா கேரக்டர்களுமே நல்லவர்களாகவே இருப்பார்கள்.
தன் தோழி உஷாவின் பெயரை ஒரு பையனுக்கு வைக்கும் நதியா அந்த தோழமைக்கு எவ்வளவு மரியாதையை கொடுக்கிறார். சில அம்மாக்கள் பிள்ளைகளிடம் எல்லாம் தெரிந்தது போல் நடந்து கொள்வார்கள். சேகரிடம் அம்மா சுகுமாரி... "டேவிட்...டேவிட் கண்ணு... யார் பாடுறா?... போனியோவா?" "போனியாவா....இல்ல...பாலமுரளி கிருஷ்ணா...." "ஓ...கொஞ்சம் சவுண்ட்வை..." Boney M தான்... ஃபாஸிலின் திரைக்கதை அற்புதத்தை இன்னும் எழுதலாம். இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்துள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications