ஆர்த்தி இருக்கட்டும்.. பையன் "அந்த" கேள்வி கேட்டுட்டானாம்.. தாங்கவே முடியலன்னு ஓபனா சொன்ன ஜெயம் ரவி
சென்னை: பிரதர் படம் ஆடியோ ரிலீஸ் விழாவில், நடிகர் ஜெயம் ரவி பேசியிருந்ததும், ஹாரிஸ் ஜெயராஜ் டான்ஸ் ஆடியதும், இணையத்தை 2 நாட்களாகவே கவர்ந்து வருகிறது. ஜெயம் ரவியின் இந்த பேச்சை ரசிகர்கள் தொடர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.
ராஜேஷ் டைரக்ஷனில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் படம்தான் "பிரதர்".. ஸ்கீரின் சீன் மீடியா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் எம்.எஸ்.பாஸ்கர், நட்ராஜ், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், வி.டி.வி. கணேஷ், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது..

ஜெயம் ரவி: இதையொட்டி இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் 2 நாட்களுக்கு முன்பு நடந்தது.. இந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படக்குவினர்களுடன் இணைந்து ஜெயம் ரவி குடும்பத்திலிருந்து அண்ணன் மோகன் ராஜா மற்றும் அக்கா ரோஜா பங்கேற்றிருந்தனர்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசும்போது, "பலமுறை கேட்டு ரசித்து உருவாக்கிய பாடல் தான் "மக்காமிஷி".. பிரதர் அருமையான குடும்ப திரைப்படம். ரசிகர்கள் பாடல்களை கொண்டாடுவதற்காக தான் படம் பார்க்கவே வருகிறார்கள்.
நல்ல படங்கள் உடனடியாக மக்களை போய் சேர்வதில்லை என்று வருத்தத்தை வெளிப்படுத்தி ஹாரிஸ் ஜெயராஜ், மக்காமிஷி பாடல் உருவானது குறித்து விவரித்தார்.. அதுமட்டுமலலால், மக்காமிஷி பாடலுக்கு ஜெயம் ரவியுடன் சேர்ந்து மேடையிலேயே ஹாரிஸ் ஜெயராஜ் டான்ஸ் ஆடினார்.
அழகான கதை: பிறகு ஜெயம் ரவி பேசும்போது, "பிரதர் என்ற தலைப்பை நான் தான் படத்திற்கு வைத்தேன். அக்காவுக்கும் தம்பிக்கும் இடையேயான அழகான கதையை இந்த படம் விவரிக்கிறது.. இந்த கதையை ராஜேஷ் என்னிடம் சொல்லும்போது, முழுமையாக காமெடி இல்லாமல் கொஞ்சம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன.. அதுக்காகவே, சில மாற்றங்கள் செய்து என்னிடம் மறுபடியும், ஒரு லைன் சொன்னார். அது படத்தின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை தந்தது. அப்படித்தான் இந்த படத்தை ஆரம்பித்தோம்.
இந்த படத்தில் "மக்காமிஷி" என்ற பாடல் எனக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும் மறக்க முடியாத பாடலாக இருக்கும் என்று நம்புகிறேன்... அந்தளவிற்கு சிறப்பான இசையை ஹாரிஸ் ஜெயராஜ் கொடுத்துள்ளார்.
மகன் ஆரவ்: அந்த பாடலின் ரிகர்சலுக்காக சாண்டி மாஸ்டர் ஸ்டூடியோவுக்கு கூப்பிட்டிருந்தார். அப்போது என்னுடைய பையன் ஆரவ்வும் ஸ்டூடியோவுக்கு வந்திருந்தான். அங்கு ஆடும்போது முட்டி மூமண்ட் எனக்கு சரியாக வரவில்லை. உடனே என் பையன் என்னப்பா வயசாகிடுச்சா?ன்னு கேட்டான். அதை என்னால் தாங்கிக்கவே முடியவில்லை.
2 நாள் மட்டும் எனக்கு டைம் கொடு என்று மகனிடம் சொன்னேன். அதுக்கப்பறம் டான்ஸ் பிராக்டீஸ் செய்ய ஆரம்பிதேன்.. கடைசியில் என் டான்ஸை பார்த்துட்டு, "உங்களால் முடியும் என்று தம்ஸ் அப்" காட்டிவிட்டு போனான். இதுபோலவே, என்னுடைய முதல் படத்திலிருந்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறேன்... இதற்கு மீடியாவின் சப்போர்ட்டும் எனக்கு இருந்து வருகிறது. ஒரு குழந்தைக்கு சொல்வதுபோல் அட்வைஸ் பண்ணிட்டே இருக்கிறதும் என்னுடைய வளர்ச்சிக்கு காரணம் என்றார்.
சந்தோஷம்: ரசிகர்கள் கொடுக்கும் எனர்ஜியில்தான் என் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.. என்னுடைய முதல் படத்தில் என்ன எனர்ஜியை கொடுத்தீர்களோ அதே எனர்ஜியை கடைசி படம் வரை கொடுப்பீர்கள் என்று தெரியும்.. மக்களை சந்தோஷப்படுத்துவது தான் என்னுடைய வேலை.
இதனிடையே, ஜெயம் ரவி நடித்துள்ள 'பிரதர்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.. இந்த படம் ஜாலியான ஃபேமிலி டிராமாவாக உருவாகியுள்ளது என்பதை டீசர் உணர்த்துவதாகவும் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன..
"உங்க வாழ்க்கையில் லட்சியம் என்ன?' என்று ஜெயம் ரவியிடம் ஒருவர் கேட்க, "3 வேளையும் நல்லா சாப்பிட வேண்டும். 8 மணி நேரம் தூங்க வேண்டும். மனதில் பட்டதை பேச வேண்டும். இது தான் லட்சியம்" என்கிறார். கிட்டத்தட்ட படத்தில் ஜெயம்ரவி கதாபாத்திரத்தின் தன்மையை, இந்த ஒரு வசனமே விளக்கிவிடுகிறதாம்.












Click it and Unblock the Notifications