மணிமேகலையை "தேடிய" கண்கள்.. ரொம்பவே மிஸ் பண்றேன்.. பிரியங்கா முன்னாடியே ஓபனாக உடைத்து பேசிய பிரபலம்
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக பிரியங்கா அறிவிக்கப்பட்டுள்ளார்.. மொத்த பேரும் பிரியங்காவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தபோது, ஒரே ஒருவர் மட்டும் மணிமேகலை பற்றி பேசியிருக்கிறார்.. என்ன நடந்தது?
மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதாக அறிவித்துவிட்டார்.. இது தொடர்பான சலசலப்புகள் இன்னமும் ஓயவில்லை. மணிமேகலைக்கு நெட்டிசன்கள் திரண்டு சென்று ஆதரவும், வாழ்த்தும் தெரிவித்தனர். விஜய் டிவி பிரபலங்களும் மணிமேலைக்கு பாராட்டு கூறியிருந்தனர்.

மணிமேகலை: ஆனால், ஆரம்பத்திலிருந்த மணிமேகலைக்கான ஆதரவு, விஜய் டிவி பிரபலங்களிடமிருந்து திடீரென குறைந்துவிட்டது. மாறாக, பிரியங்காவுக்கு விஜய் டிவி பிரபலங்களிடமிருந்து ஆதரவு அதிகரிக்க துவங்கியது. ஒருவேளை, இதெல்லாம் விஜய் டிவியின் அசைன்மென்ட்டாக இருக்கலாம் என்கிறார்கள்.. சோஷியல் மீடியாவில் பெரும்பாலானோர் சொன்னதுபோலவே, பிரியங்காவுக்கு குக் வித் கோமாளி டைட்டில் தரப்பட்டுள்ளது.
குக் வி கோமாளியின் இறுதி நிகழ்ச்சியை ரக்சன் மட்டும், அன்றையதினம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது அத்தனை பேரும் பிரியங்காவை பாராட்டி வாழ்த்து சொல்லி கொண்டிருக்க, செப் தாமு மட்டும் மணிமேகலையை நினைவுகூர்ந்தார்..
கலகலப்பு: "இந்த நிகழ்ச்சியை இந்த அளவுக்கு கலகலப்பாக முக்கிய காரணம் ரக்சன் மற்றும் மணிமேகலை தான். இந்த நேரத்தில் நான் மணிமேகலையை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். ரக்சன் இன்னும் பெரிய இடத்திற்குப் போகவேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டு சொன்னதுமே, அத்தனை பேரின் கவனத்தையும் இந்த பேச்சு கவனம் பெற்றிருந்தது.
இதற்கு முன்புகூட சீசன் 5-ல் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தபோது, அதற்கான காரணத்தை முதலில் சொல்லாமல் இருந்தார்.
மணிமேகலை: அப்போது தாமு இதுகுறித்து கூறும்போது, "மணிமேகலை எனக்கு மகள் போன்றவள். அவர் நிகழ்ச்சியை விட்டு போனது எங்களுக்கு லாஸ் தான். அவருடைய காமெடி அதிகம் நான் மிஸ் பண்ணுகிறேன். இது அவருடைய விருப்பம். அடுத்து ஆங்கர் போன்ற விஷயத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் என நினைக்கிறேன். அவரது எதிர்காலம் ரொம்ப முக்கியம்... அதனால் எடுத்த முடிவுதான் இது" என்று கூறியிருந்தார்.
அதேபோல இந்த முறையும் மணிமேகலை நிகழ்ச்சியைவிட்டு வெளியேறியதையடுத்து, தாமு இவ்வாறு பேசியிருக்கிறார்... ஆனால், பிரியங்கா விவகாரம் ஆரம்பித்ததிலிருந்து, செஃப் தாமு எந்த கருத்தையும் சொல்லாமல் இருப்பதாகவும், பிரியங்காவுக்கு மறைமுகமாக ஆதரவு தருவதாகவும் செய்திகள் வட்டமடித்தன.
பாசம்: அதுவும், கடந்த மாதம் குக் வித் கோமாளியில் ஒரு எபிசோட்டில் பிரியங்காவை தாமு கண்டித்தபோது, கடுமையாக கண்டிக்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. பிரியங்காவுக்கு ஆதரவானவராகவே கருதப்பட்டு வந்த செப் தாமு, தன் மீதான விமர்சனங்களை உடைத்தெறிந்துவிட்டு, மணிமேகலைக்கான தன்னுடைய ஆதரவையும், பாசத்தையும் தொடர்ந்து தந்து வருவது பலரது கவனத்தை பெற்று வருகிறது












Click it and Unblock the Notifications