மனசு விட்டுப் பேசுங்க.. வச்சுப் புழுங்காதீங்க.. "தனம் அக்கா"வின் உருக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னதான் படித்திருந்தாலும் எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் அவர்களுக்கு மன கவலைகள் இருக்கும் வெளியில்தான் சிரித்த முகமாக பலரிடம் நடித்துக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் எவ்வளவு ரணம் இருக்கும் என்பதை பாண்டியன் ஸ்டோர் சித்ராவின் மரணம் அனைவருக்கும் ஒரு உணர்த்தியிருக்கிறது.

அதனைப்பற்றி அந்த சீரியலில் சித்ரா உடன் நடித்த தனம் அதாவது சுஜிதா தயவுசெய்து இந்த மாதிரி ஒரு முடிவு எதற்கும் தீர்வாகாது இதனை யாரும் எடுக்க வேண்டாம் என்று கவலையோடு கூறியிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும் ஒன்று. இதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது .இந்த சீரியல் பல திரைப்படங்களை போலத்தான் இருந்தாலும் இதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள்.

கதிர் முல்லை

கதிர் முல்லை

அதுவும் இந்த சீரியலில் கதிர் முல்லைக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்ததாக அனைவரும் ரசிப்பது தனம் கேரக்டர்தான். அவர்தான் இந்த சீரியலின் முதன்மையாகவும் குடும்பத்தை கட்டிக்காக்கும் மூத்த மருமகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த சீரியலில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் அவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகத் தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

பாசமான முல்லை

பாசமான முல்லை

இரண்டு வருடமாக ஒரே சீரியலில் அனைவரும் தொடர்ந்து நடித்து வருவதால் அவர்களுக்குள் நல்ல ஒரு பாசம் இருந்து வந்தாலும் சித்ரா தன்னுடைய சந்தோஷத்தை மட்டும் தான் அனைவரிடமும் காட்டி இருக்கிறார் .அவர் வெளியில் சிரித்து மனதிற்குள்ளே கஷ்டமான ஒரு மனநிலையில் தான் இருந்திருக்கிறார் என்று அறியும்போது அனைவரும் மிகவும் கஷ்டமான ஒரு நிலையில் இருந்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

இதுவரைக்கும் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் காமெடி வீடியோக்களை மட்டுமே பதிவு பண்ணி வந்த இந்த சீரியல் நடிகர் நடிகைகள் தற்போது சித்ராவின் போட்டோக்களையும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள் .அதுவும் தினமும் ஒரு ஸ்டேட்டஸ் வைத்து தங்களுடைய கவலைகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

அனைவருக்கும் கவலை

அனைவருக்கும் கவலை

சித்ராவின் மரணத்தை அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் கூட நடித்தவர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாமல்தான் தவித்து வருகிறார்கள். இருந்தாலும் இந்த மாதிரி ஒரு முடிவை இனியேனும் யாரும் எடுக்காதீர்கள் என்று கண்ணீரோடு சுஜிதா வேண்டுகோள் வைத்திருக்கிறார். எந்த ஒரு பிரச்சனைக்கும் இந்த மாதிரி ஒரு தற்கொலை முடிவு தீர்வு ஆகாது.

சந்தோஷமா இருங்க

சந்தோஷமா இருங்க

நம்முடைய சந்தோஷங்களை மட்டுமல்லாமல் சுக துக்கங்களையும் எவரேனும் ஒருவரிடமாவது மனம் விட்டுப் பேச வேண்டும். வாழும் வாழ்க்கை எதுவரைக்கும் என்று யாருக்குமே தெரியாது ஆனால் வாழும் வரைக்கும் நாமும் சந்தோஷமாக இருந்தது அடுத்தவர்களையும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

போலித்தனம் வேண்டாம்

போலித்தனம் வேண்டாம்

நிலையில்லாத இந்த வாழ்க்கையில் எதற்காக மனதிற்குள்ளேயே கஷ்டங்களையும் கவலைகளையும் நிரப்பி வைத்துக் கொண்டு வெளியில் இந்த ஒரு போலியான ஒரு வேஷம். மனதில் இருப்பதை தனக்கு நெருக்கமாக தன்னை நெருக்கமாக நினைக்கும் நபர்களிடமாவது மனம் விட்டு பேசினால் தானே நிம்மதியாக வாழ முடியும் தயவு செய்து யாரும் இப்படி செய்யாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+