திரிஷ்யம் 3 ஓடிடி விமர்சனம்! கிளைமேக்ஸ் மட்டும் சீரியஸ்.. முதல் பாதி மெகா சீரியல்

Subscribe to Oneindia Tamil

திரிஷ்யம் தொடரின் முதல் இரண்டு பாகங்களும் தென்னிந்திய சினிமாவில் ஒரு பெரிய அலை உருவாக்கியவை. ஜார்ஜ்குட்டியின் அசாத்திய புத்திசாலித்தனமும், குடும்பத்தைக் காப்பாற்ற அவர் எடுக்கும் ரிஸ்க்கான முடிவுகளும் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வந்தன. அந்த எதிர்பார்ப்புடன் வெளியான 'திரிஷ்யம் 3' படம், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மீனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஆனால், முந்தைய பாகங்களின் விறுவிறுப்பும் திரில் அம்சங்களும் இங்கு பெருமளவு குறைந்து போயிருப்பது ஏமாற்றத்தைத் தருகிறது.

Mohanlal starring in the thriller Drishyam 3

முதல் பாதியின் சோர்வு

திரிஷ்யம் வரிசையின் முக்கிய பலம் அதன் புத்திசாலித்தனமான திரைக்கதைதான். அடுத்த நொடி என்ன நடக்கும் என்று யோசிக்க வைக்கும் முடிச்சுகளும், பதற்றமான விசாரணை காட்சிகளும்தான் படத்தை இழுத்துப் போட்டன. ஆனால் திரிஷ்யம் 3-ல் அந்த உற்சாகம் ஆரம்பத்திலிருந்தே காணாமல் போகிறது. படத்தின் முதல் பாதி முழுக்க வழக்கமான குடும்பக் காட்சிகள், தேவையற்ற நீட்டிப்புகள், சாதாரண உரையாடல்களுடன் மெதுவாக நகர்கிறது. காவல்துறையின் தீவிரம், குடும்பத்தின் பயம், ஜார்ஜ்குட்டியின் பயம், இவை எதுவும் சரியாக வெளிப்படவில்லை. பல காட்சிகள் கதைக்கு சேவை செய்யாமல் திணிக்கப்பட்டதுபோல் தெரிகின்றன. இடைவேளை வரை பார்வையாளர்களை இழுக்கும் எந்த சுவாரஸ்யமும் இல்லை. நகைச்சுவையாக சொல்வதென்றால், முதல் பாதியில், மோகன்லாலை விடவும், திருமண புரோக்கர்தான் அடிக்கடி கதைக்குள் வந்து செல்கிறார்.

பூனை-எலி ஆட்டம் எங்கே?

ஒரு க்ரைம் திரில்லருக்கு அடிப்படையான திருப்பங்களும், புத்திசாலித்தனமான முடிச்சுகளும் இந்தப் படத்தில் குறிப்பிடத்தக்க அளவு இல்லை. ஜார்ஜ்குட்டிக்கும் காவல்துறைக்கும் இடையே நடக்க வேண்டிய அந்த புத்திசாலித்தனமான பூனை-எலி ஆட்டம் முற்றிலும் மிஸ்ஸிங். புதிய கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவர்களின் வடிவமைப்பு பலவீனமாக இருப்பதால் அவர்களது செயல்பாடுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முதல் இரண்டு படங்களில் நம்மை திகைக்க வைத்த திரில் காட்சிகள், மூளையைப் பிழியும் உத்திகள் இங்கு எங்குமே இல்லை. படம் முழுக்க ஒரு வறட்சியான, சாதாரணமான போக்கில் செல்கிறது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தரும்.

Mohanlal starring in the thriller Drishyam 3

ஒரே ஆறுதல்

இருப்பினும், படத்தின் கடைசி அரை மணி நேரம் மட்டும் விஷயத்தை கொஞ்சம் சீரியசாக்கியது. குறிப்பாக கிளைமாக்ஸில் ஜார்ஜ்குட்டி கையாளும் புத்திசாலித்தனமான உத்திகளும், ஆபத்தான சூழ்நிலையில் குடும்பத்தைக் காப்பாற்ற அவர் எடுக்கும் துணிச்சலான முடிவும் பழைய திரிஷ்யத்தின் நினைவுகளை வரவழைக்கின்றன. மோகன்லாலின் அனுபவமிக்க நடிப்பு இந்தப் பகுதியில் முழுமையாக வெளிப்படுகிறது. அவரது சாதுரியமான திட்டமிடலும், உணர்ச்சிகரமான நடிப்பும் படத்துக்கு பாராட்டை பெற்றுத் தருகின்றன. இந்த இறுதிக் காட்சிகள் இல்லையென்றால் படம் முழுக்க ஏமாற்றமாகவே முடிந்திருக்கும்.

தொழில்நுட்பம் மற்றும் நடிப்பு

மோகன்லால் தவிர மீனா, எஸ்தர் அனில் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வரம்புக்குள் நடித்திருக்கின்றனர். பின்னணி இசை சில இடங்களில் பதற்றத்தை ஏற்ற முயற்சிக்கிறது. ஒளிப்பதிவு சுமாரானது. ஆனால் இயக்குநர் ஜீத்து ஜோசப் முந்தைய பாகங்களில் காட்டிய அந்த கூர்மையான கதை சொல்லும் திறன் இங்கு குறைந்து காணப்படுகிறது.

பார்க்கலாமா

ஒட்டுமொத்தமாக, 'திரிஷ்யம் 3' ஒரு சுமாரான அனுபவத்தைத் தருகிறது. மெதுவான திரைக்கதை, திரில் அம்சங்களின் பற்றாக்குறை, பலவீனமான கட்டமைப்பு ஆகியவை படத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. முந்தைய இரண்டு பாகங்களின் தீவிர ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக இருக்கலாம். ஆனால் ஜார்ஜ்குட்டியின் கிளைமாக்ஸ் உத்தியை மட்டும் பார்க்க விரும்புபவர்கள் அமேசான் பிரைமில் ஒரு முறை பார்க்கலாம். தொடரின் அடுத்த பாகத்துக்கு இது ஒரு லேசான லீடைத் தருகிறது. மொத்தத்தில், எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் இல்லாத ஒரு படம். பைனல் நோட்ஸ்- திடுக்கிடும் திருப்பங்கள் இல்லை, எப்போ பார்த்தாலும் சகாதேவன் என்ற வார்த்தையால் இரண்டாம் பாதியில் ஏற்படும் கடுப்பு இதெல்லாம் தவிர்த்தால், மோகன்லால் வீடும் அவரது குடும்பமும் அந்த ஊரும் அவ்வளவு நிறைவாக இருக்கிறது. கண்ணுக்கு குளிச்சியாக இதை பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+