மதுராந்தகம், தாராபுரத்தில் அக்னி பரீட்சை! சட்டசபை தேர்தலில் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு வாக்குகள்?
சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்கள் இன்று நடைபெறும் நிலையில் கடந்த முறை நடந்த தேர்தலின் போது இந்த தொகுதிகளில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை காணலாம்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளின் எம்எல்ஏக்களாக மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் அதிமுக சார்பில் வென்றனர். இந்த நிலையில் தேர்தல் நடந்த 3 மாதங்களுக்குள் அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

மதுராந்தகம் தொகுதி வேட்பாளர்கள்
இதையடுத்து இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு இன்று இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், அதிமுக சார்பில் கணிதா சம்பத், திமுக சார்பில் பரந்தாமன், மார்க்சிஸ்ட் சார்பில் சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன், சுயேச்சைகள் என மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
அது போல் தாராபுரத்தில் திமுக சார்பில் சுகன்யா, தவெக சார்பில் சத்தியபாமா, அதிமுக சார்பில் பானுமதி, நாதக சார்பில் கார்த்திகா, கம்யூனிஸ்ட் சார்பில் லட்சுமணன், சுயேச்சைகள் என மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
மதுராந்தகம் வாக்காளர்கள்
இந்த இரு தொகுதிகளிலும் 5 முனை போட்டி நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடிகள் உள்ளன. அங்கு 2.13 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 1,04,926, பெண்கள்- 1,08,797 ஆவர்.
தாராபுரத்தில் வாக்காளர்கள்
அது போல் தாராபுரத்தில் 320 வாக்குச் சாவடிகள் உள்ளன. இங்கு மொத்தம் 2.23 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள்
1,07,285, பெண் வாக்காளர்கள் 1,16,013 ஆவர்.
வாக்கு எண்ணிக்கை
இந்த இரு தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில் மக்கள் யாருக்கு வாக்களித்தனர் என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்.
அதற்கு முன்னர் கடந்த தேர்தலில் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்தன என்பதை பார்க்கலாம்.
மதுராந்தகம்
அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று வென்றார். தவெக சார்பில் போட்டியிட்ட எழில் கேத்ரீன் எழில்மலை 62090 வாக்குகளை பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட அமுலு பொன்மலர் 59838 வாக்குகளை பெற்றார். நாதக சார்பில் போட்டியிட்ட ஜானகிராமன் 4950 வாக்குகளை பெற்றுள்ளார். அதில் தவெக வேட்பாளர் 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் மரகதம் குமரவேல் தோற்கடித்துள்ளார். இந்த தேர்தலில் தவெக 2ஆவது இடத்தையும் திமுக 3ஆவது இடத்தையும் பெற்றது.
தாராபுரம்
அது போல் தாராபுரம் சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா 81100 வாக்குகளை பெற்று வென்றார். திமுகவை சேர்ந்த இந்திராமி 64373 வாக்குகளையும் தவெகவை சேர்ந்த கவுரி சித்ரா 46,438 வாக்குகளையும் நாதக சார்பில் போட்டியிட்ட திவ்யா 6026 வாக்குகளையும் பெற்றனர். இதில் திமுக வேட்பாளரை விட அதிமுக வேட்பாளர் 16727 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். அது போல் அந்த தேர்தலில் திமுக 2ஆவது இடத்தையும் தவெக 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
இடைத்தேர்தல்
மதுராந்தகம், தாராபுரம் இரு தொகுதிகளிலும் தற்போது இடைத்தேர்தல் தொடங்கியுள்ளது. இரு தொகுதிகளுமே அதிமுகவின் கோட்டை என சொல்லப்படும் நிலையில் மக்களின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரும் 9ஆம் தேதி மக்கள் அளித்த தீர்ப்பு யாருக்கு என்பதை காணலாம். இந்த தேர்தல்களில் முறைகேடுகளை தவிர்க்க தேர்தல் ஆணையம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications
