"It's done bro.." தெருவில் இறங்கிய ராகுல் காந்தி.. ஒரே இடத்தில் ஒன்றிணைந்த முக்கிய தலைவர்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இன்று டெல்லியில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி போராட்டம் நடத்தியது. தேர்தல் ஆணையம் தொடர்பான விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில், இன்று போராட்டம் நடைபெற்றது. ஏற்கனவே காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தனித்தனியாக போராட்டங்களை நடத்தியுள்ள நிலையில், இன்று ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியும் களத்தில் இறங்கி போராட்டம் நடத்தியது.

கடந்த இரண்டு வாரமாகவே தேர்தல் ஆணையம் தொடர்பாகவே சர்ச்சை எழுந்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் மொத்தம் 3 ஆணையர்கள் உள்ள நிலையில், அதில் எஸ்ஐஆர் உள்ளிட்ட சில விவகாரங்களில் பிற தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்தார் என்பதே பிரதான குற்றச்சாட்டு!

India Election Commission SIR

போராட்டம்

இதன் காரணமாக தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ், ஆம் ஆத்மி என பல்வேறு கட்சிகள் களத்தில் இறங்கி போராட்டங்களை ஆரம்பித்துவிட்டன. இதற்கிடையே இன்றைய தினம் ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியும் போராட்டத்தை நடத்தியுள்ளன.

இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் இன்று நாடாளுமன்றத்தின் மகர் துவார் பகுதியில் ஒன்று கூடினர். அங்கிருந்து தேர்தல் ஆணையத்தின் தலைமையகமான நிர்வாசன் சதன் நோக்கி பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் பங்கேற்றார். லோக்சபாவில் இப்போது காங்கிரஸுக்கு அடுத்தபடியாக அதிக உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியாக சமாஜ்வாதி கட்சி உள்ளது குறிப்பிடத்தக்கது..

திமுக, ஆம் ஆத்மி

இந்த பேரணியில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் திமுகவையும் பங்கேற்க காங்கிரஸ் முயற்சி செய்தது. இரு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும், இரு கட்சிகளுமே பேரணியில் பங்கேற்கவில்லை. இந்த இரு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இப்போது இல்லை என்றாலும், நாடாளுமன்றத்தில் தேர்தல் ஆணையர் விவகாரத்தில் இந்தியா கூட்டணியின் நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக இரு கட்சிகளுமே அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் இறுதியில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை தொடர்ந்து போராட்டங்களை நடத்த இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தை சீட்டிங் கமிஷன் என விமர்சிக்கும் காங்கிரஸ் நாடு முழுக்க இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளது.

தொடர் போராட்டம்

அதன்படி அக்டோபர் 10 முதல் 20ம் தேதி வரை 'வாக்கை காப்போம், நாட்டை காப்போம்' என்ற பெயரில் தொகுதி அளவில் பிரசாரம் நடத்தப்பட உள்ளது. சைக்கிள் மற்றும் இருசக்கர வாகன பேரணிகள், துண்டு பிரசுரங்கள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் அக்டோபர் 25 முதல் நவம்பர் 25 வரை பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. நவம்பர் 1ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட பேரணியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பதவி நீக்க தீர்மானம்

நவம்பர் 25 மற்றும் 26ம் தேதிகளில் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 6 தனித்தனி பேரணிகள் 'சலோ டெல்லி' என்ற பெயரில் தொடங்கும். இவை அனைத்தும் நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு தினத்தன்று டெல்லியில் ஒன்று சேரும். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 26க்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்போது இந்த விவகாரத்தை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மேலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+