எதிர்நீச்சல்: தாலியை கழட்டி வீசிய ஆதிரை.. கொடூரனாக மாறிய குணசேகரன்.. பரபரப்பின் உச்சம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரைக்கு பிடிக்காமல் நடுரோட்டில் வைத்து குணசேகரன் சொன்னதால் கரிகாலன் தாலி கட்டுகிறார்.
இந்த நிலையில் தனக்கு பிடிக்காத தாலி வேண்டாம் என்று ஆதிரை தாலியை கழட்டி வீசுகிறார்.
இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பார்ப்போடு காத்திருந்த ஆதிரை திருமணம் நடத்திவிட்டது. ப்ரோமோவில் கரிகாலன் ஆதிரை கழுத்தில் தாலி கட்டுவதை பார்த்த ரசிகர்கள் இது உண்மையாக இருக்காது. யாருடைய கனவாக இருக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு கடைசியில் அதிர்ச்சி தான் கிடைத்திருக்கிறது.
கோவிலில் அருணுக்காக காத்திருந்த ஆதிரையை குணசேகரன் கரிகாலனோடு சென்று தரதரவென இழுத்தப்படி நடு ரோட்டில் வைத்து கரிகாலனிடம் தாலி கட்ட சொல்ல கரிகாலனும் தாலி கட்டி விடுகிறார். இதை பார்த்து ஜனனி, ரேணுகா, நந்தினி மூவரும் தெருவில் விழுந்து அழுகின்றனர். அவர்களை இனி வீட்டு பக்கம் வந்துராதீங்க கொன்னே போட்டு விடுவேன் என்று குணசேகரன் மிரட்டிக்கொண்டு சென்றிருக்கிறார்.
அதுபோல ஆதிரை மற்றும் அருண் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தது நான் தான் என்று ஜனனி பழியை ஏற்றுக்கொண்டாலும் அதை குணசேகரனும் அவருடைய குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளாமல் மிரட்டி இருக்கின்றனர். அதே நேரத்தில் வீட்டில் விசாலாட்சி மற்றும் ஈஸ்வரி இருவரும் கோவிலில் என்ன நடந்ததோ என்று எதிர்பார்ப்பில் அதிர்ச்சியோடு காத்திருக்கின்றனர்.
ஆனால் ஈஸ்வரிக்கு மட்டும் கோவிலில் நடந்த விஷயங்களை ரேணுகா சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் ஆதிரைக்கு வலுக்கட்டாயமாக தாலி கட்டி காரில் அவரை கூட்டிக்கொண்டு வரும்போது தனக்கு வாமிட் வருவது போல நடித்த ஆதிரை தனது கழுத்தில் இருந்து தாலியை அறுத்து வெளியே வீசி விடுகிறார். இதை பார்த்து கரிகாலன் பதறி அடித்து காரை நிறுத்தி மீண்டும் தாலியை எடுத்து ஆதிரை கழுத்தில் கட்டுகிறார்.
இந்த நிலையில் ஆதிரையின் செயலை பார்த்து கோபமான குணசேகரன் இவளை வீட்டுக்கு கூட்டிட்டு போனா சரிப்பட்டு வராது. அப்படியே வண்டியை ரிஜிஸ்டர் ஆபீசுக்கு வீடு இன்னைக்கே கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணி ஆகணும் என்று கூறுகிறார்.
இந்த நிலையில் ஆதிரைக்கு கட்டாய திருமணம் நடந்திருப்பதால் இனி தனக்கு பிடிக்காத திருமண வாழ்க்கை எனக்கு வேண்டாம் என்று அதை தூக்கி எறிந்து மீண்டும் அருணோடு சேர வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜனனி அப்பத்தாவை நம்பி தான் ஒவ்வொரு செயலும் செய்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இதுவரைக்கும் ஆதிரைக்கு தன்னுடைய அண்ணன் மனைவிகள் சப்போர்ட் செய்து கொடுத்த நிலையில் இனி ஆதிரை சுயமாக முடிவெடுக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனாலும் பொறுத்திருந்து பார்ப்போம் ஆதிரை எதிர்நீச்சல் அடிக்க போகிறாரா? அல்லது இதே வாழ்க்கையில் மூழ்கப் போகிறாரா? என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரியும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications