அப்பத்தாவின் செயலைப் பார்த்து கதறி அழும் மருமகள்கள்.. முடிவை மாற்றிய குணசேகரன்... சக்தியின் அதிரடி
தன்னுடைய சேர் பற்றி பேசி பட்டம்மாள் வீட்டு மருமகள்களை அழ வைத்து இருக்கிறார்.
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்காக குணசேகரன் பட்டமாவின் 40% ஷேர் என்னுடைய பெயரில் வேண்டும் என்று கேட்கிறார்.
பட்டம்மாவின் முடிவைப் பற்றி மாற்றி யோசிக்க சொன்ன நந்தினி மற்றும் ரேணுகாவை பட்டம்மாள் அவமானப்படுத்துகிறார்.
ஜனனியை பற்றி அண்ணிகள் பேசியதால் சக்தி ஜனனிக்கு ஆதரவாக அனைவரையும் திட்டுகிறார்.

குணசேகரனின் மாஸ்டர் பிளான்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடந்து வருகிறது. ஆதிரைக்கு குணசேகரன் கரிகாலன் உடன் தான் திருமணத்தை நடத்தி வைப்பேன் என்று பிடிவாதம் ஆக இருந்த நிலையில், நேற்றைய எபிசோடில் பட்டம்மாள் ஆதிரையின் திருமணத்தை நிறுத்தி விட வேண்டும். அவளுக்கு பிடித்த அருணோடு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று சொன்னதால் சரி என்று குணசேகரன் சொல்ல, அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்று பட்டம்மாள் கேட்க, உன்னிடம் இருக்கும் 40% ஷேர் என்னுடைய பெயருக்கு வர வேண்டும் என்று குணசேகரன் கூறுகிறார்.

வில்லியாக மாறும் ஜான்சிராணி
குணசேகரின் டீலிங்கிற்கு பட்டம்மாள் சரி என்று சொன்னதும் குணசேகரன் இந்த திருமணத்தை இப்போது நிறுத்தி வைக்கிறேன் என்று சொன்னதும் அருகில் இருந்த ஜான்சி ராணி மற்றும் கரிகாலன் இருவரும் பிரச்சனை செய்ய, இருவரையும் வீட்டை விட்டு அடித்து துரத்துகிறார். வெளியே சென்ற ஜான்சி ராணி நான் வெத்தலை பாக்கு மாத்தும்போது அதை வீடியோ எடுத்தியா? என்று கரிகாலனிடம் கேட்க, இல்லையே அன்னைக்கு அவசரத்தில் எடுக்காமல் விட்டுவிட்டேன் என்று சொல்ல, இவர்களுக்கு பிரச்சனை இனி என்னால் தான். இனி நான் என்ன செய்யப் போகிறேன் பார் என்று வீராப்போடு இருவரும் கிளம்பி செல்கிறார்கள்.

அவமானப்படுத்தும் அப்பத்தா
இந்த நிலையில் பட்டம்மாள் 40% ஷேர் குணசேகரனுக்கு கொடுப்பதற்கு சரி என்று சொன்னதால் ரேணுகா மற்றும் நந்தினி இருவரும் என்னை இப்படி செஞ்சிட்டிங்க என்று அப்பாத்தாவிடம் கேட்க? ஏன் நான் செஞ்ச செயலால் உங்களுக்கு ஷேர் கிடைக்காது என்று நினைக்கிறீர்களா? உங்க பிள்ளைகளுக்கு எதுவும் கிடைக்கலையே என்று ஃபீல் பண்றீங்களா? என்று கேட்க, அதைக் கேட்டு நந்தினியும், ரேணுகாவும் அழுகின்றனர். நாங்கள் உங்களை இப்படி எல்லாம் நினைக்கவே இல்லை. நீங்கள் தானே இந்த ஷேர் வைத்து தான் குணசேகரின் ஆட்டத்தை அடக்க போகிறேன் என்று சொன்னீர்களே? அதை மறந்துட்டீங்களோனு நெனச்சேன், என்று நந்தினி நியாபகப்படுத்த பட்டம்மாள், நந்தினி, ரேணுகா, ஈஸ்வரியை, அவமானப்படுத்துகிறார்.

ஜனனிக்கு சப்போர்ட் செய்யும் சக்தி
இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் குணசேகரன் கரிகாலனுக்கு ஆதிரையை கல்யாணம் செஞ்சு வச்சா அங்க அவங்கிட்ட ஒரு சொத்து இல்லை. நம்மளுக்கு சொத்து கிடைக்காது. ஆனா எஸ் டி ஆர் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வச்சா அவன் சொத்தை கொஞ்சம் கொஞ்சமா நாம எடுத்துக்கலாம் என்று புது பிளான் போடுகிறார். அடுத்ததாக சமையலறையில் ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி மூவரும் இனி அவங்கள நம்பி நமக்கு ஒன்னும் இல்ல என்று வெறுமையோடு பேசிக் கொண்டிருக்க அப்போது அங்க வரும் சக்தி யார சொல்லிட்டு இருக்கீங்க என் பொண்டாட்டிய சொன்னா நான் கேட்டுகிட்டு இருக்க மாட்டேன். இங்கு யாருக்கும் அவளை குறை சொல்வதற்கு தகுதி இல்லை என்று சத்தமாக திட்டுகிறார். இந்த பிரமோ தற்போது இன்றைய எபிசோடு காண எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications