கதிரால் அவமானப்படும் குணசேகரன்.. கடைசி நேரத்தில் ரிவிட் அடித்த ஆதிரை.. நடக்கப் போவது இதுதானா?
போலீஸ் ஸ்டேஷனில் எஸ் பி குணசேகரனை அவமானப்படுத்துகிறார்.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மார்ச் மாதத்திற்கான ஆறாவது நாளுக்கு நாளின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
கதிர் அருணை அடித்ததற்காக எஸ்பி ஆபிசுக்கு குணசேகரன் உடன் கதிர் வந்திருக்கிறார்
குணசேகரனை எஸ்பி அவமானப்படுத்துகிறார்.
ஆதிரை நான் உங்களை எல்லாம் தப்பாக புரிந்து விட்டேன் என்று ஜனனியிடம் மன்னிப்பு கேட்கிறார்.

குணசேகரனின் கேள்வி
எதிர்நீச்சல் சீரியலில் கடந்த வாரத்தில் ஆதிரை அருணை சந்தித்ததை தெரிந்து கொண்ட கதிர், நடுத்தெருவில் அருணை அடித்த வீடியோ வைத்து அருணின் அண்ணன் போலீஸ் கம்பிளைன்ட் கொடுத்து இருந்ததால் கதிரை தேடி வீட்டிற்கே போலீஸ் வந்திருந்தனர். அதற்கு குணசேகரன் நாங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறோம் என்று அப்போது கூறி அனுப்பி வைத்திருந்தார். பிறகு தன்னுடைய தம்பி கதிரிடம் அதான் எல்லா பக்கமும் ஆளாளுக்கு ஒவ்வொருத்தவங்க செல்போன் தூக்கிட்டு அலையறாங்கள, அப்படி யாரும் இல்லாத இடத்தில் வைத்து அடித்து இருக்கக் கூடாதா? என்று கேட்டிருந்தார்.

அவமானப்படும் குணசேகரன்
இன்று போலீஸ் ஸ்டேஷனுக்கு கதிர் குணசேகரனும் சென்று இருக்கின்றனர். அதே நேரத்தில் அருண் உடைய அண்ணன், என்னுடைய தம்பியை போலீஸ் ரோட்டில் வைத்து அடித்து இருக்கான் சார் என்று போலீஸிடம் சொல்ல, அதற்கு கதிர் அங்கிருந்து என்ன ரொம்ப ஓவரா பண்ணிக்கிட்டு இருக்க என்று அவரையும் போலீஸ் முன்னாடியே அடிக்கப் பாய்கிறார். அதனால் போலீஸ் என்ன ரொம்ப ஓவரா தள்ளிக்கிட்டு அலையுற என்று கதிரை திட்ட அதற்கு குணசேகரன் என்ன எஸ்பி சார் வார்த்தைகள் எல்லாம் ரொம்ப கடுமையாக இருக்கு என்று மிரட்டுகிறார். அதற்கு போலீஸ் நான் நியாயத்தை பேசிகிட்டு இருக்கேன் என்று கறாராக பேசுகிறார்.

மனம் மாறிய ஆதிரை
ஏற்கனவே ஆதிரை கண் விழித்ததும் ஜனனியிடம் இப்பதான் எனக்கு எல்லாம் புரியுது அண்ணி என்று அழுதபடியே ஆதிரை சொல்ல, அதற்கு ஜனனி நாங்க உனக்கும் அருணுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறோம் என்று ஆதிரை சமாதானம் செய்து கொண்டிருக்கிறார். இனி குணசேகரனை எதிர்த்து ஜனனி மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் அனைத்து மருமகள்களும் ஆதிரைக்கு சப்போட்டாக திருமண விஷயத்தில் முடிவெடுத்து அதற்கான முயற்சியில் ஈடுபட இருக்கின்றனர்.

திருமணம் எப்படி
ஏற்கனவே கரிகாலனும் அவருடைய அம்மா ஜான்சிராணியும் எப்படியாவது திருமணத்தை அவசரமாக முடித்து விட வேண்டும் என்று இருக்கும் நிலையில், நேற்று மருத்துவமனைக்கு வந்த கரிகாலனை சக்தி அவமானப்படுத்தி திட்டி இருக்கும் நிலையில் இனி மருத்துவமனையில் நடந்த விஷயத்தை பற்றி இன்று கரிகாலனும் ஜான்சி ராணியும் குணசேகரன் போட்டுக் கொடுக்க இருக்கும் நிலையில், அடுத்ததாக இரவோடு இரவாக ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் திருமணம் செய்து வைக்க குணசேகரன் முடிவெடுப்பாராக தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் மருத்துவமனையில் இருந்து வருவதற்குள் அருணோடு ஜனனி ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து வைக்கப் போகிறாரா? என்று பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications