எதிர்நீச்சலில் கடத்தல் ட்ராக் ஓவர்.. குணசேகரன் முகத்தில் ஏமாற்றம்.. இப்பவாவது இதை செஞ்சாங்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் குணசேகரன் பிளானை சக்தி மற்றும் கதிர் உடைத்து இருக்கின்றனர். சித்தார்த்தை சக்தியிடம் இருந்து கடத்திக் கொண்டு வந்த ராமசாமி மெய்யப்பன் மற்றும் கிருஷ்ணசாமி மெய்யப்பனுக்கு இப்போது ஏமாற்றம் கிடைத்திருக்கிறது.

இந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு இப்போது சீரியலில் இல்லை என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது ஆரம்பத்தில் இந்த சீரியலில் சண்டை சச்சரவுகள் ஒரு பக்கம் இருந்தாலும் சுவாரஸ்யமான காமெடி காட்சிகளும் இருந்து கொண்டே இருக்கும். அதிலும் நந்தினி மற்றும் ரேணுகா இருவரும் கிச்சனுக்குள் இருந்தபடியே குணசேகருக்கு கவுண்டர் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

Ethirneechal Serial April 15th 2024 promo and episode full update

அதுபோல கரிகாலனும் தன்னுடைய வில்லத்தனத்தையும் மீறி காமெடி செய்து கொண்டிருப்பார். ஆனால் இப்போது சீரியல் மொத்தமாக மாறி இருக்கிறது. இது ரசிகர்களுக்கு சுவாரசியம் இல்லை என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. இப்படியான நிலையில் சில மாதங்களாகவே இந்த சீரியலில் ஒரே கடத்தல் காட்சிகளும், திருமண காட்சிகளும் தான் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கிறது.

திருமண போராட்டங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியாக இருக்கின்றனர். இப்படியான நிலையில் சீரியலில் கதையை மாற்ற வேண்டிய இடத்தில் இயக்குனர் இருக்கிறார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் கதிருடைய ஆட்கள் கடத்தி வைத்திருந்த சித்தார்த்தை ராமசாமி மெய்யப்பன் மற்றும் கிருஷ்ணசாமி மெய்யப்பன் கடத்தி வைத்திருந்த நிலையில், காருக்குள் தூங்கிக் கொண்டிருந்த சித்தார்த் சக்தி மற்றும் கதிர் கண்ணில் மீண்டும் பட கதிர் ப்ளான் படி சக்தி காரோடு சித்தாரத்தை கடத்துகிறார்.

மறுபக்கத்தில் ஜனனியின் தங்கச்சி மற்றும் அம்மாவை கடத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில் அவர்கள் இருவரையும் ஜனனி கூட்டிக்கொண்டு வீட்டிற்குள் வரும்போது உமையாளிடம் ஜனனியின் தங்கச்சி எங்களுக்கும் அந்த சித்தார்த்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் நீங்கதான் எங்களை கடத்தி வெச்சிருந்தீங்கன்னு எங்களுக்கு தெரியும் என்று சொல்ல உமையாள் ஜனனியின் தங்கச்சியை அடிக்க போகும்போது ஜனனி அவருடைய கையைப் பிடித்து முறுக்குகிறார்.

அடுத்ததாக சித்தார்த் காணாமல் போன விஷயத்தை ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி இருவரும் குணசேகரனுக்கு போன் போட்டு சொல்ல, குணசேகரன் ஆடிப் போய் இருக்கிறார். அதே நேரத்தில் இதுவரைக்கும் எல்லா இடத்திலும் குணசேகரன் வெற்றி பெற்றுக் கொண்டே இருந்த நிலையில் இப்போது ஜனனி குரூப் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி குணசேகரன் ஒரு பக்கத்தில் சித்தார்த்துக்கும் தர்ஷினிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் ஜனனி குரூப் வந்தனா மற்றும் சித்தார்த்துக்கு திருமணம் செய்து வைக்க போகின்றனர். இதில் யார் முயற்சி வெற்றி பெறப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அதேபோல எதிர்நீச்சல் பட்டம்மாள் மீண்டும் சூட்டிங்கில் கலந்து கொண்டு இருப்பதால் அவர் இந்த கல்யாணத்தில் என்ட்ரி கொடுப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+