எதிர்நீச்சலை தொடர்ந்து.. பாக்கியலட்சுமி சீரியலிலும் அதே ட்ரிக்.. அப்போ கதை இனி இதுதானா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்பட்டு டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அந்த சீரியலில் நடக்கும் சில நிகழ்வுகளை அப்படியே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலும் காப்பி செய்து இருக்கின்றனர்.
இதனால் இனி பாக்கியலட்சுமி சீரியலில் கதையில் அதிரடியான மாற்றங்கள் வர இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக ஒரு சீரியல் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பாராட்டப்பட்டால் அதைத் தொடர்ந்து அதே கதை பாணியிலே பிற சீரியல்கள் கதையை நகர்த்துவது வழக்கமாக பல வருடங்களாகவே நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நடப்பது தான். ஒரு திரைப்படம் வெற்றி அடைந்தால் அதேபோல அடுத்தடுத்து திரைப்படங்கள் வரிசை கட்ட தொடங்கி விடும்.
அதே நேரத்தில் சில நுணுக்கங்கள் பிற சீரியல்களிலோ அல்லது திரைப்படங்களிலோ இருக்கும் போது அதை ரசிகர்கள் கண்டுபிடித்து இப்போது இருக்கும் இணையதள பயன்பாட்டால் அதை கலாய்த்து வருவதும் வாடிக்கையாகி இருக்கிறது. அந்த மாதிரி தான் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடந்த நிகழ்வுகளை அப்படியே பாக்கியலட்சுமி சீரியலிலும் பிரதிபலிப்பதை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
அப்படி என்னதான் நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். எதிர்நீச்சல் சீரியல் சன் டிவியில் அதிகமான ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியில் முன்னணி இடத்தை வகுத்து வருகிறது. கடந்த சில இரண்டு வாரங்களாக டிஆர்பியில் முதலிடத்தில் இருந்த நிலையில் இந்த வாரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும் முதல் இடத்தை விட ஒரு சில புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருக்கின்றது.
அந்த அளவிற்கு அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதுவும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இந்த அளவிற்கு டிஆர்பி பெறும் என்பது யாரும் எதிர்பார்க்காதது தான். அதே நேரத்தில் இந்த சீரியலின் கதை பிற சீரியல்களை விட வித்தியாசமாக இருப்பதாகத்தான் ரசிகர்கள் தொடர்ச்சியாக இதை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.

சரி... இப்போ என்ன நடந்தது என்ற பிரச்சனைக்கு வருவோம். எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணம் நடைபெற்றதும் அடுத்த நாளே ஆதிரையின் அம்மாவாக விசாலாட்சி கேரக்டரில் நடிக்கும் சத்திய பிரியா தான் காசிக்கு போகிறேன் என்று கூறி விட்டு சென்றிருந்தார். ஏற்கனவே இவர் இந்த சீரியலில் ஒரு சில முறை இப்படித்தான் நான் திடீரென்று காசிக்கு போகிறேன் என்று கூறியிருப்பார்.
ஆனால் கதைப்படி பார்த்தால் எந்த அம்மாவும் தன்னுடைய மகள் தனக்கு பிடிக்காத வாழ்க்கையில் வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதில் எந்த கவலையும் இல்லாமல் போக மாட்டார். சரி இது அவர்களுக்கு ஏதோ பிரச்சனை என்று ரசிகர்களும் புரிந்து கொண்டார்கள். அதுபோல ஒரு சில நாட்களிலே சத்யபிரியா தன்னுடைய மகன் மருமகளோடு வெளிநாட்டில் எடுத்த வீடியோக்கள் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதனால் தான் இவர் சீரியலில் காசிக்கு போவது போன்று ஏற்பாடு நடந்திருந்தது.
அதுபோலவே தற்போது பாக்கியலட்சுமி சீரியலிலும் கதையை மாற்றி வைத்திருக்கிறார்கள். இதுவரைக்கும் பாக்கியாவை கோபி விட்டுவிட்டு சென்றிருந்தாலும் சில நேரங்களில் மாமியார் சப்போர்ட் கிடைத்தாலும் பல நேரங்களில் மாமியார் கொடுமை இருக்கத்தான் செய்தது. எதற்கெடுத்தாலும் இப்போதும் பாக்கியா அதை செய்ய கூடாது இதை செய்யக்கூடாது என்று பாடாய்படுத்திக் கொண்டிருந்தார். இப்போது ஒரு சில எபிசோடுகளாக தான் பாக்யாவிற்கு ஃபுல் சப்போர்ட் கொடுத்திருக்கின்றார்.
இந்த நிலையில் திடீரென்று இன்றைய எபிசோட்டில் தான் காசிக்கு செல்வதாக அவரும் பேக்கை கையில் தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டார். ஏற்கனவே நிஜத்தில் அவருடைய மகனுக்கு சில நாட்களுக்கு முன்புதான் ஹைதராபாத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. அதற்கு சீரியல் அணியினர் அனைவரும் போயிருந்தனர். இந்த நிலையில் தன்னுடைய குடும்பத்தோடு நேரத்தை கழிப்பதற்காகவா அல்லது வேறு ஏதும் பிரச்சனையினால் இவர் திடீரென்று போகிறாரா என தெரியவில்லை.
ஆனாலும் எதிர்நீச்சல் விசாலாட்சி சொன்ன அதே டயலாக்கை இவரும் சொல்லிவிட்டு பேக்கை கையில் தூக்கி காசிக்கு கிளம்பி விட்டார். மொத்த குடும்பமும் ஈஸ்வரியை இன்று அணி வழியனுப்பி வைத்திருக்கிறது. இந்த நிலையில் இனி பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருமா அல்லது செழியன் மற்றும் மாலினியின் காதல் பிரச்சனை நோக்கி கதை மாறப்போகிறதா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications