இறந்தும் வாழும் மாரிமுத்து.. இரண்டு ஆதி குணசேகரனும் ஒரே இடத்தில்.. கண்ணீரில் ரசிகர்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து சில வாரங்களுக்கு முன்பு திடீரென்று மாரடைப்பு காரணமாக காலமானார்.
அவருடைய இறப்பிற்கு பிறகு அவர் நடித்து வந்த குணசேகரன் கேரக்டரில் நடிகர் வேலராமமூர்த்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் வேல ராமமூர்த்தியும், மாரிமுத்துவும் கடைசியாக ஒன்றாக நடித்த திரைப்படத்தின் போஸ்டரை வேலராமமூர்த்தி வெளியிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து குறித்து அவருடைய ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களையும் அவர் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் சின்னத்திரையில் சமீப காலமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியலாக தான் இருக்க முடியும். இந்த சீரியலின் கதை குறித்தும் இதில் நடிக்கும் நடிகர்களின் நடிப்பு திறமை குறித்தும் அரசியல் பிரமுகர்களும், சாதாரண மக்களும் பேசி கொண்டிருக்கின்றனர். இளம் தலைமுறையினர்களையும் இந்த சீரியல் சின்னத்திரையை நோக்கி வர வைத்திருக்கிறது என்று சொல்லலாம்.
அந்த அளவிற்கு இந்த சீரியல் வெற்றி அடைவதற்கு காரணமாக சீரியல் இயக்குனரும், கதை ஆசிரியரும் இருந்தாலும் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் வாழ்ந்து வந்த நடிகர் மாரிமுத்துவும் முக்கிய காரணம். ஆனால் விதி அவரை திடீரென்று இந்த உலகத்தை விட்டு எடுத்துக் கொண்டது. இந்த நிலையில் அவருடைய மறைவு குறித்து அவருடைய நண்பர்கள் மட்டுமல்லாமல் சீரியல் ரசிகர்களும் தங்களுடைய வருத்தங்களை ஒவ்வொரு நாளும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து கடைசியாக நடித்த திரைப்படத்தின் போஸ்டரை தற்போது குணசேகரனாக நடித்து வரும் வேல ராமமூர்த்தி தன்னோட சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார்.அந்த வகையில் அந்த திரைப்படத்தில் நடிகர் மாரிமுத்துவும் வேலராமு மூர்த்தியும் அண்ணன் தம்பியாக நடித்திருக்கிறார்கள்.
அந்த திரைப்படத்திற்கு வீராயி மக்கள் என்ற தலைப்பு வைத்திருக்கின்றனர். இது கிராமத்து பங்காளிகளின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாம். அது போல நடிகர் மாரிமுத்து கடைசியாக தன்னோடு நடிக்கும் போது எதிர்நீச்சல் சீரியல் குறித்து பேசிய பலவற்றையும் ஏற்கனவே வேல ராமமூர்த்தி பகிர்ந்து இருக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவை அதிகமாக மிஸ் பண்ணுவதாக அவருடைய ரசிகர்கள் கூறிவரும் நிலையில் அவர் கடைசியாக நடித்த "வீராயிமக்கள்" என்ற திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக இருக்கிறதாம். அந்த திரைப்படத்தை நாகராஜ் கருப்பையா தான் எழுதி இயக்கியும் இருக்கிறாராம். ஆனாலும் ரசிகர்கள் மாரிமுத்துவின் நடிப்பை மீண்டும் பார்ப்பதற்காக கண்ணீரோடு காத்திருப்பதாக கருத்து தெரிவித்து விடுகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications