பூனைக்கண் புவனேஸ்வரி வார்த்தை, டோட்டலா மாறிய லைஃப்! கிசுகிசுவால் நடிகர், நடிகைக்கு திருமணம்: பிரபலம்
சென்னை: கிசுகிசுக்கள் காரணமாக, பிரபலங்களின் வாழ்க்கையில் நல்லதும் நடக்கும், சில சமயம் குடும்பத்தையும் சிதைத்துவிடும்.. ஆனால் உண்மை ஓரளவாவது இருக்கும் கிசுகிசுக்கள், நிச்சயம் குடும்பத்தை பிரிக்க செய்கின்றன என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.
TamilNadu Times என்ற யூடியூப் சேனலுக்கு சபிதா ஜோசப் சமீபத்தில் தந்திருந்த பேட்டியில், பத்திரிகைகளில் வெளியாகும் கிசுகிசுக்கள் பற்றி பேசியிருந்தார்.. அதில், "சினிமா துறையில் தற்போது நிறைய விவாகரத்துகள் நடக்கின்றன.. இந்த விவாகரத்து சம்பந்தமாக வீட்டு பெரியவர்கள் எவ்வளவோ சொன்னாலும், அதை வாரிசுகள் ஏற்பதில்லை..

புரிதல் தம்பதிகள்
ரஜினி சாரே, தன்னுடைய மகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால், தனுஷூடன் வாழவிரும்பவில்லை என்று மகள் உறுதியாக சொல்லிவிட்டாராம். ஜிவி பிரகாஷ் தரப்புக்கும், ஏஆர் ரஹ்மான் சார் வீட்டில் அட்வைஸ் சொல்லி உள்ளார்கள். ஆனால், கேட்கவில்லை. விட்டுக்கொடுத்து போக வேண்டும் என்று, பெரியவர்கள் அன்றைய காலத்திலேயே சொல்லி வைத்துள்ளார்கள்..
ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினியாகட்டும், விஜயகாந்த் மனைவி பிரேமலதாவாகட்டும், சத்யராஜ் மனைவி உமா மகேஸ்வரியாகட்டும். தங்கள் கணவன் யாருடன் நடித்துவிட்டு வந்தாலும், அதை ஒரு தொழிலாகவே பார்த்தார்கள்.. அதனால்தான் தங்களின் குடும்பங்களை அவர்களால் நிர்வகிக்க முடிந்தது. ஒருசிலர் வீட்டுக்குள்ளே நுழைந்ததும், சினிமா கதையை பேசவே மாட்டார்கள். நடிகை ரஞ்சிதா அப்படித்தான், சினிமாவை தவிர வேறு எது பேசினாலும் நல்லா பேசுவார்..
கிசுகிசுக்களால் நடந்த திருமணம்
கிசுகிசுக்கள்தான் பலரையும் பாதிப்படைய செய்துவிடும். சிலசமயம் கிசுகிசுவால் திருமணமே ஒருவருக்கு நடந்துள்ளது. இதுதான்டா போலீஸ் நடிகர், டாக்டர் ராஜசேகர், நடிகை ஜீவிதா இருவரும் சினிமாவில் நடித்தபோது, இவர்களுக்குள் காதலே கிடையாது.. 2 படங்களில் சேர்ந்து நடித்திருந்தார்கள்.
உடனே ஒரு பிஆர்ஓ, அவர்களுக்குள் காதல் என்று கிளப்பிவிட, அதை பத்திரிகையாளர்கள் அப்போது பரபரப்பான செய்தியாக எழுத, கடைசியில் அவர்கள் 2 பேருமே திருமணம் செய்து கொண்டார்கள். கிசுகிசு வளர்ந்ததால், நடந்த திருமணம் அது.
சூர்யா, ஜோதிகா இருவருக்கும் முதல் படத்திலிருந்தே காதல் வளர்ந்து கொண்டிருந்தது. இது ஒருகட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு தெரிந்து, செய்தி போட்டுவிட்டார்கள். இதை பார்த்ததும் சூர்யா, பத்திரிகையாளர்களை கன்னாபின்னவென்று திட்டினார். ஆனால், சூர்யா, ஜோதிகா 2 பேருமே காதலை வெளிப்படையாக சொன்னதால்தான், அவர்களை சிவக்குமாரால் பிரிக்க முடியவில்லை.. இல்லாவிட்டால், இவர்களை பிரித்து காட்டுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார் சிவக்குமார். ஆனால் அது நடக்கவில்லை.
வைரமுத்து - டைமண்டு
பத்திரிகையாளர்கள் செய்வது எழுதுவது நல்லதாகிவிடும், சில சமயம் சொதப்பலாகிவிடும்.. கிசுகிசுக்களால் உண்மைத்தன்மை இருந்தால் சம்பந்தப்பட்ட குடும்பத்தை குலைத்துவிடும். இதுபோன்ற கிசுகிசுக்களை எங்களை போன்ற பத்திரிகையாளர்களுக்கு தந்ததே, அசிஸ்டென்ட் டைரக்டர்கள், கேமராமேன்கள்தான். கிசுகிசு என்பது வளர்ச்சிக்குரியதுதான்.
ஒருமுறை வாரமலர் இதழில், டைமண்டு என்ற பெயரில் வைரமுத்து பற்றி நிறைய கிசுகிசுக்கள் வந்தன.. உடனே அவரது நண்பர்கள், அந்த பத்திரிகையில் வெளிவந்ததை சுட்டிக்காட்டி கோபப்பட்டுள்ளனர்.. அதற்கு வைரமுத்து, "நான் ஃபீல்டில் இருக்கிறேன் என்று சொல்வதே அவர்கள்தான், அவர்கள் மீது கோபப்பட வேண்டாம் " என்றாராம்.
பூனைக்கண் புவனேஸ்வரி
ஒருமுறை நடிகை பூனைக்கண் புவனேஸ்வரி என்னிடம், சினிமா சான்ஸ் எதுவும் இல்லை, என்னை பற்றி பப்ளிசிட்டி வரணும், அதுபோல ஏதாவது எழுதுங்களேன் என்று கேட்டார்..
அதற்கு நான், சினிமாவில் நடிக்க வந்தால் அட்ஜஸ்மென்ட் செய்யணுமே? என்று கேட்டேன்.. அதற்கு புவனேஸ்வரி, "அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் என்ன தப்பு" என்று கேட்டார்.. உடனே அவர் சொன்னதையே தலைப்பாக வைத்து குங்குமம் பத்திரிகையில் எழுதினேன். உடனே ஓவர்நைட்டில் 19 சீரியலில் புக் ஆனார் புவனேஸ்வரி. இதை என்னிடமே அவர் சொன்னார். அதனால், கிசுகிசுக்கள் நல்லதும் செய்யும், தொந்தரவும் செய்யும்.
ஆனால், 120 படங்களில ஜோடியாக நடித்த பிரேம்நசீர் - ஷீலா பற்றி, எந்த கிசுகிசுவும் ஒருபோதும் வந்ததில்லை.. அவர் முஸ்லிம், ஷீலா கிறிஸ்டியன்.. மிகவும் பிரபலமான ஜோடி என்றாலும், அப்படி தவறான கண்ணோட்டமே யாருக்கும் வந்ததில்லை" என்றெல்லாம் பேசியிருக்கிறார் சபிதா ஜோசப்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications