பேச மாட்டியா? துணை நடிகையின் "வாய்ஸ்" கேட்டாரா பிரபல நடிகர்? வாங்கிய நகை எங்கே? சுகுமாரிடம் விசாரணை
சென்னை: திருமணம் செய்து கொள்வதாக சொல்லி, துணை நடிகையுடன் நெருங்கி பழகி, 6 லட்சம் ரூபாய் மோசடி செய்த, காதல் பட நடிகர் சுகுமார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை தந்த புகாரின்பேரில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடிகர் பரத் நடிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், 2004ல் வெளிவந்த "காதல்" படத்தில், பரத் நண்பராக நடித்தவர் சுகுமார். கலகலப்பு, பொன்னான நேரம், விருமாண்டி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர், வடபழனியில் வசித்து வரும், 35 வயதான துணை நடிகையை, திருமணம் செய்வதாகக் கூறி நெருங்கி பழகினாராம்.. ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு இருவரும் சென்றதை, சுகுமார் வீடியோவையும் எடுத்திருக்கிறாராம். ஆனால், தற்போது அந்த பெண்ணை ஏமாற்றிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
நடிகர் மீது புகார்: வடபழனியைச் சேர்ந்த அந்த நடிகை, ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது.. ஆனால், கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், 3 வருடங்களுக்கு முன்பாக நடிகர் காதல் சுகுமாரனுக்கும் தனக்கும் பழக்கம் ஏற்பட்டு பின் காதலித்து வந்ததாக பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நடிகர் சுகுமாரன் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி, தன்னிடமிருந்து கடந்த 3 ஆண்டுகளாக நகை பணம் வாங்கியிருப்பதாகவும் அந்த பெண் தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார்.
பணமோசடி: அதுமட்டுமல்ல, இப்போது தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாக கூறி, தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்ற பார்ப்பதாகவும், தன்னை ஏமாற்றி பண மோசடி செய்த நடிகர் சுகுமாரன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வடபழனி போலீஸ் ஸ்டேஷனில் கடந்த வாரம் பாதிக்கப்பட்ட துணை நடிகை அளித்திருந்தார்.
இதையடுத்து, இப்புகாரின் பேரில் வடபழனி போலீசார் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, போலீசார் கடந்த வாரமே இருவரையும் நேரில் அழைத்து விசாரித்தனர். அப்போது, துணை நடிகையிடம் பணம் வாங்கியதை சுகுமார் ஒப்புக் கொண்டாராம்.. ஆனால், பணத்தை திரும்ப தருவதாக கூறியிருக்கிறார்.. எனினும், பணத்தை அவர் வழங்கவில்லை.
மீண்டும் விசாரணை: இதுகுறித்து, துணை நடிகை மீண்டும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அப்போது, இருவருக்கும் இடையே, பணப்பரிமாற்றம் தொடர்பாக நடந்த பேச்சு தொடர்பான ஆடியோவையும் ஆதாரமாக போலீசில் துணை நடிகை வழங்கியிருக்கிறார்.. இதுகுறித்துதான் மீண்டும் போலீசார் சுகுமாரிடம் விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக இருவரும் வடபழனி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகியிருந்தபோது, "பட வாய்ப்பு இல்லாமல் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வருவதாகவும், துணை நடிகையை ஏமாற்றி நகையோ பணமோ எதுவும் வாங்கவில்லை" என்று கூறினார். அதற்கு துணை நடிகை, "நகையை அடகு வைக்க நானும் சுகுமாரும் தான் போனாம்.. அடகு வைத்துத்தான் அவருக்கு பணத்தை வாங்கி கொடுத்ததாகவும் அதற்கான ஆதாரங்கள் அந்த அடகு கடையின் சிசிடிவியில் இருக்கும்" என்று கூறியிருந்தார்.
ஆடியோ ஆதாரம்: இந்நிலையில், தற்போது, பணப்பரிமாற்றம் தொடர்பான ஆடியோவையும் போலீசில் துணை நடிகை ஒப்படைத்திருப்பது, இந்த வழக்கின் விசாரணையை பரபரப்பாக்கியிருக்கிறது.
முன்னதாக ஒரு தனியார் டிவி சேனலுக்கு நடிகை தந்திருந்த பேட்டியில், "நான் இல்லாமல் அவர் இருக்கவே முடியாதுன்னு சொல்லுவார்.. வாய்ஸ் மெசேஜ் போடு.. எனக்கு ஒருவேலையும் ஓடலன்னு சொவார்.. நான் எங்கே போனாலும் பின்னாடியே வந்துடுவாரு.. சாப்பாடு போட்டு, சுகத்தையும் தந்தேன். ஒரு விபச்சாரியிடம் போவதானாலும் 5 ஆயிரம் தரணும். ஆனால், நான் இந்த 3 வருஷம் அவனுக்காகவே வாழ்ந்து, என் மனசு கெட்டு, என் உடம்பும் கெட்டு, என் வாழ்க்கையே நாசமா போச்சு" என்று கண்ணீர் விட்டு கூறியிருந்தார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications