முன்னணி நடிகையை சீரழித்த பிரபலம் இவரா? கண்ணீரும் கம்பலையுமாக மீண்டும் பரபர புகார்! இதெல்லாம் உண்மையா
சென்னை: பிரபல நடிகை, தெலுங்குபட இயக்குனர் மீது பரபரப்பு தந்துள்ள நிலையில், தெலுங்கு நடிகர் சங்க பொருளாளர் அதனை மறுத்துள்ளார்.. இதுகுறித்து, மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சேனல் ஒன்றில் விரிவாக பேசியிருக்கிறார்.
பிரபல நடிகை பூனம் கவுர்.. தமிழில் நெஞ்சிருக்கும் வரை, உன்னைப் போல் ஒருவன், பயணம், வெடி உட்பட சில படங்களில் நடித்திருப்பவர்.. தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு இயக்குநர் த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் பெயரை குறிப்பிடாமல் அவர் மீது சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டுகளைக் கூறி வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, "பிரபல இயக்குநரால் பஞ்சாபி நடிகை ஒருவரின் சினிமா வாழ்க்கை நாசமானது" என்று குறிப்பிட்டிருந்தார். இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்போது மீண்டும் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் நடிகை..
மீண்டும் பதிவு: அதில், "த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீது நீண்ட நாட்களுக்கு முன், தெலுங்கு நடிகர் சங்கத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இதுவரை எந்த விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. என் வாழ்க்கையை நாசமாக்கி என் மகிழ்ச்சியையும் உடல் நலத்தையும் கெடுத்த அவரை முன்னணி திரைத்துறையினர் ஆதரித்து வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார். நடிகையின் இந்த அதிர்ச்சி புகார், மீண்டும் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், King Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார். அதில்,
"பூனம் கவுர் தமிழில் பல படங்களில் நடித்தவர்.. தெலுங்கில் முன்னணி நடிகையும்கூட.. இவர் தெலுங்கில் ஒரு இயக்குனரை பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு, இயக்குனர் சங்கத்தில் ஒரு புகார் தந்திருந்தார்..
உடல்நலம், உள்ளம்: அதில், என்னுடைய வாழ்க்கையை அந்த இயக்குனர் நாசமாக்கிவிட்டார்.. என்னுடைய உடலநலத்தையும் கெடுத்துவிட்டார் . எனவே சம்பந்தப்பட்ட இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டிருந்தார். ஆனால், அந்த புகாரில் எந்த இயக்குனர் என்று பெயரை, அவர் குறிப்பிடவில்லை.
எனினும், அவர் தந்த புகாரிலிருந்து, இயக்குனர் ஸ்ரீ விக்ரம் சீனிவாஸ் என்பவரின் பெயரை யூகிக்க முடிந்தது.. இந்த இயக்குனருடன்தான் நடிகை நெருங்கி பழகினார்.. லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்தார்.. தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி, ஏமாற்றிவிட்டார், என்னுடைய உடல்நலத்தையும், உள்ளத்தையும் நாசமாக்கிவிட்டார் என்றெல்லாம் மீண்டும் கூறியிருக்கிறார் பிரபல நடிகை பூனம். இதுபற்றி தெலுங்கு நடிகர் சங்க பொருளாளர் ஒரு பேட்டி தந்துள்ளார்..
புகார்கள்: அதில், "அப்படி ஒரு புகாரே நடிகையிடமிருந்து எங்களுக்கு வரவில்லை.. சும்மா சும்மா இதை பற்றியே பேசி கொண்டிருக்கிறார் பூனம் கவுர்.. இப்படி மீடியாக்கள் முன்பு பேசுவதன் காரணமாக, அவர் தன்னுடைய பெயரை கெடுத்து கொள்கிறார்.. சம்பந்தப்பட்ட இடங்களில், சம்பந்தப்பட்ட சங்கங்களில், சம்பந்தப்பட்ட நபர்களிடம் புகார் கொடுப்பதற்கு பதிலாக, மீடியாவில் பேசினால் அது தவறு என்று கூறியிருக்கிறார்" என பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications