பிரபல ஓட்டல் ஓனர் வீட்டில் தேங்காய் மட்டையில் கொட்டிய பணம்? அதுவிடுங்க ஆர்யாவை இழுத்த நபர்: பிரபலம்
சென்னை: சென்னை அண்ணாநகர் உள்ளிட்ட தனக்கு சொந்தமான ஓட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக வெளியான தகவலுக்கு பிரபல நடிகர் ஆர்யா மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், தன்னுடைய கருத்துக்களை பேட்டியில் கூறியிருக்கிறார்.
நேற்று நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஓட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகிறார்கள் என்று மீடியாக்களில் செய்திகள் வெளியானது.. ஆனால், இந்த தகவலை நடிகர் ஆர்யா உடனடியாக மறுத்தார்..

"ஐடி ரெய்டு நடக்கும் ஓட்டல் வேறு ஒருவருடையது" என ஆர்யா விளக்கம் அளித்திருந்தார்.. அதாவது, சில வருடங்களுக்கு முன்பே நடிகர் ஆர்யாவிடமிருந்து குன்ஹி மூசா என்பவர் இந்த ஓட்டல்களை விலைக்கு வாங்கியிருப்பதாக சொல்கிறார்கள்..
இந்நிலையில், Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த சேகுவேரா, "இந்த சீ-ஷெல் ஓட்டல்களுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஆர்யா சொல்கிறார்.. ஆனால், அதை ஓட்டல் தரப்பிலிருந்து யாரும் சொல்லவில்லை.
ஆர்யா ஓட்டல் கிடையாது
ஆர்யா ஓட்டலில் ரெயிடு என்ற செய்திகள் வந்ததற்கே ஓட்டல் தரப்பில் மறுத்திருக்க வேண்டும்.. அந்த ஓட்டல்கள் எங்களுடையது, ஆர்யாவுடையது கிடையாது என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அமைதி காக்கிறார்கள். அந்த ஓட்டல்கள் யாருடையது என்று சினிமா உலகில் உள்ளவர்கள் உட்பட பலருக்கும் தெரியும்" என்று கூறியிருந்தார்.
தற்போது Channel 5 Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தமிழா தமிழா பாண்டியன், ஆர்யாவை பொறுத்தவரை சீ-ஷெல்ஸ் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார்.. ஏறக்குறைய 50-க்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ளது.. இந்த உணவகங்களில் சினிமா முதலீடுகள் குவிக்கப்பட்டுள்ளன.. ஒரு கடைக்கு 5 கோடி முதலீடு என்றாலும், 50 கடைக்கு 250 கோடி ஆகிறது.
பெரிய ஸ்டார் இல்லையே
ஆர்யா ஒன்றும் பெரிய ஸ்டார் கிடையாது.. இவருக்கு ஏது 250? அல்லது 150 கோடி? 50 கடைகளில் குறைந்தபட்சம் 50 பேர் வேலை செய்கிறார்கள் என்றாலும், 50 கடைக்கு 2500 பேர் வேலை பார்க்க வேண்டிவரும்.. அந்தவகையில், இது ஒரு பெரிய நெட்வொர்க்.. கிட்டத்தட்ட 5 ஸ்டார் ஓட்டல் போலவே பராமரிக்க வேண்டியிருக்கும்.. இந்த ஓட்டல்களுக்கு சாதாரண கஸ்டமர்கள் வரமாட்டார்கள்.. குவாலிட்டியான கஸ்டமர்கள்தான் வரக்கூடும்.
ஒரு பிரபல ஓட்டலில், இட்லி சாம்பார் மட்டுமே ஃபேமஸ் என்றாலும், பல கோடி ரூபாய் ஓட்டலுக்கு வருமானம் வருகிறது.. அன்று அந்த ஓட்டலின் உரிமையாளர் உயிருடன் இருந்தபோது, அவரது வீட்டில் ரெயிடு நடந்தது.. ஆனால், இதுகுறித்து முன்கூட்டியே இன்பார்மர் மூலம் உரிமையாளருக்கு தகவல் தரப்பட்டதாம்.. இதுபோன்று இன்பார்மர்களுக்கு 10 சதவீதம் இன்சென்ட்டிவ் உண்டு..
தேங்காய் மட்டை
பிறகு ரெயிடு வந்ததுமே அதிகாரிகள் வீட்டை சல்லடையால் துளைத்தெடுத்து தேடினார்கள்.. ஒரு பைசா அங்கே கிடைக்கவில்லை.. பிறகு ஒரு அதிகாரி, இந்த வீட்டில் கள்ளப்பணம் பதுக்கி வைக்கப்படவில்லை என்று முருகன் போட்டோவை உரிமையாளரை சத்தியம் செய்ய சொன்னார்..
இதைக்கேட்டு அதிர்ந்துபோன உரிமையாளர், எனக்கு பணம் முக்கியமில்லை, எம்பெருமான் முருகன்தான் முக்கியம், இந்த வீட்டின் 4வது மாடியில் தேங்காய் மட்டையில் பணத்தை கட்டி வைத்திருக்கிறேன் என்றார்.. அதன்படியே தேங்காய் மட்டைகளுக்குள் பல கோடி ரூபாய்களை அதிகாரிகள் பறிமுதல் சென்றனர்..
நெருக்கமானவர் காரணம்?
ஆனால், ஆர்யா விவகாரத்தை பொறுத்தவரை, வரி ஏய்க்கப்படுவதாக, வருமான வரித்துறையினருக்கு ஏதோ தகவல் சென்றதாக தெரிகிறது. ஆர்யாவுக்கு நெருக்கமானவர் மட்டுமே இப்படியான தகவலை தந்திருக்கக்கூடும்.. எனினும் இந்த தகவல் உண்மையா? இல்லையா? என்பதை ஆர்யா நிரூபிக்க வேண்டிவரும் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications