Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெயருக்குதான் பாஸ்டர்.. சல்லாபத்தில் கோவை ஜான் ஜெபராஜ்.. பிரபுதேவா பேட்ட ராப் பிரார்த்தனை: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை GN மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ்.. இவருக்கு 37 வயதாகிறது.. கிறிஸ்தவ மத போதகர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த இவர் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் நடத்தி வருகிறார்.. இவர்மீது 2 சிறுமிகள் கோவை காட்டூரில் மகளிர் போலீசில் புகார் தந்துள்ளனர்.. இதையடுத்து, ஜான் ஜெபராஜ் மீது போக்சோ பாய்ந்துள்ளது. தற்போது தலைமறைவாகி உள்ள நிலையில், கிறிஸ்தவ மிஷினரிகள் ஜானை காப்பாற்ற முயற்சிப்பதாக, பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

கடந்த வருடம் மே மாதம் மதபோதகர் ஜான் ஜெபராஜ் வீட்டில் பார்ட்டி ஒன்று நடந்துள்ளது..அதில், 14 வயது மற்றும் 17 வயது சிறுமிகள் கலந்து கொண்டுள்ளனர்.. அந்த 2 சிறுமிகளுக்கும் ஜான் பாலியல் தொல்லை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

Television john jebaraj prabhu deva

இதையடுத்து தரப்பட்ட புகாரில், கோவை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால், அதற்குள் மதபோதகர் ஜான் தலைமறைவாகியிருக்கிறார். அவரை தேடும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஜான் ஜெபராஜ்

இந்நிலையில், Aagayam யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "ஜான் ஜெபராஜ் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டமாகும்.. இவர் ஒரு மதபோதகர்.. இவர் கோவையை தேர்ந்தெடுக்க காரணம், அமைதியான மண் என்பதால்தான்.. கோவை ஒரு தொழில் நகரமும்கூட.. வன்மமும், வன்முறையும் இருக்காது என்பதால் கோவையை ஜான் தேர்ந்தெடுத்தார்.

பாஸ்டர் ஜான் படிப்பை எங்கு முடித்தார் என்று இதுவரை தெரியவில்லை.. ஏனென்றால், பாதிரியார் படிப்பு என்பது 7 வருடம் படிக்கக்கூடியது.. இந்த இறையியல் படிப்புக்கு ஆங்கிலம், உள்ளிட்ட மொழிகள் தெரியவேண்டும். 5 முதல் 7 வருட காலம் முறையாக அனைத்தும் படித்து முடித்தால்தான், பாதிரியாராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படுவர்.

தவறான முன்னுதாரணம்

ஆனால், ஜான் ஒரு ராப் பாடகர். பிரபுதேவா சொல்வதுபோல, பேட்டை ராப் என்று பாடுகிறார். இதுவே ஒரு தவறான முன்னுதாரணமாக இருந்துள்ளது.. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று, "இயேசுவை நான் ஆராதிக்கிறேன்" என்ற பாட்டை, பிரபுதேவா ஸ்டைலில் பாடியிருக்கிறார்.. பாடுவதுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியிருக்கிறார்..

பிரார்த்தனை என்பதே மிகவும் மென்மையாக, அமைதியாக, தேவாலயங்களில் மண்டியிட்டு,தேவனை பிரார்த்திப்பதுதான்.. பேட்டா ரேப் எப்படி பிரார்த்தனையாகும்? ஜானின் நடவடிக்கையை ஆரம்பத்திலேயே கிறிஸ்துவ மிஷினரிகள் கண்டிக்கவில்லை...

கோவை கிராஸ்கட் கூட்டத்தில் நடந்த பிரார்த்தனையில், பொதுமக்கள் தசமபாகம் காணிக்கையாக தந்திருக்கிறார்கள்.. இந்த பணத்தை பிரித்து கொள்வதில், எட்வின் ரூசோவுக்கும், ஜானுக்கும் தகராறு வந்துவிட்டது. இதனால், அந்த கூட்டத்தை நிறுத்திவிட்டு, இவரே கூட்டங்களை நடத்தியிருக்கிறார். ஜானை இணையதளத்தில் ஒன்றே முக்கால் லட்சம் நபர்கள் பின்தொடர்கிறார்கள். மைக்கேல் ஜாக்சனை போன்று விதவிதமான உடையணிந்து, ராப் பாடல்களை பாடி ஆடி வந்துள்ளார்.

ஜானுக்கு தசமபாகம்

1 லட்சத்து 70 ஆயிரம் பேரும், ஜானுக்கு தசமபாகம் தருகிறார்கள்.. இந்த பணம் கொட்டுகிறது.. ராக் இசையோடு தேவனை ஆராதிக்கிறேன் என்று நிகழ்ச்சி நடத்தினால், அதிலும் பல லட்சம் நிதி கைக்கு வருகிறது.. அந்தவகையில் ஜானுக்கு இது போதை தருகிற வியாபாரமாகவே ஆகிவிட்டது. அந்தவகையில், ஜான் ஜெபராஜ் "குட்டி ஜீசஸ் கால்ஸ்"

இவரது முதல் மனைவியை விட்டுவிட்டு, 2வது மனைவியுடன் உள்ளார். ஆனால் முதல் மனைவிக்கு முறைப்படி டைவர்ஸ் தரவில்லை. இப்போது ரூசோவுக்கு "தற்கொலை செய்து கொள்ள போகிறேன்" என்று ஆடியோ பேசி அனுப்பியிருக்கிறார். தற்கொலை செய்து கொள்ள முயலும் கிறிஸ்தவனை காப்பாற்றுவதுதானே இறைபணி? அதைவிட்டுவிட்டு மதபோதகரே தற்கொலை செய்து கொள்வதாக சொன்னால்? இவர்கள் எல்லாம் போலி பாதிரியார்கள்..

இந்துக்களை போலவே, கிறிஸ்தவர்களிடம் நிறைய மூட நம்பிக்கை உள்ளது.. மதம் என்பது மக்களை ஏமாற்றவே பயன்படுத்தப்படுகிறது, நல்வழிப்படுத்த பயன்படுத்தப்படவில்லை.

கிறிஸ்தவ மிஷினரிகள்

இப்போது ஜான் மீது பாலியல் புகார் கிளம்பியிருக்கிறது. கிறிஸ்தவ மிஷினரிகள் 2 வருடம் கழித்து இப்போதுதான் ஜான் மீது புகார் தந்துள்ளனர்.. அதேபோல 2 சிறுமிகளும் 2 வருடம் கழித்துதான் இந்த புகாரை தருகிறார்கள். பல பெண்களை பாலியல் ரீதியாக ஜான் பயன்படுத்தியிருக்கிறார்.

வசதியான வீட்டு பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு தந்தால், அச்சப்பட்டு அதனை வெளியே சொல்ல மாட்டார்கள்.. அந்தவகையில், எட்வின் ரூசோ, ஜான் இருவருக்குமே நிறைய பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது.. தசமபாகம் காணிக்கையால் வந்த சண்டை என்று பலரும நினைக்கிறார்கள். இது பெண்கள் சமாச்சாரத்தினால் வந்த தகராறு.

போலீஸ் கஸ்டடி விசாரணை

இப்போது ஜான் தலைமறைவாக உள்ளார்.. சில கிறிஸ்தவ மிஷினரிகள் ஜானை காப்பாற்ற முயற்சி நடப்பதாக தெரிகிறது.. ஆனால், மதகுருமார்கள் மீது அதிகமாக போக்சோ சட்டம் பாய்ந்து கொண்டிருக்கிறது. ஜானை கைது போலீஸ் கஸ்டடியில் விசாரித்தால்தான், எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும்.

தங்களுடைய துன்பத்தை தீர்த்து கொள்வதற்காக, ஏழை எளிய மக்கள் தேவாலயம் வருகிறார்கள்.. ஆனால் ஜான் போன்ற பாதிரியார்களால் தேவாலயங்களின் புனிதம் கெட்டுவிடுகிறது.. ஆண்டவனால் திருத்த முடியாவிட்டாலும், கோவை மத்திய சிறை, ஜானை திருத்தி மனிதனாக மாற்றும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+