வண்டி வண்டியாய் பீலிங்கு.. ஓரளவு டீசன்ட் வரிதான், அந்த குரலை கேட்டதுமே பக்குனு ஆயிருச்சு: ராஜலட்சுமி
சென்னை: நாட்டுப்புற பாடல்களை நம்முடைய விருப்பம்போல பாடலாம். ஆனால் சினிமா பாடல்கள் அப்படி இல்லை. இப்படித்தான் பாட வேண்டும், இப்படித்தான் வரிகளை முடிக்க வேண்டும் என்று நோட்டு இருக்கும். இதைத்தான் இசையமைப்பாளர்களும் விரும்புவார்கள்" என்று கூறியிருக்கிறார் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில்.
பெரிய மியூசிக் டைரக்டரிடம் பாடுவது பெருமைக்குரிய விஷயம்... 4 பாட்டு பாடினாலும், பணம் வாங்காமல் ஒரு பாட்டு பாடுவதால் ஒன்றும் தவறில்லை. இதற்கு காரணம், அந்த இசையமைப்பாளரிடம், பாட்டு பற்றின பல்வேறு நுணுக்கங்களை அறிந்து கொள்ள முடியும். தெரியாதவற்றை கற்றுக் கொள்ள முடியும். இதனால் சில நன்மைகளும் நடக்கும். மற்றபடி, நான் பாடிய பாட்டுக்கு ஏன் பணம் தரல? நான் பாடியது ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்றெல்லாம் கேட்க மாட்டேன்.

ரிக்கார்டிங்: அதேசமயம், நான் ரிக்கார்டிங்கில் பாடிய பாட்டு வரலேன்னா, அது உண்மையிலேயே மனசுக்கு கஷ்டமாக இருக்கும். ஒருமுறை நான் இப்படித்தான் ரிக்கார்டிங்கில் ஒரு பாட்டு பாடிட்டு வந்தேன்.
அதற்கு பிறகு அந்த பாட்டின் டியூனே மறந்துவிட்டது. பிறகு மறுபடியும் படம் ரிலீஸானபோது, அந்த பாட்டை கேட்க முடிந்தது. இந்த பாட்டை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே? என்று யோசித்தபோதுதான், ரிக்கார்டிங்கில் பாடியது நினைவுக்கு வந்தது. உடனே அதை ஆர்வத்துடன் கேட்டபோது, அதே பாட்டை வேறு ஒரு பாடகி பாடியிருந்தாங்க.. என் குரலுக்கு பதிலாக வேறு குரலை கேட்டதுமே எனக்கு பக்குனு ஆயிருச்சு.
விருமன் பாடல்: ஆனால், நான் பாடியது எல்லாம் ரிலீஸ் செய்ய வேண்டும் என்றோ, அதை ஒரு பிரச்சனையாக்க வேண்டும் என்றோ நான் எப்போதுமே நினைத்தது கிடையாது. "விருமன்" படத்திலும், நான் பாடிய பாட்டை அதிதி பாடியிருந்தாங்க.. ஆனால், நல்லாவே பாடியிருந்தாங்க என்றுதான் நான் சொன்னேன். "சாமி சாமி" பாட்டுக்கும், என்னுடைய வாய்ஸை, முயற்சி செய்து பார்க்கலாம் என்றுதான் சொன்னார்கள். அந்த பாடல் என் குரலுக்கு பொருத்தமாக இருந்தது என்றதும்தான் ரிலீஸ் செய்தார்கள்.
பீலிங்ஸ் பாடல் வரிகளை பொருத்தவரை, ஒருமாதிரியான வரிகளை கொண்ட பாடலா? என்று கேட்டால் உண்மைதான்.. ஆனால், அனைவருக்குமே ஒவ்வொரு உணர்வுகள் இருப்பதுபோல அதுவும் ஒருவகையான உணர்வுதான். ஆனால் அதை சொல்வதெற்கென்று ஒரு முறை இருக்கு.. அந்தவகையில், ஃபீலிங்க்ஸ் பாடல் வரிகளையும் ஓரளவுக்கு டீசன்ட்டாதான் ஹேண்டில் செய்திருந்தார்கள்.. ஐட்டம் சாங்காக இருந்தாலும் பிரச்சனையில்லை.. ஆனால், அதில் ஒரு நேர்த்தி இருக்கணும்.
மதன் கார்க்கி: கன்னட படம் ஒன்று தமிழில் எடுக்கப்பட்டபோது, மதன் கார்க்கிதான் வரிகளை எழுதியிருந்தார். ஆனால், அது ஐட்டம் பாடலா? என்றே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு டீசன்ட்டா எழுதியிருந்தார். சில பாடல்கள் முகம் சுழிப்பதுபோல இருக்கும்.. அப்படி வரிகள் இருந்தால், மக்கள் அதை ஏற்க மாட்டார்கள் என்பதால், அந்த வரிகளை மட்டும் மாற்றி எழுதித்தரும்படி கேட்டுப்போம்.
சிலசமயம் மெலடி பாடல்களை எனக்கு பாட தருவார்கள். ஆனால், அது என்னுடைய குரலுக்கு செட் ஆகாது, வேற யாருக்காவது தந்துவிடுங்கள் என்று நானே சொல்லிவிடுவேன். அதேபோல, பாடல்களை பாடுவதிலும் நிறைய சென்டிமென்ட் பார்ப்போம் என்பதால், நெகட்டிவ் பாடல்கள் என்றால் தவிர்த்துவிடுவோம்.
நாட்டுப்புற பாடல்கள்: நாட்டுப்புற பாடல்களை பாடுவதற்கும், சினிமா பாடல்களை பாடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. ஒவ்வொரு நாட்டுப்புற பாடகர்களுக்கும் ஒவ்வொரு ஸ்டைல் உள்ளது. அதனால் நாட்டுப்புற பாடல்களை, அவரவர் ஸ்டைலில் பாடி கொள்ளலாம். அது நம்முடைய கற்பனையை பொறுத்தது.. ஆனால் சுருதியில் அந்த பாடல் இருக்கிறதா? என்று மட்டுமே பார்க்க வேண்டும்.
மற்றபடி எப்படி வேண்டுமானாலும் உயிர் கொடுத்து, நம் விருப்பம்போல பாடலாம். ஆனால் சினிமா பாடல்கள் அப்படி இல்லை. இப்படித்தான் பாட வேண்டும், இப்படித்தான் வரிகளை முடிக்க வேண்டும் என்று நோட்டு இருக்கும். இதைத்தான் இசையமைப்பாளர்களும் விரும்புவார்கள்" என்றெல்லாம் கூறியிருக்கிறார் ராஜலட்சுமி செந்தில்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications