பிரபல நடிகை சுகன்யா.. அந்த அரசியல்வாதியா? சர்ச்சைகளை உடைத்து, நடிப்பில் உச்சம் தொட்டு: யார் பாருங்க
சென்னை: பிரபல நடிகை சுகன்யாவுக்கும், சர்ச்சைகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு" என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார். இந்த சர்ச்சைகளை முறியடித்து, சின்னத்திரையில் வெற்றிநடை போட்டவர் சுகன்யா என்றும் பாராட்டு தெரிவித்திருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.
Behindcinema என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில் நடிகை சுகன்யா திரையுலகிற்குள் எப்படி நுழைந்தார்? சர்ச்சைகளில் எப்படி சிக்கினார்? என்பது குறித்து விலாவரியாக பேசியிருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது:

"இசை ஆர்வம் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் சுகன்யா.. தாய்மாமன் வக்கீல்.. இவரது அப்பா திரைப்பட தயாரிப்பாளர். அதனால் திரைப்பட ஆர்வம் சுகன்யாவுக்கு இயல்பாகவே இருந்தது.. தன்னுடைய பள்ளிப்படிப்பு காலத்திலேயே நடனம், நாட்டியம், இசை, இசைக்கருவிகளை கற்றத்தந்தவர்.. கலாசேத்ரா மாணவியாகவும் திகழ்ந்தவர்..
நடிகை சுகன்யா: ஆனால் சினிமாவில் நடிக்க ஆர்வமில்லாமல் இருந்தார்.. கங்கை அமரன் சுகன்யாவை நேரில் பார்த்துவிட்டு, நடிக்க அழைத்தும் அதற்கு மறுக்கிறார் சுகன்யா. ஒரு தயாரிப்பாளரும நடிக்க அழைக்கிறார். அப்போதும் சுகன்யா நடிக்க மறுத்து விடுகிறார். அவரது பெற்றோர்களும் சுகன்யாவை நடிக்க வைக்க விரும்பவில்லை.
கண்ணதாசனின் மகன் தயாரிப்பாளர் என்பதால், ஒருமுறை சுகன்யாவின் பள்ளிக்கூடத்துக்கே கிளம்பி செல்கிறார்.. தில்லானா மோகனாம்பாள் படத்தை ரீமேக் செய்ய போவதாகவும், பத்மினி கதாபாத்திரத்தில் சுகன்யாவை நடிக்க வைக்க சிபாரிசு செய்யுமாறு, பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்கிறார். அதற்கு பிறகுதான் தலைமை ஆசிரியர், சுகன்யாவிடம், சினிமா வாய்ப்பை ஏற்குமாறு சொல்கிறார். வீட்டில் அம்மா, அப்பா, சொல்லி கேட்காத சுகன்யா, தலைமை ஆசிரியர் சொல்லி, நடிப்பதற்கு சம்மதிக்கிறர்.
ஆஸ்தான ஜோதிடர்: எனினும், சுகன்யாவின் பெற்றோர், தங்களுடைய ஆஸ்தான ஜோசியரிடம், சுகன்யாவின் ஜாதகத்தை தந்து நடிப்புத்துறையை தேர்ந்தெடுக்கலாமா? என்று கேட்கிறார்கள். நடிப்பில் உச்சத்துக்கு சுகன்யா போகப்போகிறார் என்று ஜோதிடர் செல்ல்லிய பிறகே, வீட்டில் நடிப்புக்கு பச்சைக்கொடி காட்டினார்கள்.
ஆனால், இவரது முதல் படம் 1991-ல் வெளிவந்த புதுநெல்லு புது நாத்து. பாரதிராஜாவிடம் அடி வாங்காமல் தப்பித்த ஒரே நடிகை சுகன்யா மட்டும்தான்.. முதல் படமே, எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நல்ல கதாநாயகிஅந்தஸ்தையும் தந்தது.
அடுத்தடுத்து, பல படங்கள் குவிகின்றன. அப்போது அரசியல்வாதி ஒருவரின் தொடர்பும் ஏற்படுகிறது.. அதிமுகவின் முன்னாள் அமைச்சரான அவர், ஜெயலலிதாவுக்கு நெருக்கமான அமைச்சரும்கூட.. இன்று திமுக அமைச்சரவையில் இருக்கார்.
தங்க நகைகள்: அமைச்சருக்கும், சுகன்யாவுக்கும் கிசுகிசு தொற்றிக்கொண்டது. சுகன்யாவுக்கு பெசன்ட்நகரில் உல்லாச பங்களா, ஈசிஆர் ரோட்டில் ரிசார்ட், தங்க நகைகள், விலைஉயர்ந்த கார்கள் போன்றவற்றை அமைச்சர் தந்ததாக அப்போது பத்திரிகைகளில் கிசுகிசுக்கப்பட்டன.
இப்படியெல்லாம் செய்திகள் வந்தபோதும் அதை சுகன்யா மறுக்கவில்லை. 3 துறைகளுக்கும் அமைச்சரான அவரது வீட்டில் ரெய்டு நடந்தபோது, சுகன்யா வீட்டிலும் ரெய்டு நடந்தது. அந்த அமைச்சருடன் 5 ஆண்டு காலம் தொடர்பில் சுகன்யா இருந்ததாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.. சுகன்யாவை வைத்து தயாரிக்கப்படும் பல படங்களுக்கு பைனான்சியர் அந்த அமைச்சர்தான் என்றும் பரபரப்பாக பேசப்பட்டன. மொத்தத்தில் அமைச்சரின் பினாமியாகவே சுகன்யா அப்போது பார்க்கப்பட்டார்.
சர்ச்சைகள்: அதேபோல சின்ன சங்கராச்சாரியாருடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டார் சுகன்யா. சரத்குமாருடன் பல படங்கள் நடிக்கவும், கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதாகவும் பேசப்பட்டது.. இப்படி சர்ச்சைகளுக்கும் சுகன்யாவுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு" என்றெல்லாம் அந்த பேட்டியில் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications