சரோஜா, பிரியாணி சாப்பிடறியா? சரோஜா தேவியிடம் அன்புடன் கேட்ட எம்ஜிஆர்.. நகை பெட்டியை திறந்ததுமே குஷி
சென்னை: பொதுவாக நடிகவேள் எம்ஆர் ராதா, எந்த நடிகையையும் லேசில் புகழ்ந்துவிட மாட்டார்.. ஆனால், சரோஜா தேவி என்றாலே எம்ஆர் ராதாவுக்கு தனிப்பிரியம் இருந்திருக்கிறது.. பலமுறை மனதார வாழ்த்தியும் இருக்கிறார். அந்தவகையில், சரோஜாதேவி மதிக்கக்கூடிய நபர்களில் மிக முக்கியமானவர்கள் நடிகவேள் எம்ஆர் ராதா, மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆவர்..
அன்றைய காலகட்டத்தில் சரோஜாதேவியின் வீட்டில் நிறைய விழாக்கள் நடைபெறுமாம்.. குறிப்பாக பூஜைகள், பண்டிகை நேரத்தில் இதுபோன்ற விழாக்களை நடத்தியிருக்கிறார்.. இந்த விழாக்களில் பல நடிகர்கள், நடிகைகள் பங்கேற்பது வழக்கம்..

உடம்பு நிறைய துணி
இதில் பெரும்பாலும் எம்ஆர் ராதாவும் கலந்து கொள்வாராம்.. வீட்டுக்குள் நுழையும்போதே, "அம்மா சரோஜா" என்றுதான் கூப்பிடுவாராம்..
சரோஜா தேவி அம்மாவிடம், உன் பொண்ணை நல்லா வளர்த்து வெச்சிருக்கே... உடம்பு நிறைய துணி போட்டு வர்ற நடிகை யாருன்னா, அது நம்ம சரோஜாதான்.. என்னா அழகு.. ரொம்ப சந்தோஷம் என்று மனமார வாழ்த்துவாராம்.. அதுமட்டுமல்ல, யார்கிட்ட பேசினாலும், "சரோ நல்ல பொண்ணு" என்றே சொல்லுவாராம் எம்ஆர் ராதா.
சரோஜா தேவி
ஜனவரி 7ம் தேதி சரோஜாதேவியின் பிறந்த நாளாகும்.. அன்றைய தினம் முதல் வாழ்த்தே எம்ஜிஆரிடமிருந்துதான் வருமாம்.. பல பிறந்த நாட்கள், ஷூட்டிங்கில் எம்ஜிஆருடன் இருந்தபோது முதல் வாழ்த்தை பெற்றுள்ளார்.. அதேபோல பெங்களூருவில் இருந்தாலும், போனில் வாழ்த்து சொல்வாராம் எம்ஜிஆர்..
ஒருமுறை சரோஜாதேவியின் பிறந்தநாளில், ஜானகி அம்மாவுடன் திடீரென காலையிலேயே வீட்டுக்கு வந்துவிட்டாராம் எம்ஜிஆர்.. அன்று சரோஜா தேவி வீட்டில் சத்யநாராயணா பூஜையும் நடந்து கொண்டிருந்தது.. அப்போது ராமச்சந்திரனும் சத்யநாராயணனும் ஒன்றுதான் சரோஜாதேவியின் அம்மா சொன்னாராம்.. பிறகு எம்ஜிஆரும், ஜானகி அம்மாவும் சரோஜாதேவியை மனதார வாழ்த்திவிட்டு சென்றுள்ளார்கள்.
நான் ஆணையிட்டால்
நான் ஆணையிட்டால் பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, மட்டன் பிரியாணியை சரோஜாதேவி சாப்பிட தந்துள்ளார் எம்ஜிஆர்... அன்று சனிக்கிழமை என்பதால், அசைவம் சாப்பிடக்கூடாது என்று தன்னுடைய அம்மா சொல்லியிருப்பதாக சொன்னாராம் சரோஜா தேவி..
பிறகு இரவு மணி 12ஐ தாண்டிவிட்டதுமே, "இப்போ பிரியாணி சாப்பிடலாமே" என்றாராம்.. அதற்கு சரோஜா தேவி, மறுநாள் சூரியன் உதயமானால்தான் ஒருநாள் முடிந்ததாக கணக்கு என்று என் அம்மா சொல்லியிருக்கிறார் என்றாராம்..
உடனே எம்ஜிஆர், "இந்த வயசிலேயே இந்த பொண்ணு அம்மா பேச்சை மீறாமல் இருக்கு பாருங்க" என்று அங்கிருந்தவர்களிடம் எம்ஜிஆர் பெருமையா சொன்னாராம்...
எம்ஜிஆர் என்றாலே அவர் தெய்வப்பிறவிதான்.. அவரிடம் ஒரு தீய குணத்தையும் நான் பார்த்ததில்லை. இதுவரை மற்றவர்களை தப்பாக பேசியதும் இல்லை" என்று அடிக்கடி பூரித்து சொல்லி கொண்டேயிருந்தாராம் சரோஜாதேவி.
இதயக்கனி விஜயன்
எம்ஜிஆருடன் நெருங்கிய தொடர்புடையவரும், மூத்த பத்திரிகையாளரான, இதயக்கனி விஜயன், ஒருமுறை சரோஜாதேவியை சந்தித்து பேசியிருக்கிறார்.. இதை நம்முடைய ஒன் இந்தியா வாசகர்களிடமும் இதயக்கனி விஜயன் பகிர்ந்து கொண்டிருந்தார்.
சரோஜாதேவி அப்போது எம்ஜிஆர் பற்றி சொல்லும்போது, "நடிகர்கள்: "நடிகர்கள் எங்கே போனாலும் மக்கள் கூடி விடுகிறார்கள்... அதனால் கடைக்குகூட போக முடிவதில்லை.. என்று எல்லாரும் சேர்ந்து எம்ஜிஆரிடம் சொல்லி வருத்தப்பட்டோம்.. பிறகு நாங்கள் அதை மறந்துவிட்டோம்.
பரிசு பெட்டி - நெக்லஸ்
ஆனால், எம்ஜிஆர் அதை மறக்காமல், பல்வேறு கடைகளை கோல்டன் ஸ்டூடியோவிலேயே அமைத்தார்.. எங்களுக்கெல்லாம் குஷியாகிவிட்டது.. உடனே ஒவ்வொரு கடைகளாக வேடிக்கை பார்த்து கொண்டும், பொருட்களையும் வாங்க ஆரம்பித்தோம். அதில் ஒரு நகைக்கடையில், நெக்லஸ் அழகாக இருந்தது. அதை வாங்க போனால், நடிகை சாவித்திரி அதை முன்னாடியே வாங்கிட்டதாக சொல்லி அட்வான்ஸ் தந்துட்டு போயிருப்பதாக சொன்னார்கள். உடனே எனக்கு வருத்தமானாலும், நான் அந்த விஷயத்தையே மறந்துட்டேன்.
பிறகு "தாயை காத்த தனயன்" வெற்றி விழா நடந்தபோது, எனக்கு ஒரு சின்ன பெட்டியை தந்தார்கள்.. அதை வாங்கிக் கொண்டு, கீழே இறங்கி வந்து மெல்ல பெட்டியை திறந்து பார்த்தால், வாங்க முடியாமல் வருத்தப்பட்ட நெக்லஸ், அதில் இருந்தது.. அதுதான் எம்ஜிஆர்.. சொந்த தாயைவிட ஒருபடி மேலே சென்று அன்பை பொழிபவர்" என்று இதயக்கனி விஜயனிடம் சொல்லி பூரித்தாராம் சரோஜா தேவி.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications