Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவந்த அழகியுடன் காதல்.. அதுவிடுங்க, உரசல் இருந்தாலும் கவுண்டமணிக்காக ஓடோடி வந்த நடிகர், செம: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கவுண்டமணியுடன் விஜய் ஒரு படத்தில்தான் நடித்திருந்தார் என்றாலும், கவுண்டமணி வீட்டுக்குஅஞசலி செலுத்த வந்திருந்தார். இதற்கு காரணம் கவுண்டமணியின் ரசிகர்களை தன்பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காகவே தவெக தலைவர் விஜய் வந்து போனார்.. ஆனால், இளம் நடிகர்கள் யாருமே கவுண்டமணி வீட்டுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை" என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

King Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "சாந்தி கவுண்டமணி, தங்கத்தால் வார்த்த, சிவந்த உடம்புக்கு சொந்தக்காரி.. தனக்கு சிவந்த அழகிதான் மனைவியாக வரவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக சாந்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கவுண்டமணி.

Television Goundamani Actor

சுமித்ராவுக்கு திருமணம்

இந்த தம்பதிக்கு செல்வி, சுமித்ரா என்று 2 பெண்கள் உள்ளனர்.. இதில், சுமித்ரா, சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருவோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.. சுமித்ராவுக்கு திருமணம் செய்யும்போதுதான், கவுண்டமணிக்கு 2 மகள்கள் இருப்பதே எனக்கு தெரியவந்தது.

கவுண்டமணி முத்தரையர் வகுப்பை சேர்ந்தவர் என்கிறார்கள்.. அவருடைய மனைவி எந்த வகுப்பை சார்ந்தவர் என்று தெரியாது. ஒருமுறை கேஎஸ் ரவிக்குமாரிடம் கவுண்டமணி, "உங்களுடைய வகுப்பில் உனக்கு தெரிந்த நல்ல பையனாக இருந்தால் சொல்லுப்பா என்று கேட்டுள்ளார்.. அப்படித்தான் கேஎஸ் ரவிக்குமார் மாப்ளை பார்த்து, சுமித்ராவின் திருமணம் நடந்துள்ளது. அந்தவகையில், கேஎஸ் ரவிக்குமார் கவுண்டமணியின் சொந்தக்காரர் ஆகிவிட்டார்.

நடன நடிகை - வெள்ளை நடிகை

கவுண்டமணியின் மறுபக்கம் பலரும் அறியாதது.. சில நடிகைகளுடன் கவுண்டமணிக்கு தொடர்புண்டு என்பார்கள்.. அதிலும் நடன நடிகையாக இருந்து, தன்னுடன் நடித்த வெள்ளை நிறம் கொண்ட நடிகைக்கு ஒரு பிளாட் வாங்கி தந்துள்ளதாகவும் சொல்வார்கள்..

அதேபோல, ரசிகர் மன்றம் என்ற ஜால்ரா கும்பலை தன்பக்கம் நெருங்க விட்டதில்லை.. தன்னுடைய குடும்பத்தை யாரிடமும் காட்டாமல் மறைத்து வைத்திருந்தார். கவுண்டமணி மனைவிக்கு, இறுதி அஞ்சலி செலுத்த வந்தவர்கள் மிக குறைவானவர்களே.. காரணம் கவுண்டமணி மற்றவர்களின் யார் வீட்டுக்கும், எந்த நிகழ்ச்சிகளுக்கும் செல்வதில்லை. அவர் யாரையுமே பார்த்து பேசியதுமில்லை.. பழகியதுமில்லை.

சீனியர் நடிகர்

எல்லா நடிகர்களையும்விட சீனியர் என்றாலும், ரஜினி முதல் ராமராஜன் வரை எல்லாரையுமே போடா, வாடா, அவன் இவன் என்றுதான் சொல்வார். அதேபோல, விருதுகளுக்கு விரும்பாதவர் கவுண்டமணி.. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அழைப்பு வந்தும், வெளிநாடுகளுக்கு செல்ல மறுத்துவிட்டார் கவுண்டமணி. இதற்கு காரணம் தெரியவில்லை. அப்படியே யாராவது வந்து வெளிநாட்டுக்கு கூப்பிட்டாலும் அவர்களை திட்டி அனுப்பிவிடுவார்.

ஷூட்டிங் வரும்போது கையில் 10 பைசா கொண்டு வர மாட்டார்.. ஷூட்டிங் வந்துதான் டிபன் சாப்பிடுவார்.. மதியானமும் அங்கியேதான் சாப்பிடுவார்.. யாருக்கும் எந்த உதவியும் செய்ததில்லை.. அப்படியொரு உதவி செய்ததாக யாரும் என்னிடம் சொன்னதுமில்லை. கோயிலில் கூழ் ஊத்த காசு கேட்டாலும் தரமாட்டார். ஒருமுறைகூட செய்தியாளர்களை சந்தித்து கவுண்டமணி பேசியதில்லை.

இளகிய மனம் படைத்த செந்தில்

ஆனால், அவருடன் நடித்த செந்தில், எத்தனையோ பேருக்கு உதவி செய்துள்ளார்.. இளகிய மனம் படைத்தவர்.. தன்னுடைய மனைவி , 2 பிள்ளைகளை வெளி நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்வார். கவுண்டமணி - செந்தில் உரசல் மோதல்கள் இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் மறந்து, செந்தில் கவுண்டமணியின் வீட்டுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நீண்ட நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தார்..

கவுண்டமணியுடன் விஜய் ஒரு படத்தில்தான் நடித்திருந்தார் என்றாலும், கவுண்டமணி வீட்டுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார். இதற்கு காரணம் கவுண்டமணியின் ரசிகர்களை தன்பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காகவே தவெக தலைவர் விஜய் வந்து போனார்.. ஆனால், இளம் நடிகர்கள் யாருமே கவுண்டமணி வீட்டுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை.

உடைந்து போய்விட்டார்

நானும், இயக்குனர் சுந்தர்ராஜனும் கவுண்டமணி வீட்டுக்கு அஞ்சலி செலுத்த சென்றோம்.. கவுண்டமணி உடைஞ்சு போயிருந்தார்.. முகமே துவண்டு காணப்பட்டது.. இறந்த மனைவியின் உடலுக்கு தாலி கட்டும்போது குமுறிவிட்டார்.. எந்த சூழலிலும் காமெடி கிங்காக , கலகலப்பாக வலம்வந்த கவுண்டமணி இப்போது சோர்வாக உள்ளார்.

இத்தனை காலம் மனைவி சாந்திக்கு உடல்நலம் பாதித்து இருந்துள்ளது. இதை அவர் வெளியே சொல்லவில்லை.. தூக்கத்திலேயே சாந்தி உயிர் பிரிந்துள்ளது. இந்த துயரத்திலிருந்து மீண்டு, கவலைகளை மறந்து கவுண்டமணி சந்தோஷமாக வாழ வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+