Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீ ராமனுக்கு பாயசம் ஊட்டி ஆனந்த கண்ணீர் விடும் சிறுவன் அனுமன்.. ஆஹா... மெச்சும் பக்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் ஜெய் அனுமான் சீரியலில் அனுமன் ஸ்ரீ ராமன் மீது வைத்திருக்கும் பக்தியை அமுதமாக பருகித் தெரிந்து கொள்ளும் அளவுக்கு மிக அற்புதமாக மெகா சீரியலாக்கி காவிய விருந்து படைத்திருக்கிறார்கள்.

சுமேருவில் அனுமன் வீட்டில் அனுதினமும் திருமாலை வைத்து பூஜை செய்து வரும் முனிவர் அன்றும் பூஜை செய்ய வருகிறார். திரை விலகிய நேரத்தில் சிறுவன் அனுமன் என் பிரபு ஸ்ரீ ராமர் சிலை அல்லவா இருக்கிறது என்று சொல்கிறான்.

இதை கேட்டு கோபம் கொண்ட முனிவர், என்ன தைரியம் உனக்கு, திருமால் சிலைக்கு பூஜை செய்து வரும் என்னையே ஏமாற்றுகிறாயா என்று கேட்கிறார். இல்லை முனிவரே.. நான் ஏமாற்றவில்லை. உள்ளே என் பிரபுவின் சிலையைத்தான் நான் கண்டேன் என்று சொல்கிறான்.

ஸ்ரீ ராமர் சிலை

ஸ்ரீ ராமர் சிலை

இரு அனுமன் உனக்கு பாடம் புகட்டுகிறேன்.. இப்போதே திரையை விலக்கி உனக்கு காட்டுகிறேன் என்று சொல்லி திரையை அகற்ற மெய் சிலிர்க்கும் காட்சி. அங்கு இருப்பது ஸ்ரீ ராமர் சிலையாக இருக்கிறது.

இந்த அனுமன்

இந்த அனுமன்

முனிவர் என்ன விந்தை இது என்று வியந்து போகிறார். ஒரு நாள் சிலைக்கு பூஜை செய்ய முடியாமல் முனிவர் தவிக்க, பிரபுவின் சிலைக்கு நான் பூஜை செய்கிறேன் முனிவரே.. நீங்கள் செய்யும் மந்திரத்தை நான் இத்தனை நாட்களில் அறிந்து வைத்துள்ளேன்.. எனக்கு அனுமதி தாருங்கள் என்று அனுமன் வேண்ட முனிவரும் அனுமதி தருகிறார்.

ஸ்ரீ ராமருக்கு பிரசாதம்

ஸ்ரீ ராமருக்கு பிரசாதம்

முகர்ந்து பார்க்கிறார், பாயசம் மணம் ஸ்ரீ ராமரின் கையில் வீசுகிறது..ஆமாம்.. அனுமன் நீ சொல்வது உண்மைதான் என்று முனிவர் சொல்கிறார். தூய தமிழில் பேசுவது, பக்தியை மெச்சுக்குவது என்று இந்த சீரியல் அனைவரின் மனதையும் கவர்ந்து இருக்கிறது.

தவறுதான்

தவறுதான்

சிறுவன் அனுமன் தன் பிரபு வந்து பிரசாதத்தை சாப்பிடவில்லையே என்று கவலை கொள்கிறான். பிரபு, சிறுவனான நான் பூஜை செய்ய விரும்பியது தவறுதான் என்னை மன்னியுங்கள்... ஆனால், பிரபு உங்களுக்கு பிடித்த பாயசத்தை உண்டு மகிழுங்கள். இல்லை என்றால் என் மனம் தாங்காது என்று கண்ணீர் வடிக்கிறான்.

பாதம் தொட்டு

பாதம் தொட்டு

அப்போதும் ராமர் பிரசாதத்தை ஏற்கவில்லை என்று குனிந்து ஸ்ரீ ராமரின் பாதம் தொட்டு, கண்ணீர் விடுகிறான். என் பக்தியில் ஏதேனும் குறை இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் பிரபு என்று அழுகிறான்.

எனக்கு பாயசம்

எனக்கு பாயசம்

நிஜமாக ஸ்ரீராமர் காட்சி தருகிறார்.அனுமன் தன் பிரபுவையே பார்த்து கண்ணீருடன் நிற்க, என்ன அனுமன் எனக்கு பாயசம் தர மாட்டாயா என்று கேட்கிறார். என்னை மன்னியுங்கள் பிரபு.. தங்களை பார்த்ததில் நான் என்னையே மறந்துவிட்டேன் என்று, பாயசத்தை எடுத்து சாப்பிடுங்கள் என்கிறான்.

ஊட்டிவிடு அனுமன்

ஊட்டிவிடு அனுமன்

ஸ்ரீ ராமரும் பாயசத்தை தன் கையால் எடுத்து சாப்பிடுகிறார். பின்னர் நீயே எனக்கு ஊட்டிவிடு அனுமன் என்று கூற, அனுமன் ஆனந்த கண்ணீருடன் தன் பிரபுவுக்கு ஊட்டி விடுகிறான். ஸ்ரீ ராமர் சாப்பிட சாப்பிட அனுமன் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தோடுகிறது. என்னை முழுவதுமாக சரணடைந்தவர்களின் பிரசாதத்தை நான் ஒரு போதும் மறுப்பதில்லை அனுமன் என்று ராமர் கூறுகிறாரே.

பொய் சொல்கிறாய்.

பொய் சொல்கிறாய்.

முனிவர் வந்து, அனுமன் என்ன ஸ்ரீ ராமனுக்கு வைத்த பாயசத்தை நீ சாப்பிட்டு விட்டாயா என்று கேட்க, இல்லை முனிவரே என் பிரபுதான் சாப்பிட்டார் என்று கூறுகிறான். என்ன பொய் சொல்கிறாய்.. கேசரி உன் பிள்ளையை இப்படித்தான் நீதி, தர்மம் தெரியாமல் வளர்த்து இருக்கிறாயா என்று கேட்கிறார்.

சத்தியம், தர்மம்

சத்தியம், தர்மம்

அனுமன் பொய் சொல்ல மாட்டான் முனிவரே.. அவன் நீதி, சத்தியம், தர்மம் தவறாது நடப்பவன், நேர்மையை மட்டுமே கடைப்பிடிப்பவன் என்று தாய் அஞ்சனை கூறுகிறாள். முனிவரே இந்த அனுமன் தாய் சொல் கேட்டு வளர்ந்தவன். என் தாய் எனக்கு சத்தியத்தையும், தர்மத்தையும் போதித்து வளர்த்தவர். நான் பொய் சொல்ல மாட்டேன்.

ஒரு வாய்

ஒரு வாய்

முதலில் பிரபுவே தனது கையால் எடுத்து ஒரு வாய் சாப்பிட்டார், பின்னர் என்னை ஊட்டிவிடுமாறு கூறினார் என்று அனுமன் சொல்ல, இத்தனை நாள் பூஜை செய்த எனக்கு காட்சி தராத ஸ்ரீ ராமன் உனக்கு காட்சி தந்தாரா.. அப்படி என்றால் என் பக்தியை விட உன் பக்தி சிறந்ததா என்ற முனிவர், பிரபு சாப்பிட்டு இருந்தால் அவர் கையில் வாசம் வரும் அல்லவா இரு அவரது கையை முகர்ந்து பார்க்கிறேன் என்று சொல்கிறார்.

ஸ்ரீ ராமரின் கையில்

ஸ்ரீ ராமரின் கையில்

முகர்ந்து பார்க்கிறார், பாயசம் மணம் ஸ்ரீ ராமரின் கையில் வீசுகிறது..ஆமாம்.. அனுமன் நீ சொல்வது உண்மைதான் என்று முனிவர் சொல்கிறார். தூய தமிழில் பேசுவது, பக்தியை மெசசுக்குவது என்று இந்த சீரியல் அனைவரின் மனதையும் கவர்ந்து இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+