கேரவனில் கேவலங்கள்.. யாரந்த பிரபல விஐபி? மொட்டை ராஜேந்திரனுமா? "காகித மலரான" நந்தவனம்: பிரபலம் பளிச்
சென்னை: 80, 90 காலகட்டங்களில் இருந்த சினிமா உலகம், இப்போது முழுமையாக மாறிவிட்டது, அதிலும் கேரவன் கலாச்சாரம் வந்த பிறகு, நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் என ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாமல் போய்விட்டது என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு வருத்தம் தெரிவித்துள்ளார்.
AramNaadu யூடியூப் சேனலுக்கு பாலாஜி பிரபு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "15 வருடத்துக்கு முன்பு கேரவன் கலாச்சாரம் வந்தது. இந்த கலாச்சாரம் வந்ததிலிருந்தே சினிமாவிலிருந்த அழகு காணாமல் போய்விட்டது.

ஏவிஎம் ஸ்டுடியோவில் 8 ஃப்ளோர்கள் இருக்கும்.. அதற்குள் ஒரு கார்டன் இருக்கும், பிள்ளையார் கோவில் இருக்கும், ஃபவுன்டெயினுடன் தண்ணீர் ஊற்றுவது போல செட்டப் இருக்கும். சம்சாரம் அது மின்சாரம் படம் ஷூட்டிங் எடுத்தது போல ஒரு வீடு செட்டப் இருக்கும். இதுபோல எல்லாமே ஸ்டுடியோவுக்குள்ளேயே நிறைய அம்சங்கள் இருக்கும். இதனால், தயாரிப்பாளர்களும் ஸ்டுடியோவை விட்டு வெளியே போக மாட்டார்கள்.
ஷூட்டிங்குகள்: காரணம், பொதுமக்களின் இடையூறுகள் இல்லாமல் ஷூட்டிங் எடுக்க முடியும். ஒரு செட்டில், விஜயகாந்த், இன்னொரு செட்டில் ரஜினி, மற்றொரு செட்டில் ராதிகா இப்படி வேற வேற ஃபுளோரில், வேற வேற படத்துக்கு ஷூட்டிங் நடக்கும். அனைவருக்குமே அரைமணி நேரம் ஃப்ரீ டைம் கிடைக்கும். இதுபோன்ற நேரத்தில், ஸ்டுடியோவுக்குள்ளேயே நிழலில் சேர்களை போட்டுக் கொண்டு, நடிகர், நடிகைகள் பேசி கொண்டிருப்பார்கள்.
வேறு வேறு படத்தில் நடித்து கொண்டிருந்தாலும், ஃப்ரீ நேரத்தில் அனைவரும் ஒன்றுசேர்ந்து சந்தோஷமாக பேசுவார்கள்.. வீட்டில் உள்ளவர்களை பற்றி அக்கறையுடன் ஒருவரையொருவர் விசாரித்து கொள்வார்கள். சிவாஜி சார் வீட்டிலிருந்து சாப்பாடு வந்தால், 20 பேருக்கு சேர்த்துதான் வரும். எல்லாவகையான அசைவ உணவும் அதில் இருக்கும். அதனால், வேறு செட்டில் உள்ள நடிகர்கள்கூட, சிவாஜி வீட்டு சாப்பாட்டுக்காக இன்னொரு செட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு போவார்கள்.
சந்தோஷம்: சாப்பிட்டு முடித்ததும் அனைவரும் சேர்ந்து சீட்டு விளையாடுவார்கள், செஸ் விளையாடுவார்கள்.. சாயங்கால நேரமும் அரை மணி நேர பிரேக்கில், சுண்டல் சாப்பிடுவார்கள்.. அந்த ஸ்டுடியோவே சுற்றிலும் மரம், செடிகள் நிறைந்து, குளுகுளுவென இருக்கும்.. 90கள் வரையிலும் ஸ்டுடியோக்கள் இப்படிதான் இருந்தன.
ஆனால், இப்போது ஏவிஎம் ஸ்டுடியோ, பில்டிங்காக மாறிவிட்டது. பார்க்கவே கஷ்டமா இருக்கு. ஸ்டுடியோவையே காணோம்.. சின்ன சின்ன ரிக்கார்டிங் தியேட்டர்தான் இருக்கு. மற்றதெல்லாம் மல்ட்டி ஸ்டோர் பில்டிங்காகிவிட்டன. ஒரு கூட்டுக்குடும்பம் சிதைந்து போன மாதிரி இருக்கு. தனிக்குடித்தனம் போல கேரவன் வந்துவிட்டது. இதனால் யாரும் யாருடனும் பேசுவதில்லை. ஷூட்டிங் நடிக்கும்போதுகூட, தங்களது சக நடிகர்களை பார்க்க முடிவதில்லை.. தங்களது ஷாட் முடிந்ததுமே கேரவனுக்கு போய்விடுகிறார்கள்.
சிவாஜி சார்: எப்போதுமே தன்னுடைய ஷாட் நடித்து முடித்ததுமே, அடுத்தவர் நடிப்பையும் அங்கேயே சேர் போட்டு உட்கார்ந்து கவனிப்பார் சிவாஜி சார்.. அவர்கள் எப்படி நடிக்கிறார்கள்? அவர்களுக்கு எந்தமாதிரியாக தாம் ரியாக்ட் செய்து நடிக்கவேண்டும் என்பதற்காக, அங்கேயே உட்கார்ந்து கவனிப்பார்.
ஆனால், இப்போதுள்ளவர்கள், தங்கள் ஷாட் முடிந்து கேரவனுக்கு வந்துவிடுகிறார்கள்.. அடுத்த ஷாட் ரெடி என்றால், கேரவனுக்கு வெளியே அசிஸ்டென்ட் டைரக்டர் போய் காத்திருக்கணும். அந்த நடிகர் எப்போது கேரவனை விட்டு வருவார் என்று இவர்களும் அங்கேயே நின்றுகொண்டிருப்பார்கள்.
மொட்டை ராஜேந்திரன்: மொட்டை ராஜேந்திரன்கூட கேரவன் கேட்கிறாராம். இவருக்கு ஒன்றரை லட்சம் சம்பளம் வேற.. இதைத்தவிர இவருடன் வரும் ஆட்களுக்கும் 20 ஆயிரம் ரூபாய் தர வேண்டுமாம். இவரென்ன லட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரனா? சினிமா எங்கே போகுதுன்னே தெரியல. ஹீரோவுக்கு ஒரு கேரவன், ஹீரோயினுக்கு ஒரு கேரவன் கேட்டதுபோக, இப்ப எல்லாருக்குமே கேரவன் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.
அவுட்டோர் ஷூட்டிங்கில் பாத்ரூம் வசதி இல்லாமல் போகும்போது, பெண் கலைஞர்களுக்கு கேரவன் ஒதுக்கலாம். ஆனால், எல்லாருக்கும் கேரவன் கேட்டால் எப்படி? ஒருத்தருக்கொருத்தர் தொடர்பே இல்லாமல் போய்விட்டார்கள். தான் நடித்துமுடித்துவிடால், அடுத்தவர் என்ன நடிக்கிறார்கள்? அவர்களுக்கு நாம் எப்படி ரியாக்ட செய்ய வேண்டும் என்பதற்காக, சிவாஜி உட்கார்ந்து கவனிப்பார்.
காகித பூக்கள்: சுருக்கமாக சொல்லப்போனால், ஒரு மலர்த்தோட்டத்தில் பலவகையான மலர்கள் இருந்தன. பலவிதமான வாசனைகள் மணம் பரப்பி கொண்டிருந்தன. ஆனால், இப்போது வீட்டிற்குள்ளிருக்கும் "காகிதப் பூக்களாகி"விட்டன கேரவன்கள்" என்று தெரிவித்துள்ளார் பாலாஜி பிரபு.












Click it and Unblock the Notifications