பி. சுசீலா பேச பேச.. விழுந்து விழுந்து சிரித்த துர்கா.. சுசீலா "சொல்ல சொல்ல" குஷியில் துள்ளிய அரங்கம்
சென்னை: பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு 89 வயதாகிறது.. நைட்டிங்கேல் என்று தமிழக மக்களால் செல்லமாக அழைக்கப்படுபவர்.. 1950-கள் முதல் சினிமாவில் பயணத்தை தொடங்கி, சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக 17,000+ பாடல்களை பாடியுள்ளார். இந்திய மொழிகளில் அதிக பாடல்களை பாடியவராக அறியப்படுகிறார். சிறுநீரகக் கோளாறு மற்றும் வயது முதிர்வு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுசீலா உடல்நலம் தேறி வீட்டுக்கு வந்தார். இப்போது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியதுடன், பாட்டும் பாடி அசத்தியிருக்கிறார். இதுதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, "மக்கள் முதல்வரின் மனிதநேய விழா" என்ற தலைப்பில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் "சூரிய மகள் 2025" என்ற தலைப்பில் மகளிருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.

நெகிழ்ந்து பேசிய சத்யராஜ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையிலும், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஏற்பாட்டிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சூரிய மகள் விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், நடிகர்கள் சத்யராஜ் மற்றும் பிரபு ஆகியோர் வழங்கினர்.
இந்த விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், "மு.க.ஸ்டாலின் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் சொல்லலாம். முதுகெலும்புள்ள களப்போராளி ஸ்டாலின் என்றும் சொல்லலாம். அவரது முதுகெலும்பு வெறும் எலும்புகளால் ஆனது அல்ல. ஏனென்றால் மிசா சட்டத்தில் சிறையில் பூட்ஸ் காலில் மிதிபட்டு, தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கையாலும், பேரறிஞர் அண்ணாவின் எதையும் தாங்கும் இதயத்தாலும், கலைஞரின் நெஞ்சுக்கு நீதியாலும் ஆனது" என்றார்.
பாட்டுக்கு பாட்டு
விழாவில் பேசிய பி.சுசீலா, "தமிழ் மக்கள் மிகவும் நல்லவர்கள்.. ஏதாவது ஒன்றென்றால், உடனே ஒருவருக்கு கஷ்டம் என்றால் ஓடிவந்து உதவி செய்வார்கள்.. அதற்கு உதாரணமே நான்தான்.. எனக்கு தமிழ்நாட்டில் தங்க இடம் தந்தார்கள்.. பாட்டு தந்தாங்க.. பரிசுகள் தந்தாங்க.. அங்கீகாரம் தந்தாங்க.. நான் தமிழ் பேச காரணமான ஏவிஎம் செட்டியாரை நான் மறக்கவே முடியாது.
என்னை உங்களில் ஒருத்தியாக நினைத்தார்கள், விருதுகள் கொடுத்தார்கள். விருதுகள் பெறுவதிலும் பெண்கள் சாதிக்கிறார்கள். ஆண் பெண் இருவரும் சமமாக இருக்கவேண்டும். பெண்கள் ஒன்றும் பண்ணமுடியாதா? பெண்கள் சாதிக்காத இடமே இல்லை. பெண்களுக்கு பின்னால் ஆண்கள் இருந்தால் ஒரு தைரியம் வந்து விடும். பெண்களுக்கு ஊக்கமும் தைரியமும் வந்து விட்டது" என்றார்.
மைக்கை புடுங்கறாங்க பாருங்க
சுசிலாவுக்கு பின்புறம் நின்றிருந்த பெண் ஒருவர், சுசிலா பேசிக் கொண்டிருக்கும்போதே மைக்கை வாங்க முயற்சித்தார்.. அதற்கு சுசிலா, "நான் ஏதாவது தப்பா உளறிடுவேன்னு நினைச்சு, மைக்கை புடுங்கறாங்க, நான் பேசினது போதும்னு சொல்றாங்க" என்று சொன்னதுமே, பக்கத்தில் உட்கார்ந்திருந்த துர்கா ஸ்டாலின் உட்பட அனைவருமே சிரித்துவிட்டார்கள்.
அப்போது அரங்கில் இருந்தவர்கள் "இரண்டு வரி பாட்டு பாடுங்கம்மா" என்று கேட்டார்கள்.. அதற்கு சுசிலா, "இரண்டு வரியில் பாடல் இல்லையேப்பா என கிண்டலாக கூறினார்.. பிறகு, "சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா...சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா... என்ற பாடலை சுசிலா பாடப்பாட அரங்கத்தில் எழுந்த கைதட்டல் விண்ணை பிளந்தது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications