உடையுது ரூல்ஸ்.. இளையராஜாவுக்கு ரூ.5 கோடி எப்படி? கல்யாண வீட்டில பாடற பாட்டுக்கும் ராயல்டி?: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "7 கோடி ரூபாய் சம்பளம் தந்து இசையமைப்பாளரை நியமித்தும், அவரது பாடல்கள் ஹிட் ஆகாமல், எங்கள் பாட்டை எடுத்துப் போடுகிறீர்கள். அதற்கு ரசிகர்கள் கைதட்டுகிறார்கள்; விசிலடிக்கிறார்கள்.. அதற்கு எங்களுக்கு கூலி தர வேண்டாமா" என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் பேசியிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இளையராஜா ராயல்டி கேட்ட விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.

BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி தந்துள்ளார்.. அதில், "ராயல்டி விவகாரத்தில் இளையராஜாவுக்கு மக்களில் சிலர் ஆதரவு தருவதாக சொல்கிறீர்கள்.. ஆனால், மக்களுக்கு சட்ட அறிவு பற்றி எந்த விளக்கமும் தெரியாது.. முழுக்க முழுக்க அந்த படத்தின் தயாரிப்பாளருக்கே அனைத்து உரிமையும் உள்ளது..

Television Ilayaraja Rajini

பதிவுத்திருமணம் - கணவன் மனைவி

தயாரிப்பாளர்தான், ஹீரோ, ஹீரோயின் உட்பட அனைவருக்குமான சம்பளத்தையும் தருகிறார்.. இதன்மூலம் ஒட்டுமொத்த உரிமையும் தயாரிப்பாளருக்கே வந்து சேர்கிறது. இதில் யாருமே மீண்டும் உரிமை கோர முடியாது.

உதாரணத்துக்கு கணவனும், மனைவியும் பதிவுத்திருமணம் செய்வது சட்டப்படி கடமையாகும்.. ஆனால், ஒரு தம்பதி பதிவு திருமணம் செய்யாமல், 15 வருடங்கள் கழித்து பதிவு திருமணம் செய்தாலும், அதே தேதியில் பதிவு செய்ய முடியாது. அதுமட்டுமல்ல, பதிவு திருமணம் செய்த நாளிலிருந்துதான், அந்த திருமணமும் சட்டப்படி செல்லுபடியாகும்.. அப்படியானால் அதற்கு முன்பு இந்த தம்பதி வாழ்ந்தது சட்டவிரோத திருமணம் ஆகும்.

சட்டத்திற்கு பொருந்தாது

இதுவே இசையமைப்பாளர்களுக்கும் பொருந்தும் சட்டமாகும்.. எனக்கு தெரிந்து தயாரிப்பாளர்களுக்குதான், அவர்களின் படங்களின் ராயல்டி வந்து கொண்டிருக்கறது. இசையமைப்பாளர், ஒப்பந்தம் செய்யும்போதே, பாடல்களுக்கான உரிமையை, தயாரிப்பாளரிடம்தான் வாங்கணும். தயாரிப்பாளரிடம் வாங்காமல் விட்டுவிட்டு, 15 வருடம் கழித்து, தயாரிப்பாளர் வாங்கி கொண்டிருக்கும் ராயல்டி தொகையை , தனக்கு கொடு என்று கேட்டால் எப்படி? இது சட்டத்திற்கு பொருந்தாது,

இளையராஜாவை பொறுத்தவரை, அவரது பாடல்களை பட்டிதொட்டியெல்லாம் கேட்கிறார்கள்.. திருமண வீடுகள் முதல் ஒளிபரப்பாகிறது.. அப்படியானால் கல்யாண வீட்டில் ஸ்பீக்கரில் பாட்டு போடுவதற்கெல்லாம் ராயல்டி கேட்க முடியுமா?

ராயல்டி திருப்பி தருவார்களா?

தயாரிப்பாளருக்கு படம் எடுத்து பல கோடி நஷ்டமடைந்தால், இசையமைப்பாளர்கள் தங்களது ராயல்டியை திருப்பி தந்துவிடுவார்களா? இதுவரை எந்த இசையமைப்பாளராவது, இசையமைத்து 5 கோடி நஷ்மடைந்தேன், என்று புலம்பியிருக்கிறார்களா?

அனைவருக்கும் பணத்தை தந்துவிட்டு, தயாரிப்பாளர்களுக்கான உரிமையையும் இழந்து நிற்கும் கொடுமை இந்த தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. மற்றபடி நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள் எல்லாருமே சம்பளம் பெறுகிறார்கள்.. இசையமைப்பாளர்கள் 5 கோடி, 7 கோடி வாங்குறாங்க.. ரஜினிக்கு 200 கோடி லைகாவில் டாக்ஸ் கட்டியே தந்துவிடுகிறார்கள்.. விஜய், 200 கோடி, கமல் 150 கோடி.. ஆனால், இந்த சம்பளம் பெறுவதற்கு காரணமாக மக்களுக்கு மட்டும் ஒன்றுமே செய்ய மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+