பல நாள் கனவு நிறைவேறியது.. அம்மா ஆசையை நிறைவேற்றி விட்டேன்! இந்திரஜா நெகிழ்ச்சி பதிவு
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் ஒரே மகளான இந்திரஜா சோஷியல் மீடியா பக்கங்களில் தன்னுடைய பலநாள் கனவு நிறைவேறிவிட்டது என்று தன்னுடைய அம்மாவோடு எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து ஒரு சிலர் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் ரோபோ சங்கரும் ஒருவர் ஆரம்பத்தில் சின்ன திரையில் வாய்ப்புக்காக அதிகமாக கஷ்டப்பட்ட ரோபோ சங்கர் மேடை நிகழ்ச்சிகளில் உடம்பெல்லாம் வண்ணம் பூசிக்கொண்டு ரோபோ போல வேஷம் போட்டு காமெடி செய்திருந்தார்.

அதற்குப் பிறகு அவருக்கு விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் கெஸ்ட் ஆகவும் கலந்து கொண்டார். அதற்கு பிறகு தான் அவருக்கு வெள்ளி திரையில் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலரோடு காமெடி கேரக்டரில் நடித்து பிரபலமடைந்தார்.

இப்போது கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதே நேரத்தில் ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்ற மகள் இருக்கிறார். இந்திரஜாவும் பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மாவாக சினிமாவில் பிரபலம் அடைந்தார். அதுபோல டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருந்தார். அவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவரோடு சேர்ந்து விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் கடந்து இருந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருந்ததால் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் இந்திரஜா மற்றும் கார்த்திக் தம்பதிக்கு கடந்த மாதத்தில்தான் ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகு அவர் நடித்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

அதுபோல சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா தன்னுடைய குடும்பத்தோடு எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் இவர் பட்டப்படிப்பு முடித்து பட்டம் பெற்று இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திராஜா பகிர்ந்து இருக்கிறார்.

அதற்கு, "ஆமாம் இது என் கனவு நாள்.. வணிகவியல் இளங்கலையில் பட்டப்படிப்பு நாள். அம்மாவின் கனவு நனவாகியது. என் கனவையும் விருப்பத்தையும் எப்போதும் நினைவாக்கியதற்கு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நன்றி. நீங்கள் இல்லாமல் நான் ஒன்றும் இல்லை. எப்போதும் என் பின்னால் நின்று ஆதரவு அளித்ததற்கு நன்றி அம்மா என்று அதில் பகிர்ந்து இருக்கிறார். ஒரு கையில் பட்டப்படிப்பு சான்றிதழையும் ஒரு கையில் குழந்தையும் வைத்துக்கொண்டு இந்திரஜா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications