For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்சன் மண்டேலா தன்னை சிறையில் அடைத்தபோது புத்தகம்தான் கேட்டார்!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்ற போது சில நினைவுகளை பகிர்ந்து கொண்டார் எழுத்தாளர் இந்திரா சவுந்திரராஜன்.

அப்போது, சிறையில் அடைத்தபோது சிறப்பாக என்ன வசதி வேண்டும் என்று கேட்கையில், படிக்க புத்தகம் மட்டும் வேண்டும் என்று கேட்டாராம் நெல்சன் மண்டேலா என்று கூறினார் இந்திரா சவுந்திரராஜன்.

வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி கூறுகையில் இப்படி கூறினார் அவர். இப்போது உள்ள இளைய தலைமுறையினர் வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.

பரிசு நாவல்

பரிசு நாவல்

உங்கள் கதைகள் பெரும்பாலும் ஹோஸ்ட் அதாவது இயற்கையான அமானுஷ்ய சக்தியை ஒன்றிய ஒரு மைய கதையை ஒட்டியதாக இருக்கிறதே என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கேட்டபோது, எனது பரிசு பெற்ற முதல் இரண்டு நாவல்கள் அப்படிப்பட்ட கதைகள் அல்ல. அதாவது என் பெயர் ரெங்கநாயகி போன்ற நாவல்கள்,.

விடாது கருப்பு

விடாது கருப்பு

ஆனால், அப்படிப்பட்ட சக்தி இருப்பதை உணர்ந்தவர்கள் அதிகம். அவர்களை வைத்துதான் அந்த கதைகளை எழுதுகிறேன். சிலர் அதை சக்தி என்கிறார்கள். சிலர் அதை சிவம், ஏசு, அல்லாஹ் இப்படி ஏற்றுக் கொள்கிறார்கள். சிலர் அதை இதற்கும் மேலான சக்தியாக ஏற்றுக் கொள்கிறார்கள். கதைக்கு ஏற்ப அதை நான் வடிவமைக்கிறேன்.அப்படித்தான் விடாது கருப்பு விட்டது கருப்பு என்று கதை எழுதினேன் என்று சொன்னார்.

சமுதாயத்தை நினைப்பதில்லை

சமுதாயத்தை நினைப்பதில்லை

சித்தர்கள் சமுதாயத்தை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. அவர்கள் ஒரு நாள் உடை இல்லாமல் இருப்பார்கள் அழுக்காக இருப்பார்கள். மரத்தின் மீது இருப்பார்கள்,. தரையில் கிடப்பார்கள். சாக்கடையின் ஓரத்தில் படுத்து கிடப்பார்கள். அவர்களுக்கு சமூகத்தை பற்றிய கவலை இருப்பதில்லை.

சுற்றி இருப்பவர்

சுற்றி இருப்பவர்

என்னை சுற்றி இருப்பவர்களிடம் இருந்தும்,. என்னை சுற்றி நடக்கும் விஷயங்களில் இருந்தும் கதையின் கருவை எடுக்கிறேன்.சமீபத்தில் ஒரு சிறு கதையின் கருவை ரயிலில் ஒரு போர்ட்டரில் ஆரம்பித்து ஒரு குடும்பம் போன் பேசுவது வரை எழுதி இருக்கிறேன்.

இப்போது இல்லை

இப்போது இல்லை

வாசிக்கும் பழக்கம் இப்போது அவ்வளவாக இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். மக்கள் தொகை பெருகி வரும் அளவுக்கு புத்தக விற்பனை பெருகவில்லை. வாசிக்கும் பழக்கம் தாய் மொழியில் இருக்க வேண்டும். மேற்கு வங்கம் கேரளாவில் இருக்கும் அளவுக்கு மற்ற மாநிலங்களில் இல்லை என்று இந்திரா சவுந்தரராஜன் சொன்னார்.

கே.பி.சார்

கே.பி.சார்

டைம் மேனேஜ் மென்ட் என்பதை இயக்குநர் சிகரம் கே.பி.சாரிடம் கற்றுக் கொண்டேன். அவருக்கு அன்றைய வேலைகளை அன்றே செய்து முடிக்க வேண்டும் . இல்லாவிட்டால் அன்று இரவு நிம்மதியாக தூங்க முடியாது என்று சொல்வார். அவரே தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவது போன்ற வேலைகளையும் செய்வார். இது போன்ற டைம் மேனேஜ்மென்ட் கே.பி ஸாரிடம்தான் கற்றுக் கொண்டேன் என்று கூறினார்.

English summary
Indira Soundrarajan, writer, shared some memories while participating as a special guest at Sun TV's 'Hello Tamil' event.Indira Soundararajan said that Nelson Mandela had asked him to read a book and asked for better facilities while in jail.Speaking about the importance of reading, he said: He also expressed regret that the younger generation was not aware of the importance of reading.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X