இந்திய சினிமாவிலேயே அதிகம் படித்த நடிகர் சார்லிதான்! அப்படி என்ன படித்திருக்கிறார் தெரியுமா?
சென்னை: இந்திய சினிமாவிலேயே அதிகம் படித்த நடிகர் என்றால் அது சார்லிதான் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? அப்படி அவர் என்ன படித்திருக்கிறார் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். கல்வி என்பதுதான் எப்போதுமே அழியாத சொத்து என்பதை அவர் சொல்லாமல் சொல்லியுள்ளார்.

இயக்குநர் கே.பாலசந்தரின் பொய்க்கால் குதிரை என்ற திரைப்படம் மூலம் 1983 ஆம் ஆண்டில் அறிமுகமானவர் நடிகர் சார்லி. இவர் குணச்சித்திரம் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இவருக்கு தற்போது 65 வயதாகிறது.
இவர் தனது 59 ஆவது வயதில் "தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை" என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் மாணவர்களுக்கு முனைவர் மற்றும் கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார்.
அப்போதுதான் சார்லிக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட வளர்ச்சிக்கு நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் சார்லி எம்.பில் பட்டம் பெற்றிருந்தார்.
வேல்முருகன் தங்கசாமி மனோகர் என்பதுதான் சார்லியின் இயற்பெயர். இவர் தொழில்ரீதியாக சார்லி என அழைக்கப்படுகிறார். இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர். அங்கு ஜிவிஎன் கல்லூரியில் வேதியியல் பட்டப்படிப்பை முடித்தார்.
இவர் 1000- க்கும் மேற்பட்ட நாடகங்களை நிகழ்த்தினார். இதுவரை 800-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் காமெடியனாகவும் குணச்சித்திர நடிகனாகவும் நடித்துள்ளார். ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் நினைவாக இவருக்கு சார்லி என பெயர் வைக்கப்பட்டது. இவர் M.A., M.Phil, Ph.D படித்துள்ளார். இதன் மூலம் இந்திய சினிமாவிலேயே அதிகம் படித்த நடிகர் என்ற பெருமையை சார்லி பெற்றுள்ளார்.
ஒரு பேட்டியில் சார்லி கூறுகையில் நானும் யோகிபாபுவும் கூர்கா படத்தில் நடித்ததை பார்த்துவிட்டு இது போல் படங்களில் நடிங்க என்கிறார்கள். நான் நடிக்க மாட்டேன் என சொல்லவில்லையே! கடவுள் என்ன கொடுக்கிறாரோ அதை நான் செய்கிறேன் என கூறியிருந்தார்.
அவர் மேலும் கூறுகையில், அப்போதெல்லாம் என்னுடைய கதாபாத்திரத்தை எடுத்துவிட்டால் அந்த படத்திற்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால் பிழைப்புக்காக அந்த மாதிரி படங்கள் எல்லாம் செய்திருக்கிறேன். இந்த ரோல் இல்லன்ன அந்த படம் நகராது என்பது போன்ற கதாபாத்திரங்கள் எனக்கு இப்போதுதான் வருகிறது. அதனால்தான் நான் காமெடியிலிருந்து குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தேன் என தெரிவித்திருந்தார்.
பிரண்ட்ஸ் படத்தில் சார்லி நடித்திருந்தார். அந்த படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தது தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்திருந்தார். வடிவேலுடன் கோபால் கதாபாத்திரத்தில் சார்லி நடித்திருந்தது ஹிட்டடித்தது. இந்த படம் குறித்து சார்லி கூறுகையில், பிரண்ட்ஸ் படம் மலையாளத்தில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.
ஒரிஜினல் வெர்ஷனான மலையாளத்தில் சார்லி கதாபாத்திரமே இல்லையாம். ஆனால் சார்லிக்காக தமிழில் இயக்குநர் சித்திக் அந்த கேரக்டரை இணைத்துள்ளார். படத்தின் ஷூட்டிங்கின் போது இது சரியா, நாம் செய்வது சரிதானா, என விஜய் அடிக்கடி கேட்பார். அதையே நானும் அடிக்கடி கேட்டுக் கொண்டு இருப்பேன் என சார்லி தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications