ஏழைங்கன்னா எப்பவும் பணக்காரங்க ஆடற ஆட்டத்துக்கு பலிகடாவா!
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியலில் பணக்கார வாரிசு ஆனந்தியை, இவதான் தங்கள் அனுபவிக்கும் சொத்துக்கு வாரிசுன்னு இன்னும் திரு குடும்பத்துக்கு தெரியலை.
திருவோட அப்பா கலிவரதனின் நண்பர் குடும்பமாக திருவின் மேல் ஆசைப்படும் அனன்யா குடும்பத்துக்கு மட்டும் தெரியுது.
ஆனந்தியை கல்யாணம் செய்துக்கிட்டதே திருவுக்கு மைண்ட்ல இல்லை. ஆனா, அவனோட வாரிசை ஆனந்தி தன் வயித்துல சுமக்கறா.

அடைக்கலம்
ஆனந்திக்கு ரவுடி பசங்களால ஆபத்துன்னு தன் வீட்டில் அடைக்கலம் தர்றான் திரு. எல்லா விதத்துலயும் ஆனந்தியை பாராட்டறான் திரு. அவளுக்கும் இந்த நேரத்தில் கணவனுடன் இருப்பது மிகவும் சந்தோஷமா இருக்கு..

துரத்திட
எப்படியாவது ஆனந்தியை வீட்டை விட்டு துரத்திடணும்னு கலிவரதனும் நண்பரின் மக்கள் அனன்யாவும் திட்டமிடறாங்க. அந்த சமயத்துல , ஆனந்தியைத் தேடி வரும் அவளது தம்பி முத்துவின் ஸ்கூல் பேக்கில் 10 லட்சம் ரூபாய் பணத்தை வச்சுடணும்னு அவங்க திட்டம்.

ஸ்கூல் பேக்
அதுபோலவே முத்து வர்றான், முத்துவை ஜூஸ் குடிக்க கிச்சனுக்கு அழைச்சுக்கிட்டு போறாங்க, திருவின் அம்மா.எல்லாரும் நைசாக நழுவிட, திரு ஏதோ போன் பேசிக்கிட்டே போயிடறான்.

ரூபாய்
உதவியாளர் பெருமாள், 10 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து, முத்துவின் புத்தகப் பையில் வச்சுடறார். அப்புறமென்ன பணத்தை காணோம், ஆனந்திதான் எடுத்து தம்பிகிட்ட குடுத்திருப்பான்னு எல்லாரும் சந்தேகப்படறாங்க.

பையை செக்
சரி, சந்தேகம் வந்துருச்சுல்ல,முத்து கொஞ்ச தூரம்தான் போயிருப்பான். அவன் பையை செக் பண்ணலாம் வாங்கன்னு சொல்றா ஆனந்தி.திரு மட்டும் மறுக்க, வேறு வழியில்லாம திரு காரில் எல்லாரும் போறாங்க.

பழி
முத்து பேக்கில் பணம் இல்லை, தலைகீழாக புரட்டினாலும் இல்லை. சரின்னு வீட்டுக்கு வர்றாங்க. திரு தன் தங்கை அனுவை கண்டிக்கிறான். யார் மேலயும் வீணா பழி போடாதீங்கன்னு.

பெருமாள் காரிலேயே
ஆனா, தன் தம்பியோட பையில் பெருமாள் பணம் வச்சதை பார்த்த ஆனந்தி, அந்த பணத்தை எடுத்து பெருமாள் காரிலேயே வச்சுடரா. இதையும் கடைசியில சொல்லி, யாரோ வேணும்னே பழி போட நினைக்கறீங்க திரு நான் இங்க இருக்கறது பிடிக்கலைன்னு ஆனந்தி சொல்ல, வெளியில பாதுகாப்பு இல்லைன்னு வீட்டுல கொண்டு வந்து ஆனந்தியை வச்சேன். இங்கேயும் இவங்களுக்கு பாதுகாப்பு இல்லேன்னா, இனிமே இவங்களுக்கு நானே பாதுகாப்பா இருப்பேன்னு சொல்லிட்டு போக எல்லாரும் அதிர்ச்சியில் இருக்காங்க.
யாருகிட்ட... ஏழைங்கன்னா எப்பவும் பணக்காரங்க ஆடற ஆட்டத்துக்கு பலிகடாவா என்ன...இந்த மாதிரி காட்சிகள் சீரியல் பார்ப்பவர்களுக்கு உற்சாகத்தை தரதா இருக்கு.












Click it and Unblock the Notifications